வாஸ்துப்படி படுக்கையறை, சமையலறையில் பாம்பு செடி எப்படி வைக்கலாம்? இதை பண்ணாலே பணம், மகிழ்ச்சி கூடுமே
சென்னை: வீடுகளில் அமைதி, நிம்மதி, ஒற்றுமை, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், நிலைத்து நிற்க வேண்டுமானால் சிலவகையான வாஸ்து செடிகளை வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. அந்தவகையில் ஸ்நேக் பிளாண்ட் என்று சொல்லக்கூடிய பாம்பு செடிகள் மிக முக்கியமானவை.. இந்த செடியை எங்கே, எப்படி, எந்த திசையில் வைக்கலாம்? நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தரக்கூடிய இந்த பாம்பு செடிகளின் பண்புகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பாம்பு செடிகள் (Snake plant) ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவை. பெயரில் பாம்பு உள்ளதால், சிலர் குழப்பத்தில் அச்சப்படுவார்கள்.. ஆனால் இந்த செடிகள் இருந்தாலே அங்கு பாம்புகள் அண்டாது. இதற்கு மாமியார் நாக்கு, வில்லு என்றும் மற்றொரு பெயர்கள் உண்டு.

பார்ப்பதற்கு செயற்கையான வாள் வடிவத்தில் இலைகள் காணப்படும்.. அதாவது பாம்பு போலவே வளைந்து நெளிந்து இந்த இலைகள் காணப்படும் என்பதால் பாம்பு செடி என்று அழைக்கப்படுகிறது.
செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கக்கூடிய செடியாக கருதப்படுகிறது.. வீட்டில் இந்த செடியை வளர்ப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இந்த செடி தருகிறது..
மாமியார் நாக்கு
காற்றில் உள்ள நச்சுப் பொருட்களான ஃபார்மால்டிஹைட், பென்சீன், சைலின் போன்றவற்றை நீக்குவதுடன், காற்றிலுள்ள மாசுகளையும் நீக்குகிறது.. குறிப்பாக ஆக்சிஜனை தந்து ஆரோக்கியத்தை பெருக்க செய்கிறது.. இதனால் நிம்மதியான தூக்கத்தையும் பெற முடிகிறது.. யாருக்காவது டஸ்ட் அலர்ஜி இருந்தால், இந்த செடியை தாராளமாக வாங்கி வீட்டில் வைக்கலாம்..
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அதிர்ஷ்டத்திற்காக பாம்பு செடியை வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும் வளர்க்கலாம். ஆனால் பாம்பு செடியை சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் சமையலறை, குளியலறை, படுக்கையறையில் வைக்கலாம்.
சமையலறையில் பாசிட்டிவ் எனர்ஜி
இதில், பெரும்பாலும் இந்த பாம்பு செடியை சமையலறையில் வைப்பது கூடுதல் நன்மை தரும் என்பார்கள்.. காரணம், அதிக வெளிச்சம் இந்த செடிக்கு தேவைப்படாது என்பதால் கிச்சனிலேயே வளர்க்கலாம்.. இது மிகச்சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுவதுடன், வீட்டிற்கு பாசிட்டிவ் எனர்ஜியை பெருக்கித்தரும்.. வீட்டின் செழிப்பும் அதிகரிக்கும்.
ஆனால், கிச்சனில் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் பாம்பு செடியை வைக்கலாம்.. இந்த திசையில் இச்செடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. எக் காரணம் கொண்டும் அடுப்புக்கு பக்கத்தில் அனலில், புகை படும்படியாக வைக்கக்கூடாது.
கிச்சனில் செடியை வளர்ப்பதால் அழுக்குகள் எளிதில் சேர்ந்துவிடும்.. எனவே, செடியின் இலைகளை தூசு படியாமல், சுத்தமாக பராமரிப்பதாக இருந்தால் மட்டுமே இந்த செடியை கிச்சனில் வைக்க வேண்டும்..
இலைகளில் விஷத்தன்மை
அதேபோல வீட்டின் ஹாலின் ஒரு மூலையிலும் வைத்து வளர்க்கலாம். அதிலும் வீட்டிற்கு வருவோரின் கண்களில் படும்படி இருக்க வேண்டும். இதனால் கண் திருஷ்டி நீங்கி, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகம் சுற்றும் என்பார்கள். எப்போதும் தரையில் தான் வைக்க வேண்டுமே தவிர, மேசையின் மீதோ அல்லது வேறு ஏதாவது மேற்பரப்பிலோ வைக்கக்கூடாது.
அதேபோல இந்த செடியை வீட்டில் வைத்தால், அந்த செடியைச் சுற்றி வேறு எந்த செடியையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தான் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
ஆனால், இந்த செடிகளின் இலைகளில் விஷத்தன்மை ஓரளவு இருக்கிறது.. இந்த இலைகள் நாக்கில் பட்டுவிட்டால், மரத்துப்போன உணர்வு ஏற்பட்டுவிடும்.. எனவே குழந்தைகள், விலங்குகள் இந்த செடிகளிடம் அண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications