நம்ப வைத்து ஏமாற்றம்! மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. சிவகார்த்திகேயன் பெருந்தன்மையான வார்த்தை
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி இப்போது சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் மன்னிப்பு கேட்டு அமீர் கான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் செய்த தவறுக்காக சிவகார்த்திகேயனிடம் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று அமீர்கான் பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
நடிகர் அமீர்கானுக்கு அறிமுகமே தேவை இல்லை. 90s காலகட்டத்தில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி இப்போது வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நம்முடைய நண்பர்களை கலாய்க்க வேண்டும் என்றால் கூட ஆமா இவரு பெரிய அமீர் கான் என்று சொல்லுவாங்க. அந்த அளவிற்கு தன்னுடைய அழகான நடிப்பாலும் பலருடைய மனதில் இடம் பிடித்த அமீர்கான் இயக்குனர் ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில் சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சித்தாரே ஜமீன் பர் திரைப்படம்
இந்த திரைப்படம் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் அமீர்கான் உடன் நடிகை ஜெனிலியாவும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 10 நாட்களில் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடித்த இருந்தது சிவகார்த்திகேயன் தானாம். ஆனால் அமீர்கான் எடுத்த முடிவால்தான் கடைசி நேரத்தில் எல்லாம் மாறி இருக்கிறது.
அமீர்கான் பேட்டி
இது குறித்து அமீர்கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது "லால் சிங் சந்தா" படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் இந்த விஷயத்தை சொன்னேன். அதற்கு அவர் நீங்க நடிகராக இல்லாவிட்டாலும் தயாரிப்பாளராக தொடருங்கள் என்று சொல்லி இருந்தார். அதற்கு நானும் ஒப்புக்கொண்டேன். பிறகு "சித்தாரே ஜமீன் பர்" படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கலாம் என்று முடிவு செய்து சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரிடம் கதை சொல்லப்பட்டது.
மன்னிப்பு கேட்ட அமீர்கான்
பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் இருவருக்கும் கதை பிடித்து போக அவர்களிடம் கால்ஷீட் வாங்கினோம். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த படத்தின் கதை எனக்கு பிடித்து போய்விட்டது. இதனால் நாமே ஏன் அதில் நடிக்க கூடாது என்று எனக்கு சிந்தனை வந்தது. அந்த அளவிற்கு அந்த கதையின் தாக்கம் என்னை ஈர்த்துவிட்டது. இதை இயக்குனர் பிரசன்னாவிடம் கூறினேன். அவரும் அதற்கு சரி என்று சொல்லிவிட்டார். பிறகுதான் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் இருவரிடம் இதைப் பற்றி கூறி மன்னிப்பு கேட்டேன்.
சிவகார்த்திகேயன் பெருந்தன்மை
முதலில் அவர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தாலும் பிறகு என்னுடைய சூழ்நிலையை அவர்கள் புரிந்து கொண்டதால் சரி என்று சொல்லிவிட்டார்கள் என்று அந்த பேட்டியில் அமீர்கான் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் தமிழில் இப்போது கதை தேர்வு செய்து நல்ல படங்களில் கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது அதற்குப் பிறகு இப்போது பராசக்தி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications