கற்பூரவல்லி.. பண வருமானத்தை தரும் தெய்வீக செடி.. தீராத கடன்.. வறுமையை விரட்டும் வாஸ்து டிப்ஸ்
சென்னை: தீராத கடன் பிரச்சினை.. குடும்பத்தில் வறுமை என பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பவர்கள் தப்பிக்க சில பரிகாரம் உள்ளது. நம் வீட்டில் தெய்வீக செடிகளை வளர்த்து பராமரிப்பதன் மூலம் வாஸ்து ரீதியாக செல்வம் பெருகுவதோடு வறுமை நீங்கும் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். நம்முடைய வீட்டில் செல்வம் பெருக வறுமை நீங்க என்ன செய்யலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நம்முடைய குடும்பம் மகிழ்ச்சியோடு சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தாலே வீட்டில் மகாலட்சுமியின் அருள் இருக்கும். எனவே கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க நாம் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நாகராஜா சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட வேண்டும். செவ்வரளி பூக்கள் சாற்றி வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும் குடும்பம் மகிழ்ச்சியடையும். மன நிம்மதி ஏற்படும்.
கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபட வேண்டும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி பிரச்சினைகள் நீங்கும்.
புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட பில்லி, சூனியம்,ஏவல் நீங்கும். 21 செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும். தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
அதே போல வாஸ்து படி சில தெய்வீக செடிகளை நாம் வீட்டில் வளர்க்க வேண்டும். துளசி செடி அனைவருமே வளர்ப்பார்கள். துளசியை வடகிழக்கு மூலையில் வளர்த்தால் நம்முடைய வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். வறுமை நீங்கும். செல்வம் பெருகுவதோடு கடன் பிரச்சினைகள் நீங்கும்.
சிறிய மூங்கில் செடியை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதன் மூலம் புகழும் செல்வமும் அதிகரிக்கும். செம்பருத்தி செடி மகாலட்சுமி அம்சம் நிறைந்தது. செம்பருத்தி பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபட வேண்டும். அதே போல மாதுளை மரங்களை வீட்டில் வளர்ப்பதும் மகாலட்சுமியின் அம்சத்தை அதிகரிக்கும்.
அதே போல மருத்துவ குணம் கொண்ட கற்பூரவல்லி செடி மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. வாசனையான இந்த செடியை நாம் தினசரி பார்க்க நேரிட்டாலே நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும். எனவே சிறிய தொட்டியில் கற்பூரவல்லி செடியை வளர்ப்பது நல்லது. வீட்டில் எதிர்மறை சக்திகள் இருந்தால் வெளியேற்றும் தேவையற்ற செலவுகளை குறைக்கும். வருமானத்தை அதிகரிக்கும் சேமிப்பை அதிகரிப்பதோடு கடன் பிரச்சினை தீர மிகச்சிறந்த செடி என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நம்முடைய கடன் பிரச்சினை தீர தினசரியும் நாம் கற்பூரவல்லி செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது அந்த செடியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் செல்வம் பெருக வேண்டும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நாம் அந்த செடியிடம் வேண்டிக்கொண்டால் நம்முடைய வருமானம் பெருகும். இதன் மூலம் தீராத கடனும் தீரும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications