எதிர்நீச்சல் 2வில் கோலங்கள் ஆதி என்ட்ரியா? லீக்கான புகைப்படங்கள்.. இது எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான கோலங்கள் சீரியலில் ஆதி கேரக்டரில் நடித்த நடிகர் அஜய் கபூருடன் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் திருச்செல்வம் கோலங்கள், மெட்டிஒலி என்று பல சீரியல்கள் இயக்கி நடித்து இருக்கிறார். 90's கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் இவருடைய சீரியல்கள் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். அதிலும் திருச்செல்வம் கோலங்கள் சீரியலில் தொல்காப்பியன் என்ற கேரக்டரில் நடித்தது இப்ப வரைக்கும் பேசப்படுகிறது.

கோலங்கள் சீரியலில் திருச்செல்வத்திற்கு கிடைத்த பிரபலத்தை வைத்துதான் இப்போது அவர் இயக்கிய எதிர்நீச்சல் சீரியலிலும் ஜீவானந்தம் கேரக்டரில் நடித்து வந்தார். முதல் பாகம் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து இப்போது மீண்டும் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் முடிவடைந்த இடத்தில் இருந்து இரண்டாவது பாகத்தின் கதை தொடங்குகிறது.
முதல் பாகத்தில் குணசேகரன் வீட்டுப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே எதிர்நீச்சல் போட்டு போராடிக் கொண்டிருந்தார்கள். இப்போது இரண்டாவது பாகத்தில் வெளி உலகத்தில் எதிர்நீச்சல் போட இருக்கிறார்கள். இரண்டாவது பாகம் தொடங்கி ஒரு வாரம் மட்டுமே ஆகும் நிலையில் இந்த சீரியலுக்கு நல்ல டி ஆர் பி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதுபோல திருச்செல்வத்திற்கு கோலங்கள் சீரியல் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்ததுபோல அந்த சீரியலில் நடித்த தேவயானி உட்பட பல நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். அதிலும் வில்லனாக நடித்த ஆதியை சொல்லவே வேண்டாம் அவருக்கு இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என்றும் அவரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் ஆதியாக நடித்த அஜய் கபூர் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். பிரியதர்ஷினி ஏற்கனவே கோலங்கள் சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்திருந்தார். இதனால் பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் அஜய் கபூர் நடிக்கிறாரா? அதனால்தான் இவர்கள் இருவரும் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்களா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இப்போதைக்கு எதிர்நீச்சல் சீரியலில் முதல் பாகத்தில் இருந்த ஒரு சில பிரபலங்கள்தான் தொடர்கிறார்கள்.

ஜனனி கேரக்டரில் நடித்து வந்த மதுமிதாவிற்கு பதிலாக விஜே பார்வதி நடித்து கொண்டிருக்கிறார். அதுபோல புதியதாக எந்த கேரக்டரும் காட்டப்படவில்லை. அதனால் இந்த சீரியலில் புதிய கேரக்டரில் அஜய் வந்தால் சீரியல் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். ஏற்கனவே குணசேகரன் ஜெயிலில் இருப்பதாக தான் சீரியலில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இனி குணசேகரனை விடவும் பெரிய வில்லனாக ஆதி வந்தால் நல்லா இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications