கெட்ட கெட்ட கனவு.. உங்க கனவில் புறா வருதா? அதுவும் "இந்த கலரில்" புறா வரவே கூடாது.. இதுதான் அர்த்தம்
சென்னை: உங்கள் கனவில் பறவைகள் வருகின்றனவா? புறாக்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன பலன் தெரியுமா?
பறவைகளை நாம் கனவில் கண்டால், தற்போதுள்ள சூழ்நிலைகள் விரைவில் மாறுபடுவதற்கான அறிகுறி என்று சொல்வார்கள்.. அதேபோல பறவைகளின் செயல்பாடுகளை வைத்தும், சில பலன்கள் கூறப்பட்டுள்ளன.

பறவைகள்: உதாரணத்துக்கு பறவைகளின் கீரீச் சத்தம் நம்முடைய கனவில் கேட்டால், மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்க போவதாக அர்த்தம்.. மயில் பறப்பது போலவும், தோகையை விரித்து ஆடுவது போலவும் கனவில் வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுமாம்..
அதைவிட, ஆந்தைகள் கூட்டமாக இருப்பதுபோல கனவில் கனவு கண்டால் விரைவில் நல்ல செய்தி குடும்பத்திற்கு வரப்போகிறது என்று அர்த்தம். ஆனால், ஒரே ஒரு ஆந்தையை மட்டும் கனவில் கண்டால் கெட்ட செய்தி வருமாம்.
குயில்கள்: குயில்கள் சண்டை போடுவதை போல் கனவு வரக்கூடாதாம்.. அதேபோல, கருங்குயில் கனவில் வருவதும் நல்லதில்லை என்கிறார்கள். கொக்கு கனவுகளில் வந்தால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும்..
குருவியை ஜோடியாக கண்டால் நல்ல செய்தியும், குருவிக் கூட்டை கலைப்பது போன்று கனவு வந்தால் கெட்ட செய்தியும் ஏற்படுமாம்.. அந்தவகையில், கனவில் வந்துவிடவே கூடாத பறவை கழுகும், பருந்தும்தான்.. பிணம் தின்னும் கழுகை கனவில் கண்டால் அதைவிட ஆபத்து வரப்போவதாக அர்த்தமாம்.. இவைகள் அபசகுணங்களாக கருதப்படுகிறது..
புறாக்கள்: அந்தவகையில் புறாக்களை பற்றியும் கனவு பலன்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. அதாவது, புறாக்கள் கூட்டமாக இருப்பதை போல கனவு வந்தால், குடும்ப உறவுகளில் ஏதோ சிக்கல் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. பறந்துகொண்டிருக்கும் புறாவை பிடிப்பதுபோல கனவு கண்டால், நண்பர்களின் நட்பு வட்டாரம் வலுப்படும்.. பிரிந்த நண்பர்களும் ஒன்றிணைவார்களாம்.
2 புறாக்கள் ஒன்றாக பறந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களுக்குள் பிரிவு வரப்போகிறது என்று அர்த்தம். புறாவை வேடன் பிடிப்பது போல கனவு வருவது கெடுதலை உணர்த்தக்கூடியதாம்..
வெள்ளை புறா: வெள்ளைப் புறாவை கனவில் வந்தால், இடமாற்றம், தொழிலில் உயர்வு டிரான்ஸ்பர் போன்றவை நடக்கலாம்.. கருப்பு புறாவை கனவில் கண்டால் கெட்ட செய்தி, அதாவது துன்பமான செய்தி ஒன்று விரைவில் உங்களை தேடி வரப்போகிறது என்று அர்த்தமாம். புறாவை நீங்கள் பிடிப்பதற்காக முயற்சி செய்வது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆகப்போகிறார்கள் என்று அர்த்தமாம்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications