கூலிங் கிளாஸ் போட்ட பிரபலமா? கிருஷ்ணாவுக்கு போன வாரம்தானே கல்யாணம் ஆச்சு? சிக்கும் நடிகர், நடிகைகள்?
சென்னை: ஸ்ரீகாந்த் போதைப்பொருளை பயன்படுத்தியதாகவும், கிருஷ்ணா போதைப்பொருளை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்ததாகவும் இவர்களுக்கு சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கிருஷ்ணா, கெவின் இருவரையும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்கியுள்ள கெவின் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "கெவின் என்பவரின் வீட்டுக்கு சென்றால், எல்லாவிதமான போதைப்பொருளும் வைத்திருக்கிறார்.. ஹோல்சேல் மார்க்கெட் போல ஸ்டாக் வைத்திருக்கிறார்..

1 கிராம் போதை மருந்து 12 ஆயிரம் என்கிறார்கள்.. நூலளவுக்கு வெயிட் மிஷினில் அளந்து அளந்து தருவாராம் இந்த கெவின்.. முக்கிய மாஃபியா கும்பலுடன் தொடர்புடையதாக கூறி போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
யாரிந்த கெவின்
கொரோனா காலத்தில், டாஸ்மாக் மூடப்பட்டிருந்ததால், இதுபோன்ற போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரித்ததாக சொல்கிறார்கள். . லாக்டவுன் வெளியே வர முடியாது என்பதால், பலரும் வாட்ஸ்அப் குரூப் வைத்து, இதனை செயல்படுத்தி வந்திருக்கிறார்கள்.. அதிலும் Code word மூலமே பயன்படுத்தப்பட்டுள்ளது..
இப்போது கிருஷ்ணாவை கைது செய்யும்போதுகூட இந்த code wordதான் வெளியே வந்துள்ளது. ஸ்ரீகாந்த் கைது என்றதுமே கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார்.. பிறகு உடனே வாட்ஸ்அப் மெசேஜ், சேட்டிங் உட்பட அனைத்தையும் 2022 முதல் 2026 வரையிலான தடயங்களை, ஆதாரத்தை அழித்துவிட்டார் கிருஷ்ணா.. ஆனாலும், போலீசார் அழிக்கப்பட்ட மெசேஜ்களை மொத்தமாக எடுத்துவிட்டார்கள்.
அதில் உள்ள மெசேஜ்களை பார்த்து போலீசாரே அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.. பல முக்கிய பிரபலங்கள், தொழிலதிபர்களின் வாரிசுகள், வசதியான இளைஞர்கள் என பலரும் வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளார்கள்.. இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இப்போது கெவின் சிக்கியுள்ளதால், அவர் மூலம் மேலும் பலர் சிக்கலாம் என்கிறார்கள்.
போதையை மறைப்பதற்காகவே, சில பிரபலங்கள் கூலிங் கிளாஸ் போடுவதாக சொல்கிறார்கள்.. அப்படி கணிக்க முடியாது.. சிலர் எவ்வளவுதான் மது குடித்தாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியாது.. ஆனால் கொகைன் என்பது சின்தடிக் போதைப்பொருள் என்பதால், அதை பயன்படுத்தும்போது சிறிதும் வாசனை வராது என்பதால், அது போன்றவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
சினிமாவில், தற்போது தொழில் செய்யும் விதமே மாறிவிட்டது.. பகல் முழுவதும் தூங்கிவிட்டு, இரவு நேரங்களில் வேலை பார்க்கிறார்கள்.. ஆனால் பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் தூங்குவதைதான் இயற்கை நமக்கு சொல்கிறது. சினிமாவில் இந்நிலைமை தலைகீழாகிவிட்டதும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு ஒரு காரணமாகிறது.
ஒரு வாரம்தான் ஆகிறது
போன வாரம்தான் கிருஷ்ணாவுக்கு திருமணமாகியிருக்கிறது.. இத்தனைக்கும் கிருஷ்ணாவின் மனைவி ஒரு டாக்டர் ஆவார்.. சில நாட்கள் போயிருந்தால், அவரே இதை கண்டுபிடித்திருப்பார்.. ஒரு வாரத்தில் இப்படி கைது என்றால், அந்த பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும்? பெண் கொடுத்த தகப்பனின் நிலைமை எப்படியிருக்கும்? இது வேதனையான விஷயம்தான்.
அவரது வழக்கறிஞர்கள், கிருஷ்ணாவுக்கு ஆதரவு தருகிறார்கள், கார் டிரைவர் பரிந்து பேசுகிறார்.. இப்படி கிருஷ்ணாவுக்காக போராட்டம் துவங்கப்பட்டுள்ளது..
சென்ட்டிமென்ட் கோரிக்கை
ஆனால், ஸ்ரீகாந்த்துக்கு யாருமே இல்லை.. தன்னுடைய குடும்பத்தை, மகனை காரணம் காட்டி, சென்ட்டிமென்ட்டாக அவரே ஜாமீன் கேட்டார். கருணை அடிப்படையில் நீதிபதி ஜாமீன் தரக்கூடும் என்பதால், இப்படியான கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், கிருஷ்ணா உட்பட அனைவரையும் முழுமையாக விசாரிக்காமல், இதிலிருந்து வெளிவர முடியாது.
யார் தவறு செய்திருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.. இனி அடுத்தடுத்து இந்த வழக்கின் போக்கு எப்படி செல்கிறது என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது" என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications