Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நமீதாவை நான் பார்த்த காட்சி இருக்கே.. இப்பவும் மறக்க முடியல! தேவயானி மட்டும் எப்பவுமே சூப்பர்! பாக்யராஜ் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தேவயானி நடிப்பில் வெளியான நிழற்குடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பாக்கியராஜ் கலந்துகொண்டு தேவயானி மற்றும் நமீதா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தேவயானி நடிப்பில் உருவான நிழற்குடை என்ற திரைப்படத்தை சிவா ஆறுமுகம் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் தேவயாணியோடு பல சின்னத்திரை பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். அதிலும் நடிகை வடிவுக்கரசி, நடிகை கண்மணி மனோகரன், நடிகை நீலிமா ராணி போன்றோர் இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகின்ற மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Poornima Bhagyaraj

நிழற்குடை இசை வெளியீட்டு விழா

இதற்கான இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் பாக்கியராஜ் தேவயானி குறித்து பெருமையாக பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு பிறகு மூன்று பேருக்கு ரசிகர் என்று கூறியிருக்கிறார். அதோடு எனக்கு நமீதாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும். அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியிருந்தார்.

பாக்யராஜ்க்கு பிடித்த பிரபலங்கள்

நமீதாவை போல தேவயானி எனக்கு பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் இயல்பாக நடிப்பு இருக்கும். அதுபோல சீமான் உடைய பேச்சும் எனக்கு வியப்பை ஏற்படுத்தும் என்று இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த சீமான் குறித்தும் பேசி இருந்தார். பிறகு நமீதாவை பற்றி பேசும்போது நமீதாவை முதல் முறையாக சினிமா விழாவில் தான் பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் நானும் என்னுடைய மகனும் வந்து இருந்தோம்.

பாக்கியராஜ் வியப்பு

அப்போது நமீதாவை பார்த்ததும் என் மகன் சாந்தனு அவரை டைட்டாக கட்டிப்பிடித்து இருவரும் ஹாய் சொல்லிக்கொண்டனர். அப்போது நான் அருகில் உட்கார்ந்து இதை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்ததை அவர்கள் இருவரும் பார்த்து விட்டனர். பிறகு அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் என்னுடைய மகன் சாந்தனு அப்படியே தப்பித்துவிட்டார்.

நமீதாவை பார்த்த காட்சி

இன்றைக்கும் நமீதாவை நான் பார்த்தால் எனக்கு அந்த காட்சி அப்படியே கண் முன்பு வரும். அவருடைய நடிப்புக்கு நான் பெரிய ரசிகர். அதுபோல தேவயானி பற்றி பேசும்போது இந்த நிழற்குடை திரைப்படத்தை பார்ப்பதற்கு தேவையானி குழந்தை போல அன்பு வடிவமாக இருக்கிறார். அவர் இந்த படத்திற்காக மட்டுமல்ல அவர் நடிக்கும் எல்லா படத்திலும் அவருடைய முகம் அன்பாகவே காட்சி கொடுக்கும்.

இயக்குனர் ராஜகுமாரன் பற்றி பேச்சு

திரையில் தேவயானியின் முகம் அந்த அளவிற்கு தெளிவாக வைத்திருப்பார். அவருடைய முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தேவயானி அவருடைய முகத்தில் குழந்தை தனம் தெரிவதற்காக என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. இந்த திரைப்படம் தேவயானிக்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். அதுபோல தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரனை பற்றியும் பேசி இருக்கிறார். அவருடைய பெயரை எதற்காக அப்படி வைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உண்மையிலேயே அவருடைய பெயர் ராஜகுமாரனா? இல்லை இவர் சினிமாவிற்காக இந்த பெயரை வைத்துக் கொண்டாரா? என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் தேவயானிக்கு சரியான ஆள் கிடைத்திருக்கிறார் என்று பாக்கியராஜ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+