தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் வரும்.. மேஜிக் செய்யும் வாட்ஸ்அப்.. ஆஹா இது வேற லெவல்ல இருக்கே! செம

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பிரபல வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக ஒரு அட்டகாசமான வசதியைக் கொண்டு வர இருக்கிறது. இது நாம் மெசேஜ் செய்யும் அனுபவத்தை மொத்தமாகப் புரட்டிப் போடுவதாக இருக்கிறது.

உலகளவில் அதிகம் பயன்படுத்தும் முக்கியமான மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் சுமார் 53 கோடி வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளனர்.

technology mobile whatsapp

யூசர்களுக்கு ஒரு மேம்பட்ட அனுபவத்தைத் தர வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் தொடர்ச்சியாகப் பல அட்டகாசமான வசதிகளைக் கொடுத்து வருகிறது.

வாட்ஸ்அப்: இதற்கிடையே வாட்ஸ்அப் நிறுவனம் அட்டகாசமான ஒரு அம்சத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. நாம் பேசினால் அதை அப்படியே டெக்ஸ்டாக டைப் செய்யும் வசதியைத் தான் இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது.

அதாவது உங்களுக்கு மெசேஜ் அனுப்பச் சோம்பேறித்தனமாக இருக்கிறது என்றால்.. நீங்கள் வாய்ஸ் நோட் அனுப்பினாலே போதும்.. இனி வாட்ஸ்அப் செயலியே அதை மெசேஜாக மாற்றி டைப் செய்து கொள்ளுமாம். இதன் மூலம் எவ்வளவு பெரிய மெசேஜ்ஜாக இருந்தாலும்.. அதை நீங்கள் சொல்லச் சொல்ல வாட்ஸ்அப் செயலியே டைப் செய்து கொள்ளும்.

அதேநேரம் இந்த வசதி இன்னும் முழுமையாக ரெடியாகிவிடவில்லை.. இது இன்னும் டெவலப்மெண்ட் ஸ்டேஜிலேயே இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, இந்த வசதியை அனைவருக்கும் ரிலீஸ் செய்ய இன்னும் சில காலம் ஆகும் என்றே கூறுகிறார்கள்.

மொழிமாற்றம் செய்யலாம்: மேலும், இதில் மொழியை மாற்றும் வசதியையும் அவர்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்றால் அதை வேறு ஒரு மொழியிலும் உங்களால் மொழிமாற்றம் செய்ய முடியும்.

அதாவது நீங்கள் தமிழில் பேசினால் போதும்.. அதை ஆங்கிலம் உட்பட எந்தவொரு மொழியிலும் உங்களால் டெக்ஸ்டாக மாற்ற முடியும். முதற்கட்டமாக ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் (பிரேசில்), ரஷ்ய மொழி மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் மட்டும் இப்படி மொழிமாற்றம் செய்யும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறது. பிறகு மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யும் வசதியைச் சேர்க்க உள்ளனராம். இதற்காகக் கூடுதல் கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மட்டும்: தற்போது ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டும் இந்த வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வேறு வேறு மொழி பேசுவோர் ஈஸியாக தொடர்பு கொள்ள இந்த வசதி பெரியளவில் பயன்படும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த வசதியைப் பயன்படுத்தக் கூடுதலாக சில டேட்டாவை மட்டும் டவுன்லோடு செய்ய வேண்டி இருக்குமாம். அதாவது நீங்கள் பேசுவதை இந்தியில் மொழிமாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான டேட்டாவை மட்டும் ஒரு முறை டவுன்லோடு செய்ய வேண்டும்.. ஆங்கிலம், ரஷ்ய மொழி என எந்த மொழியாக இருந்தாலும் இதை ஒரு முறை மட்டும் டவுன்லோடு செய்தால் போதும்.

எப்படி வேலை செய்யும்: அதேநேரம் இதுபோன்ற மொழிமாற்றம் செய்யும் போது எங்கு நமது மெசேஜ் மற்றவர்களுடன் பகிரப்படுமோ என்ற அச்சம் பலருக்கும் வரும். ஆனால், வாட்ஸ்அப் நிறுவனம் end-to-end encryption பயன்படுத்தும் நிலையில், இதிலும் அது தொடருமாம். அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜ்ஜை அதைப் பெறும் சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே படிக்க முடியும். வேறு யார் நினைத்தாலும் அதைப் படிக்க முடியாது.

மேலும், மொழிமாற்றம் செய்யும் செயல்முறையும் சம்பந்தப்பட்ட மொபைலிலேயே நடக்கும் என்பதால் அங்கும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+