என்னப்பா நடக்குது இங்க...!! பள்ளிக்கூடத்தில் இப்படியா..??மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்
சென்னை :ஒரு பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் சேர்ந்து வகுப்பறையில் கடவுள் வாழ்த்து பாடல் பாடுவது போல், விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் உள்ள ஜாலியோ ஜிம் கானா பாடலை பாடும் வீடியோ இணையத்தில் பலர் ஷேர் செய்து வருகின்றனர். எந்த பள்ளி? எதற்காக பாடுகிறார்கள்? என்று பலர் அந்த வீடியோவை ஆராய்ந்து வருகின்றனர். ஒருவேளை மாணவ மாணவிகளின் விழிப்புணர்வுக்காக அந்தப் பாடலை பாடி இருக்க கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஹிட்டான பாடல்
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திலிருந்து அரபிக்குத்து, மற்றும் ஜாலி யோ ஜிம்கான பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது. பார்க்கும் நபரெல்லாம் வாயில் முணுமுணுக்கும் வண்ணம் பாடல்கள் மக்களை கவர்ந்திருந்தது. ஜாலியோ ஜிம்கானா பாடலை கவிஞர் கார்த்திக் எழுத அனிருத் இசையமைத்திருந்தார். இந்த பாடலை விஜய் தன் சொந்த குரலில் பாடி இருந்தார். விஜயின் டான்ஸ் மற்றும் குரலுக்காக இந்தப் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பினர்.

விஜய் பாடலை பாடிய மாணவர்கள்
பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் விஜய். அதனால் விஜய் படங்களில் பாடல் வரிகளுக்கும் டான்ஸ்சுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அதே போல இந்த பாடல் வரிகளும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான மோட்டிவேஷனல் வரிகளாக இருக்கும். இந்த பாடலை ஒரு பள்ளியில் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவ மாணவியர்களும் எழுந்து நின்று பாடலில் உள்ள வரிகளை ஒன்றாக பாடுகின்றனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து போஸ்ட் செய்துள்ளார்.

தடுக்கப்பட வேண்டிய எண்ணம்
பள்ளி மற்றும் கல்லூரி குழந்தைகள் இடையே தற்பொழுது சிறிய தோல்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தலை தூக்கி வருகிறது. அதைத் தடுப்பதற்கு அரசாங்கமும் உதவி மையம், கவுன்சிலிங், போன்று பல வழிகளில் முயற்சி செய்தும் வருகிறது. இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் செயல் அதிகரித்து வரத்தான் செய்கிறது தினந்தோறும் ஏதாவது மாணவ மாணவிகளின் தற்கொலை குறித்து செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது

இதுவும் நல்ல முறை தான்
பாடலை பாடியுள்ள பள்ளியில் உள்ள ஆசிரியர் பொதுமக்கள் தங்களது மாணவச் செல்வங்கள் இடையே மோட்டிவேஷனல் கருத்துக்களை சேர்க்கும் பொருட்டு எளிய முறையாக இந்த முறையை கையாண்டிருக்க கூடும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக பாடங்களை விட திரைப்படங்களில் உள்ள பாடல்களை எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள் குழந்தைகள். அதை அடிப்படையாக வைத்து திரைப்படப் பாடல்களில் உள்ள நல்ல கருத்துக்களை மாணவர்கள் மனதில் பதிய வைப்பதற்கு இது ஒரு நல்ல முயற்சி தான் என்றும் பலர் அந்த பள்ளி ஆசிரியர்களை பாராட்டி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications