மனோஜ் பற்றி இப்படி சொல்வது தான் வருத்தமா இருக்கு.. பாரதிராஜா அப்பாவே அப்படி சொன்னாரு! பிரபலம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவு குறித்து நடிகர் ஆதவன் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களாக சினிமா துறையில் பிரபலங்களின் மரண செய்தி அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அதிகமான பிரபலங்கள் மாரடைப்பால் இறந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் ஒருவர். மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார்.

எல்லாமே கிடைத்தது
அந்த திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார். அதுபோல இயக்குனராக வேண்டும் என்று எடுத்த முயற்சி கடந்த வருடத்தில் தான் நிறைவேறியது. மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாக இருந்தார். அந்த திரைப்படத்தில் பாரதிராஜா தான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தன்னுடைய அப்பாவை வைத்து தன்னுடைய கனவை நிறைவேற்றி இருந்தார்.
நிறைவேறாத ஆசை
ஆனாலும் கமல்ஹாசன் நடித்த சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கி எடுக்க வேண்டும் என்பது மனோஜின் பல வருட கனவு. 13 வருடங்களாக அதற்கு நான் முயற்சி செய்தாலும் அதை எடுக்க முடியாமல் இருக்கிறது கண்டிப்பாக அந்த படத்தை நான் இயக்குவேன் என்று பேசி இருந்தார். ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்று ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது.
கதறி அழுத இளையராஜா
ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்து வீட்டிற்கு வந்து ரெஸ்ட் எடுத்தபோது தான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இது அவருடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 87 வயதான பாரதிராஜாவின் கண் முன்பு அவருடைய மகன் 48 வயதிலேயே உயிரிழந்ததை பார்த்து அவர் கதறி அழுதது காண்பவரை கண் கலங்க வைத்திருந்தது.
சிறந்த மனிதர்
இந்த நிலையில் மனோஜ் குறித்து மனோஜின் நண்பரும் நடிகருமான ஆதவன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது மனோஜ் எனக்கு பல வருடங்களாக தெரியும். மனோஜ் ஒரு நல்ல அப்பாவாக இருந்திருக்கிறார். அம்மாவிற்கு மகனாக இருந்திருக்கிறார். நல்ல கணவராகவும் இருந்திருக்கிறார். மனோஜ் பற்றி அவருடைய அப்பா கூட பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
வெளியே தெரியாத விஷயம்
என்னுடைய மகன் ரொம்பவும் பாசமானவன் என்று கூறியிருக்கிறார். அதோடு சில வருடங்களாகவே அவருடைய அப்பாவை முழுமையாக கவனித்துக் கொண்டது மனோஜ் தான். ஆனால் மனோஜ் இறப்பிற்கு பிறகு எனக்கு ஒரு வருத்தம் இறந்து கொண்டே இருக்கிறது. எல்லா விதத்திலும் மனோஜ் நல்லபடியாக வாழ்ந்து இருக்கிறார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் தோற்றுவிட்டார் என்று எல்லா இடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது.
வருத்தம்
மனோஜ் அப்படி ஒன்றும் தோற்றுப் போகவில்லை. அவர் இயக்குனராக வேண்டும் என்ற அந்த கனவு கடந்த வருடத்திலேயே அவருக்கு நிறைவேறி இருக்கிறது. அவர் அவருடைய ரோலில் எல்லாவற்றிலும் சிறந்து தான் விளங்கி இருந்தார். ஆனால் தோற்றுப் போய்விட்டார் என்று சிலர் வார்த்தைக்கு வார்த்தைக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அது உண்மை கிடையாது. மனோஜ் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். எல்லோரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். அவர் எந்த இடத்திலும் உடைந்து அப்படியே உட்கார்ந்து இருந்தது கிடையாது என்று ஆதவன் பேசியிருக்கிறார்.
ஆதவனின் ஆதங்கம்
ஒரு சிலருக்கு தெரியாது என்று நினைக்கிறேன், இயக்குனராக வேண்டும் என்பதற்காக அதற்குரிய படிப்பை சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே முறையாக படித்திருக்கிறார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல் பாடி இருக்கிறார். ஒரு நல்ல இசை கலைஞர்... இப்படி மனோஜ்க்கு நிறைய திறமை இருந்தது. இதெல்லாம் தெரியாத சிலர் அவர் தோற்றுப் போய்விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவருடன் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான் மனோஜ் பற்றி முழுமையாக தெரியும் என ஆதவன் ஆதங்கப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications