உயிரோடு விளையாடுவீங்களா? 4வது முறையா இப்படி பண்ணுறீங்களே? மனசாட்சி இருக்கா? நடிகர் பெஞ்சமின் எமோஷனல்
சென்னை: நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் காமெடி கேரக்டராக நடித்து பலரையும் பீல் பண்ண வைத்த நடிகர் பெஞ்சமின் சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தவறாக பரவி வரும் செய்திகள் குறித்து வருத்தமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தான் இறந்து விட்டதாக சிலர் வதந்தி பரப்புவதால் தன்னுடைய குடும்பத்தினர் படும் கஷ்டம் குறித்து பேசி இருக்கிறார்.
நடிகர் பெஞ்சமின் வெற்றிக்கொடி கட்டு, திருப்பாச்சி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய காட்சிகள் இப்போதும் பலராலும் பேசப்படும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் இவர் இறந்து போய்விட்டதாக சில youtube சேனல்களில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்து பெஞ்சமின் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் பெஞ்சமின் வீடியோ
அதில் என்னுடைய புகழை களங்கப்படுத்துவதற்காக என்னை பற்றி தவறாக செய்திகள் போட்டிருக்கிறார்கள். இது முதல் முறை அல்ல, நான்காவது முறை. திருப்பாச்சி பெஞ்சமின் இறந்து போய்விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது ரொம்ப சங்கடமாக இருக்கிறது. இதை உண்மை என்று நம்பி மக்கள் என்னுடைய வீட்டிற்கு சென்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உயிரோடுதான் இருக்கிறேன்
நான் இப்போது பரமத்தி வேலூரில் கோரைக்காரன் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த மாதிரி ஒரு சில நண்பர்கள் வியூஸ் வரவேண்டும் என்பதற்காக நடிகர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாயிருக்கிறது. இதை உண்மை என்று நம்பி எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டால் என்ன செய்வது? எனக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்து இப்போதுதான் நான் பிழைத்து இருக்கிறேன்.
பெஞ்சமின் வருத்தம்
தயவு செய்து இப்படி பரப்பாதீர்கள். எங்கள் வீட்டிலும் நான்கு பேருக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் இருக்கிறது. அதனால் இது போன்ற விஷயங்களை பரப்புவதற்கு முன்பு அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களின் நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு வேறு வழி இல்லையா? இப்படி உயிரோடு இருப்பவர்களை பற்றி தவறாக பேசி வரும் பணம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சந்தோசத்தை கொடுக்குமா? என்று பேசுகிறார்.

பேக் ஐடி தொல்லை
பொதுவாக சோசியல் மீடியா பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க ஃபேக் ஐடி மற்றும் தவறான செய்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சிலர் youtube இல் தங்களுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது குறித்து பல நடிகர்கள் தங்களுடைய வருத்தத்தையும் பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனாலும் இது போன்றவர்கள் குறைந்தபாடில்லை.
தவறான செய்தி
கடந்த வருடத்தில் காலமான நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு youtube சேனலில் மாரிமுத்து இறந்து விட்டார் என்று செய்திகள் வெளியிட்டிருந்தனர். அந்த செய்தி வந்து ஒரு சில வாரங்களிலேயே மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். இது அவருடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரிய அளவில் வருத்தமடைய செய்தது. அதுபோல இப்போது ஒரு சில நடிகர்கள் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை என்றால் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்று தவறாக பரப்பி வருகிறார்கள். இது போன்று தவறாக செய்தி பரப்புபவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications