ரயில்வே ஸ்டேஷனில் மகன்களுடன் ஆர்த்தி ரவி.. கெனிஷா பேச்சுக்கு கோபமான பதிவு!
சென்னை: நடிகர் ரவி மோகன் கடந்த வருடத்தில் தன்னுடைய மனைவியான ஆர்த்தி ரவியுடனான திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அப்போது ஆர்த்தி ரவி விவாகரத்திற்கு விருப்பமில்லை என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ரவி மோகன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டானதை தொடர்ந்து ஆர்த்தி ரவி நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். அதே நேரத்தில் கெனிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு வீடியோவை வெளியிட்டு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் அவருடைய மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்த செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும். அதே நேரத்தில் இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் பழகி வருகிறார், அதனால் தான் ஆர்த்தியுடன் விவாகரத்து பிரச்சனை ஏற்பட்டது என்ற வதந்திகளும் பரவி வந்தது. அதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவருமே மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

ரவி மோகன் குடும்ப பிரச்சனை
ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ரவி மோகன் பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்திருந்தார். இருவரும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்தது அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்திகள் பரவி வந்தது. அன்று மாலையே ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் இப்போதும் என்னுடைய குழந்தைகளின் அப்பா அவர் தான் (ரவி மோகன்) அவருடைய பொறுப்பில் இருந்து விலகி விட்டார் அவர் மீது தனக்கு இருக்கும் காதல் குறையவில்லை அது பைத்தியக்காரத்தனம் இல்லை என்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆர்த்தி ரவி பதிவு
அதே நேரத்தில் கெனிஷா தன்னுடைய instagram ஸ்டோரியில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் ஆர்த்திக்கு பதிலடி கொடுப்பது போன்று சில பதிவுகள் இருந்தது. இந்த நிலையில் அன்னையர் தினத்தன்று ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் நீ (மகன்) என்னை பார்க்கும் விதம் எனக்கு புரிகிறது. நான் நலமாக இருக்கிறேனா என்று சோதிப்பது போல பார்க்கிறாய்.
மகன்கள் பற்றி நெகிழ்ச்சி
நான் கவலைப்படுவது உன்னை பற்றி தான். நீ வளர்ந்து கொண்டே இருக்கிறாய் என்னால் அதனை மாற்ற முடியாது. நீ மற்ற எல்லாரையும் விட துணிச்சல் ஆனவன், இன்னும் அன்பானவன். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதை நான புரிந்து கொள்வதால் தான் நான் நேராக முதுகெலும்புடன் சண்டை இடுகிறேன். நான் பிரச்சனையை இலகுவாக அணுகுவதற்கு காரணமும் இதுதான். நீங்கள் இன்னும் சிறுவர்கள். இந்த அன்னையர் தினத்தில் நான் என்னை கொண்டாடவில்லை. என்னுடன் நடந்து செல்லும் இரண்டு ஆன்மாக்களை நான் மதிக்கிறேன். நான் ஒருபோதும் கற்பிக்க முடியாத வலிமையுடன் இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஆரன், அயன் நான் நெருப்பின் வழியாக நடந்து கொண்டிருக்கலாம் ஆனால் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications