பல வருட காத்திருப்பு ஓவர்.. இதோ வருகிறது BSNL 4ஜி சேவை.. செம ஃபாஸ்ட்டாம்.. விட்ட இடத்தை பிடிக்குமா?
சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4ஜி நெட்வொர்க் சேவை துவக்கப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் தனியாருக்கு செம போட்டியாக இருந்த பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை அறிமுகம் செய்வதன் மூலம் மீண்டும் முன்னணிக்கு வருமா?
இந்திய அரசின் தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெலிகாம் சந்தையில் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் மிகவும் திணறி வருகிறது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல் கடுமையான வருவாய் இழப்பு, சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிவு ஆகிய பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் தமது ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலைக்கும் சென்றது.

ஒரு காலத்தில் இலவச இன்கமிங் மற்றும் இலவச ரோமிங் என கவர்ச்சிகரமான வசதிகளை பி.எஸ்.என்.எல்தான் அறிமுகம் செய்தது. அதன் மூலம் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் மிகவும் மலிதாக மாறின. ஆனால், பின்னாட்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 5ஜி வேகத்தில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் 4ஜி இணைய சேவையே வழங்கப்படவில்லை. 2020 காலகட்டத்திலேயே பி.எஸ்.என்.எல் 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கான 4ஜி டெண்டர்களை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்தது.
பின்னர் மீண்டும், 4ஜி கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது பி.எஸ்.என்.எல் நிறுவனம். அதன்படி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். டவர்களை 4ஜி நெட்வொர்க் அளிக்கும் வகையில் கருவிகளை பொருத்தி நவீனமாக்கும் நடவடிக்கைகள் கடந்த 2 ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் தமிழ்நாட்டில் 4ஜி சேவையை கொண்டு வருகிறது பி.எஸ்.என்.எல்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் தமிழ்மணி கூறுகையில், “தமிழகத்தில், 6,000 பி.எஸ்.என்.எல் தகவல் தொடர்பு டவர்கள் உள்ளன. இவை, 3ஜி சேவையில் இருந்து 4ஜி நெட்வொர்க் சேவைக்கு மாற்றப்பட உள்ளன.
முன்னணி தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட வேறு எந்த நிறுவனமும் இதுவரை தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தாத, 203 கிராமப் பகுதிகளை தேர்வு செய்து, 200 இடங்களில் பி.எஸ்.என்.எல் டவர்களை அமைத்துள்ளோம்.
புதிய தொழில்நுட்ப கருவி பொருத்தியதும், தமிழகத்தில் 4,65,000 பி.எஸ்.என்.எல் இணைப்புகள் 4ஜி சேவையில் பயன்பெறும். ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4ஜி நெட்வொர்க் சேவை துவங்கப்படும். தனியாரின் 5ஜியும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 4ஜியும் சமமானது தான். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. பொதுமக்கள் தற்போதைய 3ஜி சிம்முக்கு பதிலாக பி.எஸ்.என்.எல் சேவை மையத்தில் 4ஜி சிம் இலவசமாக பெற்று பயன்பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக விரைவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் கவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications