சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்? இப்படி ஒரு காரணமா?
பத்தினம்திட்டா: ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லும் போது தென்னங்கன்றை எதற்காக கொண்டு செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதமிருந்து பக்தர்கள் ஜனவரி மாதம் மகரவிளக்கிற்கு வந்து ஐயனை தரிசிப்பார்கள்.

ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் போது குருசாமிமார்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஐயன் வகுத்துக் கொடுத்ததாகும். அந்த வகையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் தென்னம்பிள்ளையுடன் வருகிறார்களே அது ஏன் தெரியுமா?
இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒரு தென்னம்பிள்ளையையும் உடன் எடுத்துச் செல்வது எதற்காக என்பதை தெரிந்து கொள்ளலாம். ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி 18ஆவது வருடம் செல்லும் போது இருமுடி அணிந்து கொண்டு ஒரு தென்னங்கன்றையும் எடுத்துச் செல்வது வழக்கம்.
இது நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆன்மீக பழக்கமாகும். தென்னங்கன்றை வாங்கி வந்து ஒரு தாம்பாளத் தட்டில் ஆற்று மணலை நிரப்பி அதில் தென்னம்பிள்ளையை வைத்து தூய நீரை தெளிக்க வேண்டும். தென்னங்காயான தேங்காயில் மூன்று பக்கமும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
தினமும் வீட்டில் பூஜை செய்யும் போது தென்னங்கன்றுக்கும் காட்ட வேண்டும். பிறகு பக்தியுடன் வணங்க வேண்டும். ஏனென்றால் 18ஆவது சபரிமலை பயணம் புனிதமானது. அதிலும் தென்னங்கன்றை பார்த்ததும் இவர் 18 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் குருசாமி என கருதும் பக்தர்கள் அவருடைய காலில் விழுந்து ஆசி பெறுவார்கள்.
பின்னர் அந்த தென்னங்கன்றை சபரிமலை சன்னிதானத்தில் உள்ள குளத்தின் அருகே வைத்துவிட வேண்டும். தென்னையை மனித இனத்திற்கு இணையாகவே கருதுகிறோம். அதற்காகத்தான் அவற்றை தென்னம்பிள்ளை என்கிறோம்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இவர்கள் இருமுடியை கொண்டு செல்வார்கள். அந்த இருமுடியில் ஒரு பகுதியில் நெய் தேங்காயும் மறு பகுதியில் அபிஷேக பொருட்களும் இருக்கும். முன்பெல்லாம் அங்கு உணவகக் கடைகள் வருவதற்கு முன்னர், ஒரு முடியில் மளிகை பொருட்களை கொண்டு சென்ற பக்தர்கள் சமைத்து சாப்பிட்டு வந்தனர்.
ஆண்டுக்கு 5 முறை மட்டுமே சபரிமலையின் நடை திறந்திருக்கும். இந்த கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதால். ஐயப்பன் கோயிலின் பிரசாதம் என்றால் அரவணை பாயாசம், அப்பம்தான். இரவு நேரத்தில் ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டதும் கோயில் நடை சாத்தப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications