பீரோவுக்கு கீழே இந்த தட்டு வையுங்க.. பீரோவில் இதை மட்டும் வெக்காதீங்க! 3 தானிய பரிகாரம்.. பலே வாஸ்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்... எந்தவொரு நல்ல காரியத்துக்கும் தடை, தடங்கல் உள்ளதென்றால், திருஷ்டி அதிகமாகிவிட்டது என்று அர்த்தம்.. இந்த திருஷ்டியை போக்கவும், வறுமை, கடன், நிதி சிக்கல், பணத்தட்டுப்பாடு போன்றவை நீங்குவதற்கும், திருஷ்டி கழிவதற்கும், வீட்டிலுள்ள பீரோவை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அந்தவகையில், பீரோவில் என்ன வைக்கலாம்? பரிகாரங்களை எப்படி செய்யலாம்? இவைகளை பற்றி ஒருசிலவற்றை பார்ப்போம்.

பீரோவை வீட்டில் வைக்க சரியான திசை தென்மேற்கு திசையே.. இந்த திசையில் வைத்தால், நேர்மறை ஆற்றல் பெருகி, குடும்பத்தின் செழிப்பு பெருகும்..

Spirtuality Bureau Vastu

அதேபோல, பீரோவுக்குள் வைக்கும் பணப்பெட்டி, நகைப்பெட்டியை, எந்த திசையிலும் வைத்துக் கொள்ளலாம்.. ஆனால், தெற்கு திசையில் வைப்பதை தவிர்த்துவிட வேண்டும்.. முடிந்தவரை குபேரனுக்குரிய வடக்கு திசையில் வைக்கலாம்.

பீரோவில் வைக்க கூடாத பொருள்

பீரோவில் தேவையில்லாத பொருட்களை வைக்கக்கூடாது.. நீண்ட காலம் பயன்படுத்தாத பொருட்கள், சேதமடைந்த பொருட்களை வைக்கக்கூடாது.. துவைக்காத துணி, வியர்வை, கறை படிந்த துணிகளை வைக்கக்கூடாது.. கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் உடைந்த கண்ணாடிகள், சீப்புகள் பீரோவில் வைக்கக்கூடாது.

சிலர் பீரோவில் கண்ணாடி வைத்திருப்பார்கள்.. ஆனால் இந்த கண்ணாடியை உள்பக்கமாக திருப்பி வைக்க வேண்டும்... பீரோ கண்ணாடிக்கும் தூபம் காட்ட வேண்டும்.

பீரோ - பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் இரவு நேரத்தில் லட்சுமி தேவிக்கு ஒரு ரோஜாப்பூவை வைத்து, ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு அந்த ரோஜாவினை பீரோவுக்குள் வைப்பதால், பொருளாதார சிக்கல் விலகி, நிதிப்புழக்கம் அதிகரிக்கும் என்பார்கள். அதேபோல, உழைத்தும் பணம் கையில் தங்கவில்லையானால், பீரோவில் ஒரு மயிலிறகை போட்டு வைக்கலாம்..

வெந்தயம், பச்சை பயிறு, பச்சை கற்பூரம் இந்த 3 பொருட்களையும் கலந்து பூஜையறையில் வைத்து பிரார்த்திவிட்டு, பீரோ லாக்கரில், பணப்பெட்டி, நகைப்பெட்டியில் தூவிவிட வேண்டும். இதனை மூன்று வாரம் கழித்து மீண்டும் மாற்றிவிட வேண்டும். இதுவும் பணவரவுக்கு காரணமாக அமையும்.

அதேபோல, உலர்ந்த துளசி இலைகளும் மகத்துவம் நிறைந்தவை என்பார்கள். எனவே சில காய்ந்த துளசி இலைகளை சுத்தமான சிவப்பு நிற துணியில் கட்டி, பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்துவிடலாம்.. இதனால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பீரோவுக்கு கீழே தட்டு

குடும்பத்திலுள்ள திருஷ்டிகளை போக்க, ஒரு தட்டில் கல்லுப்பை பரப்பி, அதில் எலுமிச்சையை வைத்து, பீரோவுக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, இந்த தட்டிலுள்ள உப்பு, பழத்தை மாற்றி வேறு வைக்கலாம்.. இதனால் திருஷ்டி நீங்குவதுடன், பணமும் சேரும் என்பது நம்பிக்கையாகும்.

வாஸ்து - தானிய பரிகாரம்

பச்சை கற்பூரத்தை ஒரு துணியில் கட்டி பீரோவில் வைப்பதால் பாசிட்டிவ் எனர்ஜி பெருகும்.. பச்சரிசி, வெள்ளை கொண்டைக்கடலை, துவரம் பருப்பு என மூன்றிலுமே ஒவ்வொரு கைப்பிடி எடுத்து, பூஜையறையில் வைத்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு பச்சை துணியில் மேற்கண்ட 3 தானியங்களையும் கொட்டி, முடிச்சு போட்டு பீரோவில் வைத்துவிடலாம். இதற்கு அடிக்கடி தூபம் காட்டிவர வேண்டும்.. மூன்று மாதங்களுக்கு பிறகு, இந்த தானிய மூட்டையை யாரும் கால்படாத இடங்களில் வீசிவிட்டு, மீண்டும் 3 தானியங்களின் முடிச்சையும் பீரோவில் வைக்கவேண்டும். இதனால், நிலம் தொடர்பான சிக்கல், கடன் தொல்லை நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+