“திரிஷா வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது…” விஜய்க்கு குட்டு, ஓபனாக பேசிய பார்த்திபன்
சென்னை: நடிகர் விஜய் குறித்து கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது குடும்ப வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவகாரங்கள், அரசியல் நடவடிக்கைகள், நடிகை திரிஷா Trisha Krishnan உடன் கல்யாண ஃபங்ஷனில் கலந்து கொண்டது போன்றவை இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளன.

திருமண நிகழ்ச்சியில் விஜய் - திரிஷா
சமீபத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த நிகழ்வு வெளியான நேரத்தில் விஜயின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றி விவாகரத்து தொடர்பான செய்திகள் பரவி வந்ததால், அது ரசிகர்கள் மத்தியில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பார்த்திபன் கருத்து கவனம்
இந்த சூழலில் நடிகரும் இயக்குநருமான R. Parthiban சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவர் நடித்த நடிகைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பொன்னியின் செல்வன் Ponniyin Selvan திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேட்டபோது, பார்த்திபன் கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அவர் பேசும்போது, "குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும். சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது" என்று கூறினார். இந்த கருத்து தற்போதைய வதந்திகளுக்கு மறைமுக பதிலாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதம்
பார்த்திபனின் இந்த பேச்சை சிலர் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சில ரசிகர்கள் இதை விஜயை மறைமுகமாக விமர்சித்ததாக கூறி சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஒரு ரசிகர் வெளியிட்ட பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில்,
"நடிகர் பார்த்திபனும் தனது மனைவி சீதா உடன் விவாகரத்து பெற்றவர். ஆனால் பொது வெளியில் தனது முன்னாள் மனைவியை பற்றி ஒருபோதும் அவமதிக்கும் வகையில் பேசவில்லை. அதேபோல் சீதாவும் பார்த்திபனை பற்றி தவறாக பேசவில்லை. இன்றும் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள். திரைத்துறையே அவர்களின் அந்த அணுகுமுறையை மதிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயை விமர்சிக்கும் ரசிகர்கள்
அதே பதிவில், விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன. "விஜய்க்கு அவரது மனைவியின் கண்ணீர் கூட அவ்வளவு முக்கியமில்லை என்று அவர் மேடையில் பேசுகிறார். இது பலருக்கு ஏற்றதாக இல்லை" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,"உங்களது ஆணவத்திற்கு இன்னும் பலரும் பதில் சொல்லப் போகிறார்கள். காத்திருக்குங்கள்" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடரும் சர்ச்சைகள்
இதற்கிடையில் விஜயின் குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்ததாகவும், நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்று கூறி மீண்டும் மனு தாக்கல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் அந்த விவாகரத்து மனுவில் விஜய் ஒரு நடிகை உடன் தொடர்பில் இருக்கிறார். அதனால் தான் குடும்பத்தில் பிரச்சனை என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், நடிகை த்ரிஷாவுடன் அவர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி, அதனைத் தொடர்ந்து வந்த விமர்சனங்கள், மற்றும் அரசியல் தொடர்பான பேச்சுகள் ஆகியவை சேர்ந்து தற்போது விஜயைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன.
சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் விவாதம்
மொத்தத்தில் பார்த்தால், விஜயின் குடும்ப பிரச்சனை, திரிஷாவுடன் இணைந்த நிகழ்வு, பார்த்திபனின் கருத்து, ரசிகர்கள் வெளியிடும் பதிவுகள் - இவை அனைத்தும் சேர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. இந்த விவகாரம் அடுத்த நாட்களில் எந்த வகையில் மாறும் என்பது குறித்து ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் கவனித்து வருகின்றனர்.
அடுத்த அடி From @rparthiepan
— Milton (@Milton_Off) March 8, 2026
நடிகர் பார்த்திபனும் தன்னுடைய மனைவியுடன் விவாகரத்து பெற்றார். ஆனால் பொது வெளியில் தனது முன்னாள் மனைவியின் மாண்பை சிதைக்கும் வகையில் எந்த ஒரு வார்த்தையையும் செயலையும் அவர் செய்ததில்லை. அவரது முன்னாள் மனைவி நடிகை சீதாவும் அப்படி தான்.
இன்னும்… pic.twitter.com/XT2Y2RPo76
-
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்!












Click it and Unblock the Notifications