அஸ்வினை கலாய்த்த இயக்குனர்... விக்ரம் படப்பாணியில் பதிலடி கொடுத்த அஸ்வின்
சென்னை: கொஞ்ச நாட்களாக அஸ்வினுக்கு ஓய்வு கொடுத்து வைத்திருந்த நெட்டிசன்கள் அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியை வைத்தே அவரை கலாய்த்து திரும்பவும் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.
தன்னுடைய நியாயமான கோபத்தை காட்டினாலும் தனக்கே அது ரிப்பீட் ஆவதை நினைத்து நொந்து போயிருப்பார் அஸ்வின். என்ன இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் அவருக்கான ஆதரவை எப்பொழுதும் போல் வழங்கி வரத்தான் செய்கின்றனர்.
அஸ்வின்.தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், தாங்கள் அறிவு அழகு கிடையாது, அறிவு இல்லாத அழகு என்று மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். சார்.....ரிவ்யூ பார்த்திருப்பார் என்று நம்புகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் தற்போது பலரும் பேசும் செய்தியாக இருந்து வருகிறதாம்.

ஆரம்பத்தில் அஸ்வின்
பக்கா கோயம்புத்தூர் பையன் அஸ்வின். இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் அதிகம்.பல திரைப்படங்கள்,சின்னத்திரை ஆடிஷன்கள் முயற்சி பண்ணி கொண்டு இருந்தார். ஒரு வழியாக 2015ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரையில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.அதன்பின்பு சில சீரியல்கள், திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. வரும் வாய்ப்புகளை எல்லாம் தவிர்க்காமல் எப்படியாவது முன்னேறி விடலாம் என்று முயற்சித்து வந்தார்.

ஒரே ஷோ....ஓகோ!!!...பெயர்
பெயரளவிற்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைத்து சுமாராக சென்று கொண்டிருந்து அவரது திரையுலக வாழ்க்கை. மொத்தமாக அவரது கேரியருக்கு ஏணி வைத்தார் போல் அமைந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு அஸ்வினே தன்னுடைய கிராஃப் இந்த அளவிற்கு எகிரும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கியுடன் இவர் அடித்த லூட்டியும், இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரியும் அஸ்வினை.... அஸ்வினேனனன.....என்று அனைவரும் தெரியும் அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் புகழடையச் செய்தது.

சின்னத்திரை அஜித்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை அஜித் என்று அழைக்கப்படும் அளவிற்கு புகழின் உச்சிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு குவியத் துவங்கியது.பல இயக்குனர்களும் அவரிடம் கதை சொல்வதற்காக வெய்ட்டிங் லிஸ்டில் இருந்தனர். எல்லாவற்றிற்கும் சேர்த்து சூனியம் வைத்தார் போல், தன்னுடைய பட இசை வெளியீட்டு விழாவிலேயே,உண்மையை பேசுகிறேன் என்று பேசி தனக்குத்தானே செய்வினை வைத்துக்கொண்டார். இயக்குனர்கள் கதை சொல்லும் போது தூங்கி விட்டதாக இவர் அன்றைய நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பலருக்கு அஸ்வின் மீது இருந்த மரியாதையையும், பெயரையும் தலைகீழாக புரட்டிப் போட்டது. இன்று வரை அஸ்வினின் பேச்சுக்கள் மீம்ஸ் கண்டெண்டுகளாக சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

புலம்பிய அஸ்வின்
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு இயக்குனரை பற்றி பெயரை குறிப்பிடாமல் வசைபாடியுள்ளார் அஸ்வின்.தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியின் இறுதியில் "புரிந்தவன் பிஸ்தா" என்று வேறு குறிப்பிட்டுள்ளார்.இது போதாதா..? தாங்கள் பிஸ்தா தான் என்று நெட்டிசன்கள் நிரூபித்து வருகின்றனர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளிவந்துள்ளது. அதில் அஸ்வினை கலாய்ப்பது போல் இயக்குனர் காட்சிகளை வைத்துள்ளாராம். அந்தக் கோபத்தையே இவ்வாறு டி கோடிங் பண்ணி போட்டுள்ளார் அஸ்வின் என்று புரிந்து கொண்ட சமூக வலைதள பிஸ்தாக்கள் கமெண்ட்களில் போட்டு வருகின்றனர். இறுதியில் ஏன்டா..!!? இந்த பதிவை போட்டோம்..!? என்று அஸ்வினுக்கே தோன்றும் அளவிற்கு அந்தப் பதிவையே கலாய்த்து பல கருத்துக்களை கமெண்ட்களில் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications