For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தை மாதத்தில் மறந்தும் இந்த நாட்களில் நல்ல விஷயங்கள் செய்து விடாதீர்கள்..காரியம் கெட்டுவிடுமாம்!

Google Oneindia Tamil News

மதுரை: தை மாதம் முதல் மூன்று நாட்களும் தமிழகத்தில் சூரியனுக்குரிய விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மூன்று நாட்களும் கரி நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். எனவே இந்த நாட்களை ஒதுக்கிவிடும்படி பஞ்சாங்கங்களும் சோதிடர்களும் பரிந்துரைக்கிறார்கள். கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே. இந்த நாளை தனிய நாட்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த நாட்களில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

What is Kari naal?Dont good thing and buy gold Kari naal

கரி நாட்கள் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகக் கருதலாம். எனவே கரி நாட்கள் என்பதை வெறும் தமிழ் தேதிகளாக கருதாமல், சூரியனின் சஞ்சார பாகைகளாக எடுத்துக்கொள்ளலாம். கரி நாட்களைப்போன்றதே தனிய நாட்களாகும். இந்த விளக்கங்கள் தனிய நாட்களுக்கும் பொருந்தும். கரி நாட்களில் இனி நல்ல விசயங்களை செய்வதை தவிர்த்து விடுவது அனைவருக்குமே நல்லது.

சந்திரனை வைத்து சந்திராஷ்டமம் எப்படி கணிக்கப்படுகிறதோ அதே போல சூரியனை அடிப்படையாக வைத்து கரிநாள் கணிக்கப்படுகிறது. சந்திராஷ்டம நாளில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்கின்றனர். முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை. அதே போல கரிநாளில் சுப காரியங்கள் செய்வதில்லை. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் உள்பட எந்த நல்லகாரியங்களும் கரிநாளில் செய்வதில்லை.

What is Kari naal?Dont good thing and buy gold Kari naal

நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்.

கரிநாள் என்பது'அஷ்டமி, நவமி' போன்றோ அல்லது 'பரணி, கிருத்திகை' போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. கரிநாள் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே. கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.

What is Kari naal?Dont good thing and buy gold Kari naal

கரி நாளை மாத தியாஜ்ஜியம் என குறிப்பிடுவர். தியாஜ்ஜியம் என்றால் விலக்கப்பட வேண்டியது என்று பொருள். முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்த நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள் என்று கணக்கிட்டு வைத்திருப்பார்கள்.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரி நாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

தமிழ் பஞ்சாங்கங்களில் மட்டும்தான் கரிநாள் என்றொரு விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் சந்திரமான மாதங்கள் நடைமுறையில் உள்ளன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும். தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகின்றன. சித்திரையில் சூரியன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கி பங்குனியில் மீனம் ராசியில் தனது சுற்றினை முடிக்கிறார்.

12 ராசிகளில் சூரியன் கடந்து செல்வதை வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுவதால் சூரியனின் கதிர்வீச்சு வேகத்தை வைத்து கரிநாள் கணக்கிடுகின்றனர். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள்தான். கரிநாள் என்பது நல்ல நிகழ்வுகளைச் செய்ய ஏற்ற நாள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கை.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் இந்த இந்த தேதிகள் கரிநாட்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்த் தேதிகள் மாறாதனவாகும். எந்த ஒரு தமிழ் ஆண்டுக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக, தை மாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும். இவை மாறவே மாறாது.

சித்திரை முதல் பங்குனி வரை தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்கள் என்றைக்கு வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சித்திரை 6,15, வைகாசி 7, 16, 17, ஆனி 1,6, ஆடி 2, 10, 20, ஆவணி 2, 9, 28, புரட்டாசி 16, 29, ஐப்பசி 6, 20, கார்த்திகை 1, 4, 10, 17, மார்கழி 6, 9, 11, தை 1, 2, 3, 11, 17, மாசி 15, 16, 17, பங்குனி 6, 15, 19 ஆகிய நாட்கள் கரிநாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மறந்தும் சுப காரியங்களை செய்து விடாதீர்கள். காரியம் கெட்டுவிடுமாம்.

 தை 1 வாழ்த்து பெற வந்தவர்களுக்கு பரிசாக ரூ.100! கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் முதல்வர்! தை 1 வாழ்த்து பெற வந்தவர்களுக்கு பரிசாக ரூ.100! கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் முதல்வர்!

English summary
Pongal festival is celebrated in Tamil Nadu for the first three days of the month of Thai as a festival dedicated to the sun. But those three days are mentioned in Tamil panchangam as Kari Naal. All Tamil Hindus will avoid all days marked as Kari naal All Tamil hindu avoid kari naal there will no function marriage, seemantam and house warming.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X