கார் விபத்தில் மனைவியுடன் சிக்கிய நடிகர் ஜீவா.. சின்ன சேலம் அருகே நடந்த அசம்பாவிதம்
சென்னை: நடிகர் ஜீவா இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் கள்ளக்குறிச்சி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா இன்று தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற கார் கள்ளக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே பைக்கு ஒன்று வந்துள்ளது.

பைக் மீது கார் மோதாமல் இருப்பதற்காக காரை திசை திருப்பிய போது நிலை தடுமாறி கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் லேசான காயத்தோடு உயிர் தப்பி இருக்கின்றனர்.
கார் நடு ரோட்டில் உருண்டதால் காரில் அதிகமாக அடிபட்டு இருக்கிறது. ஜீவாவுக்கும் அவருடைய மனைவிக்கும் காயம் ஏற்பட்டிருந்தாலும் ஜீவா அவருடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து வேறு ஒரு காரை வரவழைத்து அந்த காரில் அவரே சேலம் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஜீவாவிற்கு அடிபட்டு இருக்கிறது என்று தெரிந்ததும் அங்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் கூட தொடங்கி விட்டதால் ஜீவா அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பி போய் விட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தேனியில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு வந்திருந்த ஜீவா ஹேமா கமிட்டி குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்கள் ஜீவாவிடம் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு ஜீவா நான் நல்ல ஒரு விஷயத்திற்கு வந்திருக்கிறேன். நல்லதை தொடங்க இருக்கும் இடத்தில் அதைப் பற்றி மட்டும் பேசுவோம் என்று சொல்லி இருக்கிறார்.

அதுபோல மீண்டும் மீண்டும் பத்திரிக்கையாளர் அவரிடம் ஹேமா கமிட்டி மற்றும் தமிழ் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டபோது கோபப்பட்டு "உனக்கு அறிவு இருக்கா?" என்று திட்டியதும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. சில நடிகைகள் கூட நடிகர் ஜீவா தமிழ் நடிகர் தானே அப்போ தமிழ் நடிகைகள் பற்றிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மாட்டாரா? சினிமா நடிகைகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்டால் அதற்கு அவர் சக நடிகராக விளக்கம் கொடுக்காமல் எதற்காக தட்டிக் கழிக்கிறார் என்று கேள்வி எழுப்பி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் தந்தை பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி சவுத்ரி தான் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பாபா லக்ஷ்மணன், நான் வறுமையில் இருக்கிறேன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்று வீடியோ ஒன்றில் பேசி இருந்ததை தெரிந்துகொண்டு ஜீவா எனக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி கொண்டே இருக்கிறார்.
நான் கேட்காமலே எனக்காக ஜீவா உதவி செய்து கொண்டிருக்கிறார். ஒரு மாதம் கூட நான் அவரிடம் எனக்கு பணம் வேண்டும் என்று கேட்டதில்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் சரியாக எனக்கு பணம் அனுப்பி விடுகிறார் என்று பேசியதும் பலரையும் வியக்க வைத்திருந்தது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications