Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்ல பெரியார் இருந்தார்.. நீயா நானாவில் கேரள நடிகையை வாயடைக்க வைத்த கரு பழனியப்பன் -FLASH BACK

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரின் 50 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் கரு பழனியப்பன் நீயா நானா நிகழ்வில் பெரியார் குறித்து பேசிய காணொலி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி அவர் என்ன பேசினார்? விரிவாக பார்ப்போம்.

தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரது சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மக்கள் பகிர்ந்து வரும் நிலையில், அவர் பற்றி நீயா நானா நிகழ்வில் இயக்குநர் கரு பழனியப்பன் பேசிய உரை அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின் நீயா நானாவில் சாதி தொடர்பான விவாதத்தில் சிறப்பு விருந்தினர்களாக மலையாள நடிகை பார்வதி நாயரும், இயக்குநர் கரு பழனியப்பனும் பங்கேற்று இருப்பார்கள். அப்போது பார்வதி நாயர், தனது பெயருக்கு பின்னால் சாதி பெயரை விரும்பி போட்டு இருப்பதாக தெரிவித்தார்.

6 years old video of Neeya Naana where Director Karu Palaniyappan speech about Periyar

அப்போது நெறியாளர் கோபிநாத், "கேரளா கல்வியில் சிறந்த மாநிலமாகவும், கம்யூனிசம் வேறூன்றி இருக்கும் இடமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் படித்த மக்களே முதலில் சாதி பெயரை போட மறுத்தார்கள். அங்கும் முற்போக்கு கருத்துக்கள் இருப்பதாகவே காட்டப்படுகிறது. ஆனால், அந்த மாற்றம் அங்கு ஏன் நடக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பார்வதி நாயர், "அங்கே அவ்வளவு முற்போக்கு இல்லை. கேரள மக்கள் அந்த அளவுக்கு வரவில்லை. அவர்கள் சில விசயங்களில் பழமைவாதத்தில் உள்ளனர். சாதி அமைப்பு மக்களை பிரித்து பார்ப்பதற்காக இல்லை. அவர்களின் தொழில் சார்ந்து உருவானதுதான். எல்லா சாதிக்கும் சமமான மரியாதை உள்ளது." என்றார்.

அப்போது பேசிய கரு பழனியப்பன், "தொழில் சார்ந்து சாதியால் பிரிக்கப்பட்டார்கள் என்கிறார். ஆசிரியராக, விவசாயியாக இருந்தார்கள் என்கிறார். சரி, என்னை மாதிரி கழிப்பிடம் கழுவுபவன் எங்கிருந்தான். உங்கள் வீட்டு கக்கூஸ் கழுவுறவன் எங்கிருந்தான்? அவனுக்கு ஒரு தொழில் வைத்து இருந்தீர்கள் அல்லவா? அவனை அதே தொழிலை செய்ய வைத்தீர்கள் அல்லவா.. அவன் தன் பெயருக்கு பின்னால் என்ன சாதியை போட்டுக்கொள்வான். அங்குதான் பிரச்சனை?

புத்திசாலியாக இல்லாத ஆணை ஒரு பெண் காதலிக்கப்போவது இல்லை, அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது சரி. இவ்வளவு கருத்து வைத்திருக்கும் பார்வதி நாயர் ஏன் சாதியை தன் பின்னால் வைத்திருக்கிறீர்கள்? விட்டுவிடலாமே என்று அவர் கேட்கிறார்." என்றவுடன் நாயர் என்பது என்னுடைய பெயர் என பார்வதி நாயர் சொல்வார். உடனே கரு பழனியப்பன், "உங்கள் அப்பா வேணுகோபால் பெயருக்கு பின்னால் நாயர் இல்லையே. எனக்கு அப்படி சாதி பெயர் போட வெட்கமாக உள்ளது.

நீங்கள் இவ்வளவு நேரமாக கேட்டீர்கள், கேரளாவில் இவ்வளவு விசயம் இருந்தும் சாதி பெயர் போடுகிறார்களே! இங்கு அது இல்லையே என்று... ஒரேயொரு வித்தியாசம்தான். இங்கு பெரியார் இருந்தார். அங்கு பெரியார் இல்லை. எல்லா மாநிலங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் மட்டும்தான் 60 ஆண்டுகளாக பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்வதற்கே வெட்கப்பட்டார்கள்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+