15 நிமிடங்களுக்குள் நடந்தது!? கடைசியாக சொன்ன வார்த்தை.. நடிகர் மயில்சாமி பற்றி மகன் கூறிய தகவல்கள்
நடிகர் மயில்சாமி இறப்பு பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் முதல் முறையாக அன்று என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மூத்த மகன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை: நடிகர் மயில்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நடிகர் மயில்சாமி இறந்த அந்த நாளில் அவருடைய வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மூத்த மகன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் மயில்சாமி தன்னுடைய மகன்களிடம் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று பல கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கோவிலில் நடந்தது இதுதான்
நடிகர் மயில்சாமி திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருடைய இறப்பிற்கு பிறகு அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் இறப்பு பற்றி தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் அன்று என்ன நடந்தது என்பது பற்றி தற்போது அவருடைய மகன்கள் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். சனிக்கிழமை நான் அம்மா அப்பா மூவரும் தான் கோவிலுக்கு சென்றோம். அங்கே ட்ரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து அப்பாவும் கோயிலில் சந்தோஷமாக சாமி கும்பிட்டபடி பேசி சிரித்துக்கொண்டு இருந்தார். பிறகு ஒரு இரண்டரை மணிக்கு அங்கே பங்க்ஷன் முடிந்திருக்கும். அதற்குப் பிறகு வேறு ஒரு கோவிலுக்கு சிவமணி செல்ல இருக்கிறேன் என்று சொன்னதும் நானும் வருகிறேன் என்று அப்பா கூறினார். அதற்கு உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் நீங்கள் வரவேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். பிறகு சரி என்று நாங்கள் வீட்டிற்கு கிளம்பி நான்கரை மணி போல வந்து சேர்ந்தோம்.

கடைசி சாப்பாடு
வீட்டிற்கு வந்த பிறகு பசிக்கிறது ஏதாவது சாப்பிடலாமா? என்று அப்பா என்னிடம் கேட்டார். நான் சமைத்து தான் அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்தேன். அப்பா சாப்பிட்ட பிறகு நெஞ்சுக்குள்ளே நிக்கிற மாதிரி இருக்கு என்று சொன்னார். எப்போதும் இப்படி இருந்தால் ஹாட் வாட்டர் குடிப்பார். அப்படித்தான் அப்பாவுக்கு ஹாட் வாட்டர் கொடுத்துவிட்டு பிறகு கொஞ்சம் தூங்குகிறேன் என்று நான் மாடிக்கு சென்றேன். பிறகு 10 நிமிடங்களுக்குள் அம்மா வந்து அப்பாவுக்கு மூச்சு விடுவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூப்பிட்டார். உடனே கீழே வந்து பார்த்தோம் வாஷ்ரூம் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டுதான் இருந்தார். மூச்சு விட முடியவில்லை என்று சொன்னார். உடனே ஹாஸ்பிடல் போய்விடலாம் என்று காரில் நான்தான் ட்ரைவ் செய்து அப்பாவை கூட்டிக்கொண்டு போனேன்.

எல்லாமே முடிந்து விட்டது
பாதி தூரம் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென என் மீது சாய்ந்தார். எனக்கு அப்பாவை பிடித்துக் கொண்டே வண்டி ஓட்டுவதற்கு கஷ்டமாக இருந்ததால் பக்கத்தில் நின்ற ஆட்டோவில் அப்பாவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு போனாம். அங்கே போனதுமே அவர்கள் இல்லை எல்லாம் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். ஆனாலும் என்னுடைய மனது ஏற்றுக்கொள்ளாமல் தான் ராமச்சந்திரா ஹாஸ்பிடல்க்கு போன் செய்து நாங்கள் வருகிறோம் என்று கூறிக்கொண்டு அங்கே போனோம். அங்கேயும் அவர்கள் அப்பா இறந்துவிட்டார் என்று கிளாரிஃபிகேஷன் செய்த பிறகு உடனே வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டோம். இதுதான் நடந்தது. ஆனால் பலர் பலவிதமாக செய்திகளில் வெளியிட்டு இருக்கிறார்கள். அது வருத்தமாக இருக்கிறது என்று நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் கூறி இருக்கிறார்.

அப்பா சந்தோஷமான மனிதர்
மேலும் அவர் பேசுகையில் என்னுடைய அப்பா ஒரு ஹேப்பி மேன் அவர் குடிப்பதற்கு அஜித் காரணம் கிடையாது கடைசியாக மருத்துவர் குடிக்க கூடாது என்று கூறிய பிறகு பல மாதங்களாகவே மது அருந்துவதை நிறுத்தி விட்டார் அவர் எங்களிடம் எப்போதும் கூறுவது மகிழ்ச்சியாக இருங்கள் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று தான் கூறுவார் அதாவது தனக்கு எடுத்துக் கொண்டு மீதம் இருப்பதை பூட்டி வைக்காமல் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா பலருக்கு உதவி செய்து கொண்டிருந்தார் அவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள பிறகு எங்களால் முடிந்ததை நாங்களும் அப்பாவை போல உங்களுக்கு செய்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

15 நிமிடத்தில் முடிந்து விட்டது
அவரைத்தான் நானும் பாலோ பண்ணுகிறேன். அது மட்டும் இல்லாமல் விவேக் சார் மறைந்த போது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த நிலையில் எங்களுடைய அப்பாவும் மறைந்து விட்டார். அவர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவர் வெளியே படப்பிடிப்புக்கு சென்று இருக்கிறார் என்று தான் நினைத்துக் கொள்வோம். ஏனென்றால் அனைத்தும் 15 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. நான்கரை மணி வரையில் நன்றாகத்தான் இருந்தார்.4. 45 மணி யிலிருந்து 5 மணிக்குள் இவை நடந்து முடிந்து விட்டது. அவர் மறைந்தது வருத்தமாக இருந்தாலும் அவர் எங்களோடு தான் எப்போதும் இருக்கிறார் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?











Click it and Unblock the Notifications