மருத்துவமனையில் இருக்கும் சாருஹாசன்.. சுஹாசினி செய்த செயல்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஆன சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருடைய மகள் சுஹாசினி அவர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் மூவருமே அண்ணன் தம்பிகள் தான். மூவரும் சினிமாவில் பல ஆண்டுகளாக தங்களுடைய திறமைகளை காட்டிக்கொண்டிருக்கின்றனர். அதிலும் கமல்ஹாசனை சிறுவயதிலிருந்தே சாருஹாசனும் அவருடைய மனைவியும் தான் வளர்த்து வந்தார்கள் என்று பல பேட்டிகளில் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.

கமல்ஹாசன் அவருடைய அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது தான் சாருஹாசனுக்கு திருமணம் முடிந்ததாம். கமல்ஹாசன் பிறந்த பிறகு சாருஹாசனின் மனைவி கமல்ஹாசனை வளர்த்து வந்ததால் அவரை கமல்ஹாசன் அம்மா என்று தான் கூப்பிடுவாராம். தன்னுடைய அண்ணனை அப்பா என்று கூப்பிடுவாராம். இது பற்றி கமல்ஹாசன் மட்டுமல்ல சாருஹாசனின் மனைவியும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் சாருஹாசன் வெள்ளித்திரை சின்னத்திரை என்று நடித்து இருந்தாலும் ஒரு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசன் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய திரைப்படங்கள் கால் சீட் ஷெட்யூல் போன்ற விஷயங்களை எல்லாம் சாருஹாசன் தான் கவனித்து இருக்கிறார். சமீபத்தில் சாருக்ஹாசன் சினிமாவை விட்டு விலகி இருக்கும் நிலையில் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

96 வயதாகும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது சாருஹாசனின் மகளான சுஹாசினி அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து தன்னுடைய தந்தையை கட்டி அணைத்தபடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் "விடுமுறையா அல்லது என் தந்தைக்கு மருத்துவமனை தங்கும் இடம் என்கிறார்களா? அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகள்களின் அன்புடனும் அக்கறையுடனும் அவர் நன்றாக இருக்கிறார் என்று சுஹாசினி பதிவு வெளியிட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாருஹாசன் அங்கு புத்தகம் ஒன்றை படித்துவிட்டு தன் பக்கத்திலேயே வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதற்கு நடிகை ராதிகா சரத்குமார், "ஹாசினி உன்னுடைய அப்பா அன்பான மனிதர். அவரை கவனித்துக் கொள்" என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். அவரை தொடர்ந்து சீரியல் நடிகை சத்யபிரியா, "விரைவில் குணமடையுங்கள் சாரு அண்ணா" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதுபோல நடிகை கனிகா, " நாம் அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம்" என்று கூறியிருக்கிறார். குஷ்பூ ஹார்ட்டின் சிம்பளை அனுப்பி இருக்கிறார். இப்படியாக பல பிரபலங்களும் அவருடைய உடல்நிலை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அதோடு அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வலிமையுடன் திரும்பி வரவேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications