அன்னாசி பழம் ஓவியம் + கருப்பு உளுந்து.. வீட்டில் அதிர்ஷ்டம் நுழைய எளிய பரிகாரம்.. செம வாஸ்து டிப்ஸ்
சென்னை: ஒருவரது வீட்டில் பணம் தண்ணீராய் செலவாகி வருகிறதென்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளானது தொழில் முன்னேற்றத்துடன் தொடர்புடையது. இந்த பகுதிகளில் ஏதேனும் வாஸ்து தோஷம் ஏற்பட்டால், பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம்.. அதேபோல, ஒருசில எளிய பரிகாரங்களை செய்வதால் வீட்டிலுள்ள நிதி நிலைமையும் சீராகின்றன. அவைகளை பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
ஒருவரது வீட்டில் பணம் எப்போதும் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால், நிதி வளர்ச்சிக்காக ஒருசில பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

அந்தவகையில், மகாலட்சுமியின் அருள் நிறைந்த வலம்புரி சங்கினையும், வீட்டில் வைத்திருப்பதால் குறைவின்றி செல்வம் தங்கும்.
வலம்புரி சங்கு மகிமை
பாடுபட்டு எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், கையில் பணமே தங்கவில்லை என்று கவலைப்படுபவர்கள், வீட்டில் மயிலிறகை வைப்பதால் செல்வம் தழைக்கும்.. பணம், நகை வைக்கும் பீரோவிலும் மயிலிறகு ஒன்றினை போட்டு வைக்கலாம்..
வாஸ்து சாஸ்திரத்தில் நீல நிற பிரமீடு மங்களகரமான ஒரு பொருளாக கருதப்படுவதால் வீட்டில் வைக்கலாம்.. ஆனால், குபேர திசையான வடக்கு திசையில் மட்டுமே வைக்க வேண்டும்.. இது வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்க செய்வதுடன் பண பற்றாக்குறையே ஏற்படாது.
அன்னாசிப்பழ ஓவியம்
அதேபோல ஒருவரது வீட்டில் பணம் சேர்ந்து கொண்டேயிருக்க வேண்டுமானால், ஒரு கண்ணாடி பௌலில் தண்ணீரை நிரப்பி, அதை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதில் ஒரு வெள்ளி நாணயத்தை போட்டு வைப்பதால், லட்சுமி தேவியின் ஆசியும், அருளும் எப்போதும் அந்த வீட்டிற்கு இருக்கும்.
அன்னாசிப்பழம் ஒவியத்தை உங்களது வீட்டில் அல்லது தொழில் நடக்கும் இடத்தில் முன்புற அறைகளில் வரைந்து வைத்தால் அதிஷ்டமும், வாய்ப்புகளும், நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.
சீன பணத்தவளை
வீட்டிற்குள் சீன பணத் தவளை அல்லது 3 கால் செல்வத்தேரை என்றழைக்கப்படும் சின்னத்தை வைக்கலாம்.. அதேபோல காற்று மணிகளை கட்டிவிடுவதால், இனிமையான சூழலும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். வீட்டில் பித்தளை அல்லது வெள்ளை நிறத்தால் ஆன யானை சிலையை வைப்பதாலும் அதிர்ஷ்டமும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
வீட்டில் துளசி செடி, நெல்லிக்காய் மரம் போன்றவற்றை வடக்கு திசையில் வைத்து வளர்க்கலாம்.. இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.. வீட்டில் பிள்ளையார், லட்சுமி தேவியின் சிலை இருக்க வேண்டும்.. அதிலும் வடகிழக்கு திசையில் வைத்து, தினந்தோறும் இந்த சிலைகளின் முன்பு ஒரு மண் விளக்கை ஏற்றி வைக்கலாம்.. இதுவும் பணப்பிரச்சனைக்கு தீர்வை தரும்.
5 முகம் கொண்ட திரி
அதுபோலவே, 5 முகம் கொண்ட விளக்கில் 5 திரி போட்டு தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் அவசியமாகும்.. சிவன் வழிபாட்டினை தொடர்ந்து செய்து வருவதுடன், பஞ்சபூத தலங்களுக்கும் சென்று நேரில் வழிபட்டு வருவது குடும்பத்துக்கு பல விதத்தில் நன்மையை பெற்றுத்தரும்.
எப்போதுமே வீட்டின் நுழைவாயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேவையான அளவிற்கு வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். நுழைவாயில் பகுதியில் வாசலுக்கு எதிர்திசையில் கண்ணாடி வைக்கக்கூடாது.. அப்படி வைத்தால், அது நுழைவாயில் கதவின் பிம்பத்தினை பிரதிபலித்துவிடும். இதனால் வீட்டிற்குள் நல்ல ஆற்றல் நுழைவதில் தடங்கல் ஏற்படும்..
கருப்பு உளுந்து + பசுந்தயிர்
யாருக்காவது அவசரத்துக்கு பணம், நகைகளை தந்துவிட்டு, அவைகளை திரும்ப பெற முடியாமல் போய்விடும்.. இதற்கு வெள்ளிக்கிழமைகளில் இரவு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கருப்பு உளுந்து 2 ஸ்பூன் போட்டு, அதில் பசுந்தயிரையும் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
மறுநாள் சனிக்கிழமை காலையில் குளித்து முடித்துவிட்டு , பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு, ஊறிய கருப்பு உளுந்தை அருகிலுள்ள அரச மரத்தடியின் வேரில் படும்படி போட்டு, கற்பூரம் ஏற்றி வைக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications