எங்க அம்மா மருத்துவமனையில்! ரஜினி கொடுத்த “இத்தனை” லட்சம்! ஆனால் இப்போ புரிந்தது!- லிவிங்ஸ்டன் மகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடா சன் டிவியில் ஒளிபரப்பான அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அவர் தற்போது ஒரு பேட்டியில் பேசும்போது தன்னுடைய அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது நடிகர் ரஜினிகாந்த் 25 லட்சம் கொடுத்து உதவி செய்தார். அவர்தான் எங்களுக்கு கடவுள் என்று பேசி இருக்கிறார். அதோடு சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.

ஒரு சில நடிகர்கள் சினிமாவில் கதாநாயகர்களாக ஜொலிக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா என்று கேட்டால் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் உதவிகளை எல்லாம் வெளியே வீடியோவாகவும், போஸ்ட்டுகளாகவும் வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் சிலர் செய்யும் உதவிகள் உதவி பெற்றவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரி தான் நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி வெளியே யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் அதை போட்டு உடைத்து இருக்கிறார்.

jovitaa livingston sun tv

இயக்குனராக வேண்டும் என்று சினிமாவில் முயற்சி செய்த லிவிங்ஸ்டனை நடிகர் விஜயகாந்த் தான் பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக சினிமாவில் அறிமுகப்படுத்தியிருந்தார். அதற்கு பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்ததும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய லிவிங்ஸ்டன் தன்னுடைய கனவான இயக்குனர் கனவையும் நிறைவேற்றி இருந்தார்.

ஒரு சில திரைப்படங்களில் இயக்குனராகவும் பணியாற்றிய லிவிங்ஸ்டன் இப்போது அதிகமாக திரைப்படங்களில் நடிப்பதில்லை. அதற்கு காரணம் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவரே கூறி இருக்கிறார். ஆனால் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். லிவிங்ஸ்டன் போலவே அவருடைய மகள் ஜோவிடாவும் நடிகையாக மாறி இருக்கிறார். பாடல், நடனம் என்று அசத்தி கொண்டிருக்கும் ஜோவிடா சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

jovitaa livingston sun tv

அதைத் தொடர்ந்து அருவி சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்புதான் முடிவடைந்தது. விரைவில் ஜோவிடா நடிக்கும் புதிய சீரியல் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் தான் அவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் என்னை பொறுத்த வரைக்கும் சினிமா வாழ்க்கை தான் ரொம்பவும் கஷ்டமானது என்று சொல்வேன்.

எல்லா வேலையும் கஷ்டமானதாக இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அதை வெளியே காட்ட முடியும். ஆனால் சினிமாவில் இருப்பவர்களால் அப்படி காட்ட முடியாது. மனதிற்குள் ஆயிரம் பிரச்சனைகளோடு கஷ்டத்தோடு அழுது கொண்டிருக்கும் போது தான் சூட்டிங்கில் சிரிக்கிற காட்சிகள் வரும். அதுபோலத்தான் என்னுடைய நிஜ வாழ்க்கையில் கூட நடந்தது. நான் அருவி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன்.

அதில் கதாநாயகனோடு எனக்கு ரொமான்ஸ் காட்சிகள் சூட்டிங் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் எனக்கு என்னுடைய வீட்டில் இருந்து போன் வந்தது. என்னுடைய அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது என்றும் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்குள் ஆயிரம் எமோஷனல் வந்தது. ஆனால் அதை வெளியே காட்ட முடியாத சூழ்நிலை இருந்தது.

jovitaa livingston sun tv

அப்போதுதான் நான் என்னுடைய அம்மாவை முழுமையாக புரிந்து கொண்டேன். அம்மா அப்பா எனக்கு ரொம்பவே பிடித்தாலும் அம்மாவின் அன்பு, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் என்னை ஏதோ செய்தது. அதுபோல என்னுடைய அம்மா மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார் என்று தெரிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் எங்களுக்கு 25 லட்சம் கொடுத்தார். என்னுடைய அப்பா அதை வாங்க மாட்டேன் என்று சொன்ன பிறகும் நான் ஒரு அண்ணனாக கொடுக்கிறேன் அதை வாங்க மாட்டியா என்று உரிமையாக திட்டினார்.

அதற்கு பிறகு தான் அப்பா வாங்கிக் கொண்டார். ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகை நான். ரஜினிகாந்த் எங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு உதவி செய்திருக்கிறார். அது வெளியே தெரியாது என்று அந்த பேட்டியில் நடிகை உள்ள ஜோவிடா லிவிங்ஸ்டன் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+