வலம்புரி சங்கு வாஸ்து டிப்ஸ்.. தவறியும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்.. கடனில் சிக்குவீர்கள்
மதுரை: வலம்புரிச் சங்கை வணங்கும் இடத்தில் அன்னை மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் அணுகாது. வலம்புரிச் சங்கினை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வலம்புரி சங்கினை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம் என்று பார்க்கலாம்.
வலம்புரி சங்கு: திருமகளின் அம்சமாகவே இருக்கும் வலம்புரிச் சங்கு சகல சௌபாக்கியங்களையும் தரும் அற்புத சின்னமாகும். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தார் அவருடனே தோன்றியது இந்தச் சங்கு. அதனை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார் மகா விஷ்ணு. 'பாஞ்சஜன்யம்' என்னும் அந்தச் சங்கு உயிர்களின் சலனங்களை எடுத்துக்கூறும் சின்னமாக இருந்து வருகிறது.

வாஸ்து தோஷம் போக்கும் வலம்புரி சங்கு: புதுமனை வாங்கி அங்கு வீடுகட்டிக் குடியேறுபவர்கள் நன்றாக வாழ்ந்தாலே கண் திருஷ்டியால் வியாபாரச் சரிவு ஏற்படும். கடன்கள் தொழில் கூடங்களில் தொய்வு சிலருக்கு ஏற்படும். இதை போக்கவல்லது வலம்புரி சங்கு. எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்கவல்ல அற்புத சங்கு,
ஐஸ்வர்யம் தரும் வலம்புரி சங்கு: வலம்புரிச் சங்கினை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்களின் வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் மேன்மையடைவதோடு பணம் தங்குதடையின்றி புரளும்.
சங்கு பூஜை: சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. வலம்புரி சங்கினை பூஜை செய்வதற்கு முன்பாக விபூதியால் தேய்த்து சங்கை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும். பின்னர், ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, துளசி, மஞ்சள் தூள் சிறிதளவு கலந்த நீரை சங்கினுள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அடுத்து ஷட்கோண கோலத்தின் மையத்தில் சிவப்புத் துணி விரித்து அதன் மீது சங்கை வைக்கவேண்டும். எதிரில் ஹ்ரீம் கோலம் போட்டு சுபம், லாபம் என்று எழுதிவைக்க வேண்டும்.
கடன் பிரச்சினை நீங்கும்: ஆயிரம் இடம்புரிச் சங்கில் ஒரே ஒரு வலம்புரிச் சங்குதான் இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்கில் ஒரே ஒரு 'சலஞ்சலம்' என்னும் விசேஷ சங்கு தோன்றும். ஆயிரமாயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு இடையேதான் ஒரே ஒரு 'பாஞ்சஜன்யம் சங்கு' தோன்றும் என்பார்கள். சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

உணவுப்பஞ்சம் வராது: சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால்,சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.
சங்கு பூஜை செய்ய ஏற்ற நாள்: ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி, ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி எல்லாம் சங்கு பூஜை செய்வதற்கு உரிய நாள்கள். வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரி சங்கின் உள்ளே பன்னீர் விட்டு அதில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து கொள்ளுங்கள் வலம்புரி சங்கு எப்போதும் நறுமணத்தோடு இருக்கும். ஏலக்காய், பச்சை கற்பூரம், வெற்றிலை, பன்னீர் இவைகள் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமானவை என்பதால் இவைகள் வலம்புரி சங்கிற்குள் வைப்பதால் வீட்டில் பணமழை பொழியும். எப்போதும் தங்கு தடை இன்றி வருமானம் வந்து கொண்டே இருக்கும்
வாஸ்து தோஷங்கள் நீங்கும்: வாஸ்து குறைகள் முற்றிலுமாக நீங்கவும், நினைத்த காரிய வெற்றி உண்டாகவும், ஆவி பிரச்னைகளை தீர்க்கவும் வலம்புரிச் சங்கின் வழிபாடு இல்லத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமை மாலையில் 5 முதல் 8 மணிவரையிலான குபேர காலம், வெள்ளிக்கிழமை காலை வேளை, பௌர்ணமி, திருவோணம் மற்றும் பூர நட்சத்திர நாட்களில் வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் தோஷங்கள் நீங்கி விடும். வாஸ்து முறைப்படி சங்கை வீட்டில் வைத்து வழிபடும் போது எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். வீட்டில் சங்கை வைக்கும் போது ஒன்றாக வைக்க வேண்டாம். இரண்டு சங்குகளை வாங்கி அவற்றை தனித் தனியாக வைக்க வேண்டும். நீங்கள் வழிபாடு செய்யும் போது எக்காரணம் கொண்டும் சங்கு சிவலிங்கத்தை தொடக் கூடாது. அதே மாதிரி சிவலிங்கத்தின் மேலும் சங்கினை வைக்க கூடாது.
செய்யக்கூடாத தவறுகள்: வலம்புரி சங்கை எப்போதும் நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். வலம்புரி சங்கை தினந்தோறும் தண்ணீர் கொண்டு மட்டுமாவது அபிஷேகம் செய்ய வேண்டும். பலர் பலவிதமான வாசனை திரவியங்களை பயன்படுத்திக் அபிஷேகங்கள் செய்வார்கள். அப்படி செய்ய முடியாவிட்டாலும் தண்ணீர் மட்டும் ஊற்றி தினமும் அபிஷேகம் செய்யுங்கள். தினமும் மஞ்சள், குங்குமம் வைப்பது அவசியம். மஞ்சள் குங்குமம் இன்றி வலம்புரி சங்கை வெறுமனே வைத்திருப்பது அவ்வளவு நல்லது அல்ல. வலம்புரி சங்கில் தூசு படிந்தால் வீட்டில் கஷ்டம் ஏற்படும். கடன் சுமை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வலம்புரி சங்கை முறையாக பராமரிக்கா விட்டால் கடன் சுமை அதிகரிக்கும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications