"மூளை, இதயம் இரண்டும் காலி.." ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்தால் மோசமான பாதிப்பா! அலறும் ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் இப்போது வீடுகளில் இருந்தே வேலை செய்யும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

கொரோனா காலத்தில் நாம் அனைவருமே வீடுகளில் முடங்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. அப்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அனைவருமே வீடுகளில் இருந்து வேலை செய்ய வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

How virtual meetings like Google Meet, Zoom and Teams are dangerous for brain and heart

அந்தக் காலகட்டத்தில் டிரெண்டான செயலிகள் தான் ஜூம், டீம்கள் மற்றும் கூகுள் மீட் போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்கள். அந்தக் காலகட்டத்தில் ஒரே இடத்தில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், அப்போது இதுபோன்ற செயலிகளே பெரியளவில் உதவின.

ஒர்க் பர்ம் ஹோம்: இப்போது கொரோனா முடிந்துவிட்ட போதிலும், ஊழியர்கள் குறிப்பாக ஐடி துறையில் பணியாற்றுவோர் இன்னுமே ஒர்க் பர்ம் ஹோமில் வேலை செய்யவே விரும்புகிறார்கள். இருப்பினும், இது நமது உடல் ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிக்கிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இதுபோன்ற வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குச் சிக்கலை ஏற்படுத்துவது உறுதியாகத் தெரிகிறது.

இதுதான் "முதல் ஒளி!" 1.6 கோடி கிமீ தொலைவில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்! ஒரே வியப்பு


குறிப்பாக இவை மூளை மற்றும் இதயத்தைப் பாதிப்பதாகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு முடிவுகள் நேச்சர் என்ற தளத்தில் வெளியாகியுள்ளது. நேரடியாக நடக்கும் மீட்டிங்களை காட்டிலும் வீடியோ கான்பரன்சிங் மீட்டிங்கள் அதிகம் சோர்வடை வைக்கும் வகையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்காக ஆஸ்திரியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் மூளை மற்றும் இதய செயல்பாடு சோதிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு:
இதை அவர்கள் வீடியோ கான்ஃபெரன்ஸ் சோர்வு (videoconference fatigue) என்றே குறிப்பிடுகிறார்கள். இவை மனித மூளையில் குறிப்பிடத்தக்கப் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வில் மாணவர்களின் மூளை மற்றும் இதயத்தை ஸ்கேன் செய்துள்ளனர். அதில் வீடியோ கான்பரன்சிங் அமர்வில் பங்கேற்கும் நபர்களின் நரம்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

பலருக்கும் சோர்வு மற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது. மூளையில் மட்டுமின்றி இதயத்திலும் கூட இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ கான்பரன்சிங் காரணமாக இதயத் துடிப்புகளிலும் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நேருக்கு நேர் நடக்கும் மீட்டிங்கை காட்டிலும் இவை அதிக சோர்வை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

என்ன செய்யலாம்:
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது நமது மூளை மற்றும் உடல்களில் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே வீடியோ கான்பரன்சிங்கிற்குப் பதிலாக வேறு வழிகளில் மீட்டிங் நடத்தலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும், தொடர்ச்சியாக வீடியோ கான்ரன்சிங் மீட்டிங் நடத்துவது நல்லதல்ல என்று சொல்லும் ஆய்வாளர்கள், இரு மீட்டிங்களுக்கு இடையே குறைந்தது 30 நிமிட இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், டிஜிட்டல் திரையைப் பார்த்து அதிக நேரம் வேலை செய்வோர் பாலோ செய்ய வேண்டிய குறிப்புகளையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். முதலில் வேலைகளுக்கு இடையே சிறுசிறு பிரேக் எடுக்க வேண்டும். அடுத்துக் குறிப்பாகக் கண் அழுத்தத்தைக் குறைக்க 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். அதாவது. டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகள் பார்த்து இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும்.

முழுமையாக வீடுகளிலேயே முடங்கி இருக்கும் ஒர்க் பர்ம் ஹோம் வேலையில் இருக்காமல் ஹைபிரிட் எனப்படும் மிக்ஸ்ட் மாடல் முறையில் வேலைக்கு செல்ல வேண்டும். இதுவும் அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+