தனக்கு கிடைக்காத பாக்கியம்... தன் மகளுக்கு கொடுத்து உருகும் வெங்கட்
சென்னை : "தந்தை மடி சொர்க்கம் அடி" என்று ஒரு பாடலே உண்டு அதை நிரூபிக்கும் வகையில் வெங்கட் தன் மகளுக்கு கொடுத்து வாழ்த்து கூறியிருக்கிறார்.
தனக்கு கிடைக்காததை தன்னுடைய குழந்தைகளுக்கு கொடுப்பதுதன் பெற்றோர்களுக்கு கடமை அதை நிறைவேற்றி இருக்கும் பாண்டியன் ஸ்டோர் ஜீவாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
யாரும் செய்யாததை இவர் செய்யவில்லை என்றாலும் தன்னுடைய மகளுடன் இவர் வெளியிட்ட முதல் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது சகஜம்தான்
பொதுவாக சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, பிரபலங்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் காதல், பாசம் எல்லாம் சமமானது தான். ஆனால், பிரபலங்கள் செய்யும் ஒரு சில செயல்களிலும் ரசிகர்களின் மத்தியில் வைரலாக மாறிவிடும். அந்த மாதிரி தான் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வெங்கட் தன்னுடைய மகளுடன் சேர்ந்து எடுத்த வீடியோவை மகள்கள் தினம் வாழ்த்துக்கள் கூறி வெளியிட்டுள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தை இருக்கிறதா என்று பலர் கேட்டு வருகின்றனர்.

மடியில் மகள்
அனைவருமே கஷ்டப்பட்டு வேலை செய்வது எல்லாமே தங்களுக்காகவும் தனக்குப் பிடித்தவர்களுக்காக மட்டும் தான். அந்த மாதிரி தான் எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் கிடைக்கும் ஃப்ரீ டைமில் தன்னுடைய வீட்டில் இருப்பவர்கள் உடன் சேர்ந்து இருப்பது தான் அனைவருக்கும் பிடிக்கும் அந்த மாதிரி தான் தற்போது வெங்கட்டும் தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மடியில் மகளை தூங்க வைத்து, தனக்கு இந்த மாதிரி ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை. என்னுடைய தந்தையின் மடியில் நான் ஒருநாள் கூட இருந்ததில்லை. ஆனால், இன்று என் மகள் என் மடியில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தனக்கு கிடைக்காத பாக்கியம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில்
பதிந்துவிட்ட வெங்கட் ரங்கநாதனுக்கு பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் பெண் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இவர் இந்த சீரியலில் தன்னுடைய அண்ணன், தம்பிகளின் மீதும் மனைவி, குழந்தை மீது பாசமாக இருப்பது போன்று நடித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் உண்மையிலும் இவருடைய கேரக்டர் இப்படித்தானாம். இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவற்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். தற்போது கூட இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர் ஜீவா
ரோஜா சீரியலில் இவருடைய கேரக்டர் துணை கதாநாயகனாக தான் இருந்து கொண்டிருந்தது.ஆனாலும் அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆனால் தற்போது டைம் இல்லாத காரணத்தினால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் எதற்காக இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று தான் அதிகமானோர் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கு இதுவரைக்கும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றியை கூறி தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவாக தொடர்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மகளுடன் வெளியிட்ட வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications