கருட பஞ்சமி என்றால் என்ன? பரம எதிரிகளான கருடனுக்கும் நாகத்திற்கும் ஒரே நாளில் பூஜை ஏன்?
சென்னை: கருட பஞ்சமி என்றால் என்ன, கருட பஞ்சமி கொண்டாடப்படுவது ஏன், அன்றைய தினம் விரதம் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். கருடனும் நாகமும் பரம எதிரிகள் , அவர்களுக்கு ஒரே நேரத்தில் பூஜை செய்யப்படுவது ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: கருட பஞ்சமியை தெரிந்து கொள்வோமா? கருட பகவான் பிறந்த தினம்தான் கருட பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கருட பஞ்சமி விரதம் இருந்தால் கருடனைப் போல தாய்ப்பாசம் மிகுந்த வீரமிக்க புத்திரர்கள் பிறப்பார்கள் என்பது பெண்களிடம் காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை கருட பஞ்சமி அன்று ஆதிசேஷன் சிலைகளையும் வைத்து பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
புற்றுமண் எடுப்பதும் புற்றுக்கு பூசை செய்வதும் நடக்கிறது. கருடனும் நாகமும் ஜென்ம விரோதிகள். அப்படி இருக்க அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் பூஜையா? வழிபாடா? என்று சந்தேகம் வருகிறது அல்லவா! இதற்கு காரணம் என்னவென்று பார்ப்போமா!
பிரம்ம தேவனின் மகன் காஸ்யப முனிவர். அவருக்கு நான்கு மனைவிகள். முதல் மனைவி கத்ரு. இரண்டாம் மனைவி வினதை. இவர்கள் இருவரும் சகோதரிகள். தட்ச பிரஜாபதியின் பெண்கள். கத்ரு வினதையை அடிமை போல நடத்தி வந்தாள். இந்த கத்ருவின் பிள்ளைகளே நாகர்கள். வினதையின் பிள்ளைகள் கருடன்கள். பெரியம்மா கத்ருவின் விருப்பத்தை நிறைவேற்றவும், தனது தாயை அடிமை தளையில் இருந்து விடுவிக்கவும், கருடன் அமுத கலசத்தை எடுக்க செல்கிறார்.
அதை தடுக்கும் இந்திரனுடன் போரிடுகிறார். ஒரு கட்டத்தில் இந்திரனுக்கு உதவி செய்ய பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனும் வருகிறார். கருடன் ஆவேசமாக திருமாலுடனும் போரிடும் சந்தர்ப்பம் உருவாகிறது. இதனால்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். கருடனின் தாயன்பும் பாசமும் வீரமும் திருமாலை பெரிதும் கவர்ந்து விடுகின்றன.
ஆகவேதான் அவர் கருடனை தனது வாகனமாக இருக்குமாறு பணிக்கிறார். அவனும் பகவானை தாங்கும் ஒப்பற்ற பேற்றுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து விடுகிறான். அவனது பணிவையும் வீரத்தையும் கண்டே பக்தர்கள் கருடனை பெரிய திருவடி என்று புகழ்ந்து பாடுகின்றனர். இந்த வகையில் கருடனுக்கு இத்தனை நன்மைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த நாகத்தையும் வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

பட்சி என்று சொல்லப்படும் பறவை இனங்களில் கருடன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால்தான், கருடனை பட்சிகளின் ராஜா என்பார்கள். அப்படி, பறவைகளின் தலைவனாகத் திகழ்வது கருட பட்சி. அதனால்தான் கருட பட்சிக்கு உரிய நாளில் வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நாகனும் சாதாரண ஆள் அல்ல. பெருமாளைத் தாங்கும் ஆதிசேஷனாக இருக்கிறார்.
பரந்தாமன் பாற்கடலில் அவன் மீது தானே பள்ளிகொண்டு இருக்கிறார். ஆகவே கருட பஞ்சமி தினத்தன்று ஆதிசேசனையும் வழிபடுவது மரபாக இருக்கிறது. கருடனின் உடலில் ஆபரணங்களாக இருப்பவை அஷ்ட நாகங்களே என்று புராணங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதம் தொடங்குகிறது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications