யானை முடி மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா? எந்த விரலில் அணிய வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: யானை முடி மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் யானை முடியால் செய்த பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்டவைகளையும் மக்கள் அணிகிறார்கள். அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.

திறமை, உழைப்பு, நம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் எந்த காரியத்திலும் வெல்லலாம். ஆனால் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பவே கூடாது. அதிர்ஷ்டமும் வேண்டும்தான், இல்லை என சொல்லவில்லை. மேற்கண்ட 4 விஷயங்கள் இல்லாமல் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி ஒரு பயனும் இல்லை.

spirituality elephant


இந்த அதிர்ஷ்டத்திற்காக சிலர் ராசிக் கல் மோதிரம், யானை முடி மோதிரம் என வாங்கி அணிகிறார்கள். இது போல் யானை முடி மோதிரத்தை அணியலாமா என்பதை பார்க்கலாம். அதாவது தங்கம், வெள்ளி, ஐம்பொன் போன்று அணிகலன்களில் மோதிரங்கள் அணிகிறோம். அதில் யானையின் முடியுடன் கூடிய மோதிரத்தை அணிவது சிறப்பு என்கிறார்கள்.

அதாவது நவக்கிரங்களின் குருவின் வாகனம் யானை ஆகும். அது போல் தங்கம் குருவிற்கு உகந்ததாகும். அதனால்தான் தங்கத்தில் அணிவது சிறப்பாக கூறப்படுகிறது. இந்த யானை முடி மோதிரங்கள் நம்மை நோக்கி வரும் சூழ்ச்சியை உடைக்கும் தன்மை கொண்டது. மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புகளை தடுக்கக் கூடியதாகும்.

கெட்டதை முன் கூட்டியே தெரியப்படுத்தும். இந்த யானை முடி மோதிரம் என்பது ஒரு பாதுகாப்புக்காக அணிவதாகும். மேலும் யானையின் பலமும் கிடைக்கும். பயந்த சுபாவம் உள்ளவர்களுக்கு இது ஒரு தைரியத்தை கொடுத்து எதிர்மறை எண்ணங்களை உடலில் நெருங்கவிடாது.

குரு பகவானுக்க உகந்த யானை முடி என்பதால் அந்த மோதிரத்தை வியாழக்கிழமைகளில் குரு ஓரைகளில் அணியலாம். அது போல் வளர்பிறையாக இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். ஆண்கள், பெண்கள் என இருவருமே அணியலாம். ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும்.

இந்த மோதிரத்தை வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள். ஆங்கில தேதி 3,21,11, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அணிந்து கொள்வது மிகவும் சிறப்பானது என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். திருஷ்டி, தோஷம் உள்ளிட்டவைகளில் இருந்து விடுபடலாம். புராணக் கதைகளில் சிவப்பெருமான், விநாயகரின் தலையை எடுத்துவிடுவார். பிறகு பார்வதி தேவி வாதிட்டதும் கணேசனுக்கு யானையின் தலையை வைத்துவிடுவார். அது முதல் விநாயகர் முழு முதற்கடவுளானார். எனவே யானை முடி மோதிரத்தை அணிவது நல்லது. மேலும் யானை முடி அதை துன்புறுத்தாமல் கிடைக்கும் பொருள் என்றும் அதற்கான உரிமம் பெற்று எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. யானை முடி மோதிரத்தை நடுவிரலில் அணிய வேண்டும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+