For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிருக்கு ஆபத்தான நோய்களை நீக்கும் வருத்தினி ஏகாதசி விரதம் - பலன் பெற்றவர்கள் யார் தெரியுமா

உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வருத்தினி ஏகாதசி அன்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தால் குணமாகும்.

Google Oneindia Tamil News

சென்னை: விரதங்களில் வருத்தினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம்.வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருத்தினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்பு ஒற்றுமை மேலோங்கும். இன்றைய தினம் ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படும் நாளில் பக்தர்கள் வருத்தினி ஏகாதசி அன்று முழு மத ஆர்வத்துடன் விரதம் மேற்கொண்டால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பவிஷ்ய புராணத்தில் வருத்தினி ஏகாதசி குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் யுதிஷ்டிரனுக்கு வருத்தினி ஏகாதசியின் பொருத்தத்தை பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார். எதிர்பாராத விபத்துக்கள் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் தொழில் வியாபாரங்களில் நஷ்டமடைந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மீண்டும் லாபங்களை பெறலாம் .

அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு! அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!

வருத்தினி ஏகாதசி அன்று ஒருவர் தானம் செய்ய முடிவு செய்தால், தானம் செய்பவரின் முன்னோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வருத்தினி ஏகாதசி அன்று ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது. பவிஷ்ய புராணத்தில் தானம் செய்யக்கூடிய பொருட்களின் விரிவான விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது. வருத்தினி ஏகாதசி அன்று முறையே குதிரை, யானை, நிலம், எள் தானம் செய்வது பக்தர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்து புராணங்களில், ஒருவரின் மகளைத் திருமணம் செய்து கொடுப்பது அல்லது கன்யாதானம் செய்வது மிகப்பெரிய தானம் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

வருதினி ஏகாதசி விரத மகிமை

வருதினி ஏகாதசி விரத மகிமை


வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்
பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர்

ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து வைகாசி தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள் என்று கேட்கிறார். அதற்கு பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தரும மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.

முக்தி பெற்ற மன்னர்கள்

முக்தி பெற்ற மன்னர்கள்


இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தி தொண்டை அடைகின்றனர். இந்த ஏகாதசி விரதத்தை சரியான முறையில் கடைபிடித்து மன்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள். இந்த ஏகாதசியை கடைப்பிடித்து முக்தி பெற்றனர்.
பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார்.

புண்ணியம் தரும் விரதம்

புண்ணியம் தரும் விரதம்

சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் 40 கிலோ தங்கத்தை தானமாக கொடுப்பதன் மூலம் அடையும் புண்ணியத்தை ஒருவர் சுலபமாக இந்த வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் அடைவார். மன்னர்களில் சிறந்தவனே, ஒரு குதிரையை தானமளிப்பதைவிட ஒரு யானையை தானம் அளிப்பது சிறந்தது. யானையை தானமளிப்பதைவிட நிலத்தை தானமளிப்பது சிறந்தது. நிலத்தை தானமளிப்பதைவிட எள் தானம் உயர்ந்தது எள் தானத்தைவிட பொன் தானம் உயர்ந்தது. பொன் தானத்தைவிட உணவு தானிய தானம் உயர்ந்தது.

உணவு தானியங்கள்

உணவு தானியங்கள்

உணவு தானிய தானத்தைவிட உயர்ந்த தானம் எதுவும் இல்லை. ஓ, மன்னர்களில் சிறந்தோனே, உணவு தனியங்களை தானமளிப் பதன் மூலம் ஒருவர் தன் முன்னோர்களையும், தேவர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் திருப்தி படுத்த முடியும். ஒருவர் தன் மகளை தாரைவார்த்து கொடுப்பது உணவு தானியங்களை தானமளிப்பதற்கு சமம் என கற்றறிந்த சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். உணவு தானிய தானத்தையும் பசுதானத்தையும் முழு முதற்கடவுளே சமபடுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து வகையான தானங்களை விட மற்றவர்களுக்கு ஞானத்தை அளிப்பதே மிக உயர்ந்ததாகும். வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதால் ஒருவர் எல்லா வித தானியங்களின் பலனையும் அடைவார்.

விரத நாளில் என்ன செய்யக்கூடாது

விரத நாளில் என்ன செய்யக்கூடாது

இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பவர் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல் மாமிசத்தை உண்ணுதல், கீரை தேன் போன்றவற்றை உண்ணுதல், மற்றவர்கள் சமைத்த உணவை ஏற்றுக்கொள்ளுதல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சூதாட்டம், உறக்கம், வெற்றிலை பாக்கை சுவைத்தல், மற்றவர்களை குறை சொல்வது, பாவப்பட்ட ஒருவருடன் பேசுவது, கோபம் கொள்வது, பொய் சொல்வது ஆகியவற்றை ஏகாதசியன்று தவிர்க்க வேண்டும். மேலும் ஏகாதசிக்கு முன்தினத்திலிருந்தே உடலுறவை தவிர்க்க வேண்டும்.

 பாவங்கள் நீங்கும்

பாவங்கள் நீங்கும்

ஏகாதசிக்கு மறுநாள் வெண்கல தட்டில் உண்ணுதல், மாமிசம் மற்றும் தேனை உட்கொள்ளுதல், உடலுறவு, முடிவெட்டுதல், முகச்சவரம் செய்தல், உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது. மற்றவர்களால் படைக்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்லாமல் சில விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளை இந்த மூன்று நாட்கள் மட்டுமின்றி எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவர் இந்த ஏகாதசியை விதிகளுக்குட்பட்டு கடைபிடித்ததால் தன் எல்லா பாவவிளைவுகளும் அழிந்து விடும் மற்றும் அவர் மிக உயர்ந்த இலக்கை அடைகிறார்.

மகாவிஷ்ணுவின் பாதங்கள்

மகாவிஷ்ணுவின் பாதங்கள்

ஒருவர் ஏகாதசியன்று விழித்திருந்து பகவான் ஜனார்தனனை வழிபட்டால் தன் எல்லா பாவ விளைவுகளிலிருந்து விடுபட்ட வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை அடைகிறார். யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்

பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்

பிரம்மதேவனின் ஐந்தாவது தலையைக் கொய்த பாவத்திலிருந்து விடுபடவேண்டி சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவ விமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம். தானங்களில் மிகச்சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது வித்யாதானம். அந்த வித்யாதானப்பலனை அளிக்கக் கூடியது இந்த வருதினி ஏகாதசி விரதம். அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.

பலன் தரும் விரதம்

பலன் தரும் விரதம்

வருதினி ஏகாதசி விரதம் இந்த அத்தனை தான பலன்களையும் அளிக்க வல்லது. அந்த பலன் வருதினி ஏகாதசி விரதம் மூலம் நமக்கு கிட்டும். கத்திரி வெயிலும் வருதினி ஏகாதசியும் சேர்ந்த இன்று செருப்பு, குடை, வஸ்திரம். கைத்தடி, மூக்கு கண்ணாடி போன்ற தானங்கள் செய்வது ஒருவர் இறந்தபோது செய்ய வேண்டிய தானங்களில் ஏதேனும் குறை இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை.

English summary
Varutini Ekadasi fast is unique among fasts. It is a myth that if you fast Ekadasi in general, your sins will be cured. Love and unity prevail between couples.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X