"லேப்டாப், கணினி.." மத்திய அரசின் திடீர் கட்டுப்பாடுகள்.. கலக்கத்தில் பெரு நிறுவனங்கள்! என்ன காரணம்
டெல்லி: மத்திய அரசு லேப்டாப்கள், கணினிகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இது இந்தியாவுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.
மத்திய அரசு நேற்று வியாழக்கிழமை முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லேடாப், டேப்லெட், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இனிமேல் இந்தியாவில் லேப்டாப், கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்ய விரும்பும் எந்தவொரு நிறுவனமும் இறக்குமதி செய்ய அனுமதியைப் பெற வேண்டும். இது இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.
மத்திய அரசு: மத்திய அரசு HSN கோட் 8471 என்ற விதியின் கீழ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த ஹெச். என்.என் கோட் என்பது வரிவிதிப்பிற்காகத் தயாரிப்புகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இதன் கீழ் தரவுகளை பிராசஸ் செய்யும் அனைத்தும் ஹெச். என்.என் 8471இன் கீழ் வரும்..
உள்நாட்டிலேயே இதுபோன்ற பொருட்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே மின்னணு பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதைத் தீவிரமாகச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதையே இந்த கட்டுப்பாடுகள் காட்டுகிறது.
ஊக்கத் தொகை: இந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 30 வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இப்போது இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தங்கள் லேப்டாப், கம்பூயிட்டர்கள் தொடர்ந்து விற்க நினைக்கும் நிறுவனங்கள், இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது குறித்து முடிவெடுக்கலாம். இந்த ஊக்கத் தொகைக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார். கணினியில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு தரவுகள் திருடப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. இப்போது டெக் துறையில் குறிப்பிட்ட நாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், இது இந்தியர்களுக்கு எதிராக மாறலாம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதிவிலக்குகள்: அதேநேரம் இதில் சில விதி விலக்குகளும் உள்ளன. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு முன் கடிதம் வழங்கப்பட்டிருந்தால் அதை இறக்குமதி செய்யலாம். அதற்குப் பிறகு என்றால் இறக்குமதி செய்ய உரிமம் வாங்க வேண்டும். இன்று முதல் இறக்குமதி உரிமத்திற்கு ஒரு விண்ணப்பிக்கலாம். உரிமம் பெற வர்த்தகர் இறக்குமதியாளராக இருக்க வேண்டும்.
அதேபோல ஆய்வு, சோதனை, மதிப்பீடு, பழுதுபார்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 20 பொருட்கள் வரை ஒரு பேக்கேஜில் இறக்குமதி செய்ய உரிமம் பெற தேவையில்லை.
என்ன பாதிப்பு: மத்திய அரசின் இந்த முடிவு உள்நாட்டு உற்பத்தியை நிச்சயம் ஊக்குவிக்கும். சமீபத்தில் ஜான் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ புக் என்ற லேப்டாப்பை 16,500 ரூபாய்க்கு வெளியிட்டிருந்தது. இப்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல உள்நாட்டுத் தயாரிப்புகள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த உத்தரவு வந்த உடனேயே உள்நாட்டு நிறுவனங்களின் பங்குகளின் விலையும் உயர்ந்தது. ஆம்பர் எண்டர்பிரைசஸ் 3.3%, டிக்சன் டெக்னாலஜிஸ் 5.5%, பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் 2.8% வரை உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள்: அதேபோல இந்தியச் சந்தையை ஆதிக்கம் செலுத்தி வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு சிக்கல் தான். ஒன்று அவர்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.. இல்லையென்றால் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். இது ஆப்பிள், லெனோவா, ஹெச்பி, ஆசிஸ், ஆசர், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு கடும் சிக்கலையே தரும்.
இப்போது இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான லேப்டாப்கள், கணினிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. அதை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பல டாப் நிறுவனங்கள் ஊக்கத் தொகை கோரி விண்ணப்பிக்கும் எனத் தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications