திடீரென உயிரிழந்த ரசிகர்.. வீட்டிற்கே சென்ற அருண் விஜய்.. நெகிழ வைத்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அருண் விஜய் தன்னுடைய ரசிகர் மன்ற அமைப்பாளர் கடந்த வாரத்தில் காலமான நிலையில் அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் பல வருடங்களாக சினிமாவில் நிலைத்திருக்கிறார். ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக நடித்து வந்த அருண் விஜய் இப்போது வில்லன் ஆகவும் மிரட்டலான ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் தன்னுடைய உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Television Anitha

நடிகர் விஜயகுமார் வீட்டில் எல்லோரும் நடிகர்களாக இருக்கும் நிலையில் அவருடைய மகனான அருண் விஜய் 1995ஆம் ஆண்டு வெளியான "முறை மாப்பிள்ளை" என்ற படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பிரியம், கங்கா கௌரி, அன்புடன், துள்ளித் திரிந்த காலம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு பாண்டவர் பூமி திரைப்படம் பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Television Anitha

இந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் "இயற்கை" திரைப்படத்தில் இவருடைய நடிப்பு இப்ப வரைக்கும் பலரால் பீல் பண்ண வைக்கப்படுகிறது. சில காட்சிகளில் இவர் வந்திருந்தாலும் பலருடைய வெறுப்பையும் சம்பாதித்திருந்தார். அதே நேரத்தில் காதலிப்பவர்களின் பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த அருண் விஜய் "என்னை அறிந்தால்" படத்திற்கு பிறகு தான் வில்லனாகவும் உருமாறி இருந்தார்.

Television Anitha

இந்த நிலையில் அவருடைய தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற அமைப்பாளர் திரு நிர்மல் குமார் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் நேற்று மதியம் அடையாற்றில் இருக்கும் அந்த ரசிகரின் இல்லத்திற்கு நேரில் சென்று அருண் விஜய் அஞ்சலி செலுத்தி விட்டு ரசிகர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து அருண் விஜயை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+