என் மகன் செய்த தப்பு இதுதான்..3 வருஷம் வீணா போச்சு.. ராஜா மாதிரி இருந்தான்..ஜெயம் ரவி அப்பா வருத்தம்
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் அப்பாவான தயாரிப்பாளர் மோகன் ராஜா பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய மகன் செய்த தப்பு இதுதான். அதனால் மூன்று வருடம் வீணாக போய்விட்டது என்று வருத்தமாக பேசியிருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியோடு விவாகரத்து செய்யும் முடிவை அறிவித்தது தான். இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஹீரோவாக பலரும் பார்த்து வியந்த ஜெயம்ரவி அவருடைய குடும்ப வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். தன்னுடைய மனைவி தான் காதலித்து திருமணம் செய்தாலும் முதல் 10 வருடங்கள் தங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் மூன்று வருடங்கள் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன். எனக்கு அந்த வீட்டில் சரியான மரியாதை கிடையாது. என்னுடைய பெயரில் சொந்தமாக ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. செலவுக்கு நான் என்னுடைய மனைவியிடம் தான் பணம் வாங்குவேன். என்னுடைய வரவு செலவு எல்லாவற்றையும் என்னுடைய மனைவிதான் பார்த்துக் கொண்டிருந்தார். நான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியே போகும்போது என் கையில் பணம் இல்லாமல் தான் காரை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன் என்று பேட்டிகளில் பேசியிருந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அதே நேரத்தில் ஜெயம் ரவியின் மனைவி இதையெல்லாம் மறுத்து இருக்கிறார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்கும்போது ஜெயம் ரவியின் அப்பாவான மோகன் ராஜா சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகர் சித்ரா லட்சுமணன் உடன் தன்னுடைய குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அப்போது தன்னுடைய மகன் ஜெயம் ரவி குறித்தும் பேசியிருக்கிறார். நான் உடம்பு சரியில்லாத நேரத்தில் தான் என்னுடைய மகன் பிறந்தான்.
ஆரம்பத்தில் நன்றாக இருந்த நிலையில் எனக்கு திடீரென்று கை, கால் இழுத்து வைத்து விட்டது. அப்போது என்னுடைய மகன் பிறந்த அடுத்த நாளே என்னுடைய உடலில் மாற்றம் தெரிந்தது. பிறகு ஒரு நாட்டு வைத்தியரின் உதவியால் நான் பழைய நிலைக்கு குணமாகி இருந்தேன். அவன் பிறந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தது.
என்னுடைய மகன் ஸ்கூலில் படிக்கும்போது அங்கு இருக்கும் நண்பர்கள் அவனை ஹீரோ போல நடத்த தொடங்கி விட்டார்கள். எப்போதும் எந்த பங்க்ஷன் நடந்தாலும் அதில் ஜெயம் ரவி இல்லாமல் இருக்க மாட்டான். பள்ளியில் டான்ஸ் ப்ரோக்ராமாக இருந்தாலும் சரி விளையாட்டுப் போட்டிகளாக இருந்தாலும் சரி அதில் முதலாக ஜெயம் ரவி வந்துவிடுவார்.
அதனால் இதுதான் இவனுடைய வாழ்க்கை என்று முடிவெடுத்து அவருக்கு ஆறு வயது இருக்கும் போதே பரதநாட்டியம் கிளாஸில் சேர்த்து விட்டேன். நான் நினைத்தது போல என்னுடைய மகன் நன்றாகவே டான்ஸ் ஆடிவிட்டான். அதற்குப் பிறகு 12 வயதில் ஒரு அரங்கேற்றம் நடத்தினேன். அப்போது கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர் என்னை பார்த்து இவர் தயாரிப்பாளர் என்று நினைத்தேன் ஆனால் ஒரு நடிகனை தயாரித்து வைத்திருக்கிறார் என்று சொன்னார்.
பிறகு 12 வயதில் பரதநாட்டியம் கிளாசை நிறுத்திவிட்டேன். காரணம் அதற்குப் பிறகு பரதநாட்டியத்தை தொடங்கினால் நடை மாறி விடும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் கனல்கன்னன் உட்பட பலர் என்னிடம் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி நீ வெளிய போயிட்டு வா என்று சொல்லுவேன். அவர்களிடமிருந்து தான் குதிரை ஏற்றம், பைட் எல்லாம் ஜெயம் ரவி கற்றுக் கொண்டார். பிறகு பம்பாயில் ஒரு கல்லூரியில் நடிப்பு கற்றுக் கொள்வதற்காக ஜெயம்ரவியை கொண்டு விட்டேன்.
அவர்கள் முதலில் சீட்டு தரமாட்டேன் என்றார்கள். நடிகர்கள் வாரிசுகள் வந்து ஒரு வருஷம் கூட நடிக்காமல் போய்விடுகிறார்கள் என்று சொன்னார்கள். நான் அப்படியெல்லாம் கிடையாது இவன் படித்து சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன். அப்போது அங்கு அவனுக்கு ஒரு தனியாக ரூம் எடுத்துக் கொடுத்து சமையல்காரையும் ரெடி பண்ணி கொடுத்து விட்டு வந்தேன். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் நடிக்கும் ஒரு நடிகராக மாறி இருந்தார்.
அதுபோல என்னுடைய மூத்த மகன் ராஜா ஆரம்பத்தில் இருந்து தயாரிப்பு மற்றும் டைரக்ஷனில் நல்ல ஆர்வம் இருந்ததால் அதற்காக நான் அவரை தயார்படுத்திக் கொண்டு இருந்தேன். ஆனால் நான் சொல்லியும் கேட்காமல் மூன்று வருஷம் இயக்குனர் ஆவதற்கு படிக்கப் போறேன் என்று வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிவிட்டார். என்ன அவர் என்னிடமிருந்து இருந்தாலே ஒரு தயாரிப்பாளராக மாறியிருக்க முடியும். பலர் நம்மிடமிருந்து தயாரிப்பாளராக இருக்கிறார்கள் ஆனால் ராஜா நான் படித்தே ஆகவேண்டும் என்று சொல்லி படித்து முடித்தார் என்று தன்னுடைய இரண்டு மகன்கள் பற்றியும் மோகன் ராஜா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications