ராதிகாவிற்காக சரத்குமாரும், நெப்போலியனும் என் மீது கோபப்பட்டாங்க.. நடிகர் எம்.எஸ் பாஸ்கர் ஓபன்
சென்னை: நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தான் சீரியலில் நடிக்கும் போது ராதிகாவிற்கு எதிராக வில்லனாக நான் நடித்ததை பார்த்து நடிகர் சரத்குமார், நெப்போலியன் போன்றோர் என் மீது கோபப்பட்டாங்க என்று சில ரகசியங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
சினிமாக்களில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்துவிடும் நடிகர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். எந்த இடத்திலும் சின்ன சொதப்பல் கூட இல்லாமல் தங்களுடைய தத்ரூபமான நடிப்பால் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து விடுகிறார்கள். அதில் ஒருவர் தான் எம்எஸ் பாஸ்கர். அவருடைய நடிப்பை சொல்லவே வேண்டாம் எத்தனையோ நடிகர்களோடு நடித்தாலும் தனக்குன்னு ஒரு சின்ன கேரக்டர் கிடைத்தால் கூட அந்த கேரக்டரில் நங்கூரம் போல மக்கள் மனதில் பதியும் வகைகள் தன்னுடைய நடிப்பை கொடுத்து விடுவார்.

பாசிட்டிவ் கேரக்டராக இருந்தாலும் சரி அல்லது நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் சரி தன்னால் ரசிகர்களை மிரள வைக்க முடியும் என்று இந்த வயதிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பாஸ்கர் நடிப்பிற்கு பல திரைப்படங்களின் கேரக்டரை எடுத்துக்காட்டாக சொல்லிக்கொண்டே போகலாம் அதிலும் பார்க்கிங் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடைவதற்கு இவருடைய நடிப்பு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
கோலங்கள் சீரியல் பாடலுக்காக அந்த நடிகர் கூப்பிட்டு சொன்ன வார்த்தை! மறக்க முடியாது.. இமான் ஓபன்
இந்த நிலையில் தான் ஆரம்ப காலகட்டத்தில் சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து எம்.எஸ். பாஸ்கர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்திருந்தேன். ஆனால் அது எனக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை. அடுத்தடுத்து வாய்ப்புகளும் வராமல் நான் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது.
அதிலும் ஆரம்பத்தில் எல்லாம் இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் என்று தான் எனக்கு காட்சிகள் இருக்கும். ஆனாலும் அதையும் விடாமல் நான் நடித்துக் கொண்டிருந்தேன். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் எனக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அந்த சீரியல் ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் ஆரம்பத்தில் அந்த சீரியலில் நான் நான்கு வாரங்கள் மட்டும் நடித்தால் போதும் என்று தான் என்னை கூப்பிட்டு இருந்தார்கள்.
அதற்குப் பிறகு அந்த சீரியலில் என்னுடைய கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தான் சீரியலில் கடைசி வரைக்கும் எனக்கு காட்சிகள் இருந்தது.
அதுபோல அந்த சீரியல் முடிவடைந்த போது நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். இந்த சீரியலில் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் எல்லோருமே ஒரு குடும்பம் போல தான் வாழ்ந்து வந்தோம். அந்த சீரியல் முடிவடைந்ததும் அதே ராடான் நிறுவனத்தின் தயாரிப்பில் செல்வி சீரியலில் நான் நடித்தேன். அந்த சீரியலில் கதாநாயகியாக ராதிகா நடித்திருந்தார்.
அந்த சீரியலில் நான் ராதிகாவை படுத்தும் பாட்டை பார்த்து நெப்போலியனும் சரத்குமாரும் என்னைத் திட்டினார்கள். உங்களை சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் ரொம்ப பிடிக்கும். ஆனா இந்த சீரியலில் பார்க்கும் போதே அடிக்கணும் என்று தோன்றுகிறது அந்த அளவிற்கு வில்லனாக இருக்கீங்க என்று என்னிடம் நேரடியாகவே சொன்னாங்க.
அதுபோல அந்த சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனைவி என்னை பார்க்கும் போதெல்லாம் உங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்கல என்று திட்டுவார். சாப்பாடு கூட வச்சு தராமல் என் மீது கோபப்படுவார். ஒருமுறை என்னுடைய மகளின் ஹெட் மாஸ்டர் என்னை கூப்பிட்டு விட்டிருந்தார். அங்க போயிருந்தபோது அவரும் நீங்கள் சீரியலில் ஏன் இந்த மாதிரி கேரக்டரில் எல்லாம் நடிக்கிறீங்களே என்று என்னிடம் கேட்டார். நான் செல்வி சீரியலில் நடிக்கும் போது பலர் திட்டி இருக்கிறார்கள் என்று எம்.எஸ் பாஸ்கர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications