அபிநய் என்னை காதலிச்சாரு! அவர் அழகை பார்த்து மறுத்தேன்! ஆனா இப்போ காதலிக்கிறேன்! கல்யாணமான நடிகை உருக்கம்
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் அபிநய் இறந்த செய்தி ரசிகர்களை ரொம்பவும் வருத்தம் அடைய செய்தது. ஒரு காலத்தில் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் சாக்லேட் பாய்யாக வந்தவர், இறக்கும் சமயத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். யாரும் இல்லாத அனாதை போல அவர் இறந்திருந்தாலும் அவருடைய இறப்பிற்கு பிறகு நடிகை ஒருவர் அபினய் தன்னை காதலித்ததாக உருக்கமாக போஸ்ட் போட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், பணக்காரராகவும் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் நிஜத்தில் அப்படி இல்லை என்பதற்கு சான்றாகவே சில நடிகர்களின் நிஜ வாழ்க்கை இருக்கிறது. அதிலும் தனுஷ் ஹீரோவா நடித்த துள்ளுவதே இளமை படத்தில் வில்லனாக நடித்த அபிநய் வாழ்க்கை பலருக்கும் பாடம்தான். முதல் படத்தில் அவர் அறிமுகமான சமயத்தில் இவர்தான் இந்த படத்தில் கதாநாயகனாக இருக்கிறார் என்று தான் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அழகாக இல்லாத தனுஷை கதாநாயகனாக மாற்றிவிட்டு ஹீரோ போல இருக்கிற அபினயை வில்லனாக மாத்திட்டங்களேன்னு பலர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்ததெல்லாம் உண்டு. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அபிநய் எப்படியும் பெரிய ஹீரோவா வருவார்க என்று தான் பலரும் யூகித்தனர். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து வந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.
ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் வெளியாகமலே இருந்து விட்டது. அந்த நேரத்தில் விளம்பரங்களில் அவர் பிசியாகிவிட்டார். தமிழில் மட்டுமல்லாமல் பல மொழி விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தான் சினிமாவில் ஒரு பெரிய நிலைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த அபிநய்க்கு வாய்ப்பு கிடைக்காதது பெரிய ஏமாற்றம். அதனால் அவர் மதுப்பழக்கத்திற்க்கு அடிமையாகி விட்டார் என்று அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஹீரோவாக ஜெயிக்க முடியவில்லை என்றாலும் டப்பிங் கலைஞராகவும் சாதித்து இருந்தார். அதிலும் பையா, துப்பாக்கி போன்ற படங்களில் இவர் டப்பிங் பேசி இருக்கிறார். இவருடைய கணீர் குரல் தான் மாஸாக இருந்தது. ஆனால் அந்த குரல் இன்று காற்றோடு காற்றாக கலந்து போய்விட்டது. சில வருடங்களுக்கு முன்பு அவர் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை செய்யும் பௌது எடுத்த போட்டோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியானது.
எப்படி இருந்த மனுஷன் இப்படி மாறிட்டாரே என்று பலரும் பேசிட்டு இருந்தாங்க. அந்த நேரத்தில் அவருக்கு பாலா, தனுஷ் போன்ற ஒரு சிலர் உதவி செய்தார்கள். ஆனாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் வீட்டில் தனியாக இருக்கும்போது காலமாகிவிட்டார். அவருடைய இறப்பில் கூட உறவினர்கள் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. திரைத்துறையை சார்ந்தவர்கள்தான் அவருடைய இறுதி சடங்கை முன் நின்று நடத்தி வைத்தனர்.
இந்த நிலையில் அபிநய் பற்றி நடிகை அஸ்வினி வெளியிட்டு இருக்கும் போஸ்ட் இன்ஸ்டாகிராமிலில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், அபிநய் என்னை உருகி உருகி காதலித்தான். அவன் காதலை நான் நிராகரிச்சுட்டேன். நான் பயப்படுகிறேன் என நினைத்து அவன் அவனுடைய அம்மாவையும் அழைத்து வந்தான். உண்மையில் அப்போதுதான் எனக்கு பயம் இன்னும் அதிகரித்தது. பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டோம். ஆனால் அவன் மீது காதல் வரவில்லை.. பயம் தான் அதிகரித்தது.
என்னுடைய பயத்திற்கு காரணம் அவனுடைய அழகுதான். இவ்வளவு அழகாக இருப்பவன் என்னை ஏன் காதலிக்க வேண்டும் என்று என் மீது தாழ்வு மனப்பான்மை வந்தது. காதல் வேண்டாம் அபி நட்பே போதும் என்றேன். மறுத்தான், எவ்வளவோ சொன்னேன் குடிப்பழக்கத்தை விடும்படி அவன் கேட்கவில்லை. அம்மா தான் பாவம் உன்னை திருமணம் செய்தால் அவன் திருந்திடுவான் நீ வருந்தாதே நான் இருக்கிறேன் என்று சொன்னார்கள்.
அவனையும் குடியை விட கெஞ்சினார், முடியாது என்று மறுத்தான். காதலா மதுவா என்ற போராட்டத்தில் மதுவை மட்டும் பற்றி கொண்டான். அன்று நடந்த சண்டையில் நான் செத்தா கூட என் முகத்தில் முழிக்காதே நீ செத்தாலும் நான் வருவேன்னு நினைக்காதே என்று சொல்லி சண்டையிட்டு பிரிந்தோம். உன்னுடன் நட்பு கூட வேண்டாம் என்று சொன்னான்.
எவ்வளவோ அம்மா முயற்சி செய்தார்கள், என் மனம் இடம் தரவில்லை அவனை ஏற்க, ஒரு கட்டத்தில் அழைத்தான். அம்மாவும் போய் சேர்ந்து விட்டார்.. நீ சொன்னதை கேட்காமல் இன்று உன் நினைவுகளோடு தவிக்கிறேன் வருகிறாயா என்று, சொல் பேச்சு கேட்காமல் நீ மதுவை நாடி என் மனதை நோகடித்தாய் மன்னித்துவிடு எனக்கு மனமாகிவிட்டது என்றேன்.
இருப்பினும் அழைத்தான், சொன்னதைப் போல் குடியால் நோயில் அவதிப்படுகிறேன் என் நிழலைக்கூட நீ பார்க்காதே கவலையும் படாதே இது எனக்கு ஒரு பாடம்.. குடியால் வாழ்பவர்களுக்கு என் வாழ்வு ஒரு பாடமாக இருக்கும் என்றான். அன்று வராத காதல் இன்று அவன் மீது வந்திருக்க, அவனோ காற்றோடு கலந்து விட்டான்" என்று அந்த பதிவில் அஸ்வினி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு இப்போ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications