அசைவ உணவு சாப்பிட்டுட்டு வீட்டில் விளக்கேற்றலாமா? மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு போலாமா? ஓஹோ
சென்னை: அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லக்கூடாது என்று சொல்கிறார்களே ஏன் தெரியுமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு, வீட்டில் விளக்கேற்றலாமா? யார் யார் வீட்டில் விளக்கேற்றக்கூடாது?
பொதுவாக, கோயிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இதற்கு காரணம், அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. மந்த நிலைமை காணப்படும்.. இந்த மந்த நிலைமையில் மனதை முழுமையாக ஒருமுகப்படுத்தி கடவுளை வேண்டி கொள்ள முடியாது..

அசைவ உணவு: அதுமட்டுமல்ல, வழக்கமாக கோயிலுக்குள் நுழைந்தாலே, அங்குள்ள பிராண சக்தியை அனைவராலும் எளிதில் கிரகித்து கொள்ள முடியும்.. ஆனால், அசைவ உணவுகளை சாப்பிட்டவர்களால் இப்படி பிராண சக்தியை கிரகிக்க முடியாது.
இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது.. எனவே, மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். எனவேதான் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லக்கூடாது என்கிறார்கள்.
கோயில் தரிசனம்: எப்போதுமே கோயிலுக்குச் செல்லும்போது, எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டுமாம்.. அப்படியே தவறுதலாக சாப்பிட்டுவிட்டாலும், அசைவம் சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்துவிட்டு செல்லலாம். ஆனால் குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் இது பொருந்தாது..
அதேபோல, சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதேபோல, அந்த வீட்டு பெண்கள் மாதவிலக்கு நாட்களில் விளக்கேற்ற மாட்டார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும், வீட்டில் விளக்கேற்றாமல் இருக்கக்கூடாதாம். அசைவம் சாப்பிட்டாலும்கூட, 5 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவிட்டு, அதன்பிறகு விளக்கேற்றலாம்.
விளக்கேற்றலாம்: மதியம் அசைவ உணவு சமைப்பது முன்கூட்டியே தீர்மானித்தால், காலையில் குளித்து விட்டு விளக்கேற்றி விட்டு, பிறகு மறுபடியும் மாலையில் மீண்டும் குளித்து விட்டு விளக்கேற்றலாம்.
அல்லது அசைவம் சாப்பிட்ட அடுத்தநாள், அசைவ வாசனை வராத அளவிற்கு வீட்டை நன்றாக சுத்தம் செய்து சாம்பிராணி, வத்தி ஆகியவற்றை ஏற்றிவிட வேண்டும்.. வீடு முழுக்க நறுமணம் பரவியதுமே, வீட்டில் விளக்கேற்றலாம்.. இப்படி செய்வதை தவிர்த்து விளக்கேற்றினால் பொருளாதார தடை வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாம்.
மாதவிடாய்: அதேபோல, மாதவிடாய் சமயத்தில், பெண்கள் கோவில் பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள்.. சிலர் இதுபோன்ற நாட்களில் நெற்றியில் குங்குமமும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.. இதுபோன்ற கட்டாயங்களும் தேவையில்லை என்கிறார்கள் முன்னோர்கள். காரணம் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்கள் தெய்வ அருள் பெற்றவை. நமக்கு முற்றிலும் பாதுகாப்பை தரக்கூடியவை. எனவே, அவைகளை சாப்பிடாமல் தவிர்க்க கூடாதாம்.
அதேபோல, மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு போகக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். உடலில் ஏற்படும் வெப்பமானது சில குறிப்பிட்ட பொருட்களை தொட்டால் அது கெட்டுபோகக்கூடும். அதனால்தான் அந்த நாட்களில் கிச்சனுக்குள் பெண்களை நுழையக்கூடாது என்கிறார்கள்.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் யாரையும் தொடாமல் தனியாக இருப்பதால், பெண்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராமல் இருக்கும் என்கிறார்கள் பெரியவர்கள்.












Click it and Unblock the Notifications