நீங்க ஐபோன் 15, 16 வைத்திருந்தால்.. ஆப்பிள் உங்களுக்கு ரூ.9000 பணம் கொடுக்கும்.. முக்கிய வழக்கில் தீர்ப்பு!
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரியஸ் போன்களை விற்பனை செய்யும் போது 'ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்' என்ற AI அம்சங்களை வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கிற்கு, 250 மில்லியன் டாலர் தொகையை செலுத்தி தீர்க்க முன்வந்துள்ளது ஆப்பிள்.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த கிளாஸ் ஆக்ஷன் வழக்கு இன்னும் நீதிமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆப்பிள் முன்வைத்துள்ள திட்டம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் ஐபோன் 15, 16 வைத்திருப்போருக்கு 8000 ரூபாய் வரையில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதற்காக இந்த வழக்கு?
ஆப்பிள் நிறுவனம், புதிய AI அம்சங்களை - குறிப்பாக மேம்படுத்தப்பட்ட சிரி அசிஸ்டென்ட் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை உருவாக்காமலேயே ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரியஸ் போன்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என விளம்பரப்படுத்தி போன்களை விற்பனை செய்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வாக்குறுதிகள் புதிய ஐபோன் மாடல்களின் விற்பனையை அதிகரிக்க உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
ஆனால் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரியஸ் போன்களுக்கு வாக்குறுதி அளித்தது போல் மேம்படுத்தப்பட்ட சிரி அசிஸ்டென்ட் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை வழங்காத காரணத்தால் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
யாருக்கு இழப்பீடு கிடைக்கும்?
அமெரிக்காவில் 2024 ஜூன் முதல் 2025 மார்ச் வரை ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் வாக்குறுதி அளித்த சேவைகளை அளிக்காத காரணத்தால் நஷ்டஈடு வழங்க தயார் என கலிபோர்னியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு தகுதியான பயனருக்கும் $25 முதல் $95 வரை இழப்பீடு வழங்கப்படும். இழப்பீட்டுத் தொகையாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 250 மில்லியன் டாலர் தொகை மொத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறலாம்.
பெரும் தொகையை செலுத்திய போதிலும் ஆப்பிள் தான் தவறு செய்தாகவும், குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு மாறாக ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கை தீர்த்து முன்னேற விரும்புகிறோம். புதுமைகளில் கவனம் செலுத்தி சிறந்த பொருட்களை வழங்குவதே எங்கள் நோக்கம் என்று நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுவாக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் போது குற்றத்தை ஒப்புக்கொள்ளது. அதேவேளையில் வழக்கை நஷ்டஈடு வாயிலாக முடிக்கவே முயற்சி செய்யும்.
சிரி AI மேம்பாட்டில் தாமதம்
இந்த வழக்கின் மையப் பிரச்சினை, ஆப்பிள் வாக்குறுதியளித்த அதிநவீன AI அம்சங்கள், குறிப்பாக புதிய சிரி இதை இன்னும் ஆப்பிள் வெளியிடவில்லை. இதில் ஏற்படும் தொழில்நுட்ப சவால்களை சமாளிக்க ஆப்பிள் கூகுளின் ஜெமினி AI உடன் கூட்டணி வைத்தது.
இந்த நிலையில் ஜூன் மாதம் நடைபெறும் WWDC மாநாட்டில் புதிய ஏஐ சேவை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடலாம் என்றும், செப்டம்பரில் புதிய ஐபோன்களுடன் முழு அம்சங்கள் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில் இந்த ஆண்டு WWDC மாநாட்டை ஆப்பிள் புதிய சிஇஓ ஜான் டெர்னஸ் தலைமையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications