சொந்த குரலில் பேசாததற்கு காரணமே அந்த நபரா? மொட்டை அடிச்சு விட்டுட்டாங்க..! நடிகர் மோகன் ஓப்பன்
சென்னை: நடிகர் மோகன் தான் நடித்த திரைப்படங்களில் சொந்த குரலில் பேசி இருக்க மாட்டார். அவருக்கு இன்னொருவர் டப்பிங் பேசியிருப்பார். ஆனால் சமீபத்தில் அவர் தொடர்ச்சியாக யூடியூபில் பேட்டி கொடுத்து வரும் நிலையில் இவருடைய குரலே நன்றாக தானே இருக்கிறது? எதற்காக இவர் டப்பிங் பேசாம விட்டுட்டாரு என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஆரம்பத்தில் என்ன நடந்தது? எதனால் தனக்கு டப்பிங் கொடுக்கப்பட்டது என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மோகன் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் தமிழ்ல நடிக்க முதல் முதலாக கையெழுத்து போட்ட படம் கே. பாலச்சந்தர் சாரோட மரோசரித்ரா தமிழ் ரீமிக்ஸ் அலைகள் எழுதிய கவிதைகள் படத்திற்காகத்தான்.

இந்த படப்பிடிப்பு தள்ளி போயிட்டே இருந்து. அந்த நேரத்தில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் தெலுங்குல நடிக்க கூப்பிட்டாங்கன்னு போயிட்டேன். அந்தப் படத்தில் கடைசியா எனக்கு மொட்டை அடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல உட்கார்ந்து போகிற காட்சியை படமாக்கி அனுப்பி விட்டுட்டாங்க. அந்த நேரத்தில் தமிழில் k பாலச்சந்தர் சார் படத்துக்கான ஷெட்யூல் போட்டுட்டாரு.
நான் அவர் முன்பு போய்நிற்கும்போது மொட்டை அடிச்சிருந்ததை பாத்துட்டு யாரைக் கேட்டு மொட்டை அடிச்சேன்னு கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுனாரு. அப்போ நான் இங்கே ஷுட்டிங் தள்ளி போயிட்டே இருந்துச்சுல்ல சார். அந்த நேரத்தில் தெலுங்கில் நடிக்க கூப்பிட்டதும் போயிட்டேன், கடைசியில் இப்படி ஆகிவிட்டது என்று அவரை சமாதானம் செய்தேன். பிறகு அவரே முடி வளரட்டும் என்று ஷூட்டிங்கை தள்ளி வச்சாரு.
அந்த நேரத்தில் திரைப்படம் மரோசத்திரா ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆயிடுச்சு. அதனால இதை இனி பண்ணுனா இப்போதைக்கு நல்லா இருக்காது. பிறகு பார்த்துக்கலாம் என்று பாலச்சந்தர் சார் சொல்லிட்டாரு. அதற்குப் பிறகு மகேந்திரன் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நடிக்க ஆள் தேடின போது அனந்து சார் தான் என்னை ரெக்கமண்ட் பண்ணுனாரு. அதற்குப் பிறகு பயணங்கள் முடிவதில்லை என்ற படம் கிடைக்க அந்த நேரத்தில் பல படங்களில் பிஸியா நடித்துக் கொண்டே இருந்தேன்.
அதனால் பாலச்சந்தர் சார் அக்கினி சாட்சி, சிந்து பைரவி என பல படங்களில் கூப்பிடும் போது எனக்கு அவருக்கு கால் சீட் கொடுக்க முடியவே இல்லை. ஆனாலும் அவர் என்னுடைய படத்தில் எப்ப இருந்தாலும் நீ ஹீரோன்னு சொல்லுவாரு. என்று அந்த பேட்டியில் மோகன் பேசி இருக்கிறார். மூடுபனி என்ற படத்தில் மூலமாக மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அவருக்கு அந்த நேரத்தில் சரியாக தமிழ் பேசத் தெரியாதாம்.
அதோடு அவர் கன்னடர் என்பதால் அவர் பேசும் தமிழ் மக்களுக்கு புரியாது என்று அவருடைய முதல் படத்திலிருந்து அவரை டப்பிங் பேச வேண்டாம் என்று சொல்லி வேறு ஒருவர் மூலமாக டப்பிங் பேச வைத்திருக்கிறார்கள். அதுவும் சுரேந்திரன் என்பவர்தான் மோகனுக்கு முதல் படத்திலிருந்து அதிகமான படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார். அது குறித்து ஒரு பேட்டியில் சுரேந்திரன் பேசும்போது என்னுடைய குரலால் தான் மோகனுக்கு வெற்றி கிடைத்தது என்று சொல்லி இருந்ததாக கூறப்படுகிறது.
அதனால் ஒரு கட்டத்தில் கோபமான மோகன் மூன்று படங்களுக்கு தொடர்ச்சியாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். அதற்கு கூட கலைஞர் கருணாநிதி தான் காரணம் என்றும் மோகன் ஒரு இடத்தில் கூறியிருந்தார். உன்னால் நன்றாகவே தமிழில்பேச முடிகிறது. நீ எதற்காக டப்பிங் பேசுறது இல்ல? உன்னுடைய சொந்த குரலில் பேசினால் தான் மக்களிடம் நீ நெருக்கமாக முடியும் என்று அவர் சொன்னதால்தான் நான் டப்பிங் பேசினேன் என்று அந்த பேட்டியில் மோகன் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே மோகன் சொன்னது போல மோகன் கே பாலச்சந்திரனிடம் முதல் படத்தில் மோகன் ஒரு வேளை அறிமுகம் ஆகி இருந்தால் அவர் மோகனுக்கு தைரியத்தை கொடுத்து சொந்தமாக டப்பிங் பேச வைத்திருப்பாரோ என்ற கேள்விகள் தான் எல்லோருக்கும் எழும். காரணம் பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது நீங்க அறிமுகப்படுத்தின நடிகர்களையே தொடர்ந்து உங்க படத்துல நடிக்க வைக்கிறீர்களே என்று கேட்டதற்கு,
அவர் ஒருத்தரை அறிமுகப்படுத்தி விட்டோம் என்று விட்டு விடாமல், அவர் முகம் மக்கள் மனதில் பதிகிற வரைக்கும் நடிக்க வைக்கணும். முகம் பதிந்தால் தான் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லி இருக்கிறார். ஒருவேளை மோகனும் கே. பாலச்சந்தரிடம் அறிமுகம் ஆகி இருந்தால் ரஜினியை போல மோகனையும் சொந்த குரல்லையே தயக்கம் இல்லாமல் டப்பிங் பேச வச்சிருப்பாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications