எஜமான் படத்தில் நான் நடிக்கிறது ரஜினிக்கு பிடிக்கல! போன் பண்ணி அவர் சொன்ன வார்த்தை! நெப்போலியன் ஓபன்
சென்னை: நடிகர் நெப்போலியன் எஜமான் திரைப்படத்தில் நான் வில்லனாக நடித்தது ரஜினிகாந்த்க்கு பிடிக்கவில்லை என்று அதற்கான காரணம் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதோடு ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து சொன்ன விஷயம் குறித்தும் வெளிப்படையாக நெப்போலியன் பேசியிருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் "புது நெல்லு புது நாத்து" என்ற திரைப்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகி இருந்தாலும் அதைத்தொடர்ந்து ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகத்தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் கதாநாயகனாக மாறி இருந்தார். அதிலும் வயது முதிர்ந்தவராக சின்ன வயதிலேயே நடித்திருந்தார்.

எஜமான் திரைப்படத்தில் வல்லவராயன் கேரக்டரில் நடித்திருப்பார். மிகவும் கொடூரமான கேரக்டராக இருப்பார். "செத்த வீடா இருந்தா அங்கு நான் தான் பிணமாய் இருக்கணும்... கல்யாண வீடா இருந்தா நான் தான் அங்கு மாப்பிள்ளையா இருக்கணும். எந்த இடமாக இருந்தாலும் மாலையும் மரியாதையும் எனக்கு மட்டும்தான் இருக்கணும்" என்று கொடூர சிந்தனை உள்ளவராக நடித்திருப்பார்.
அதிலும் அந்த படத்தில் மீனா குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவருக்கு மருந்து கொடுத்து இருப்பார். இது திரைப்படத்திற்காக இருந்தாலும் இவருடைய சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருந்தது என்று நெப்போலியனே ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதோடு எஜமான் திரைப்படம் தனக்கு சினிமா உலகில் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. ஆனால் அந்த படத்தில் நான் நடித்தது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று அதற்கான காரணம் பற்றியும் அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், எஜமான் திரைப்படத்திற்காக ரஜினியிடம் கதை சொன்னதும் இதில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்று கேட்டிருக்கிறார். அப்போது நெப்போலியன் தான் நடிக்கப் போகிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ரஜினி அவர் இப்போதுதானே வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவரை இந்த கேரக்டரில் நடிக்க வைத்தால் அது அவ்வளவு நல்லா இருக்குமானு தெரியலையே? காரணம் இது ஒரு அழுத்தமான கேரக்டர் என்னோட வயது முதிர்ந்தது போல கேரக்டர் ஆனால் நெப்போலியன் என்னோட வயது சின்ன பையன் அவர் நடித்தால் சரியா வருமா? அவரை விட ராதாரவி போன்று பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்கலாமே என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு இயக்குனர் இல்லை இந்த கேரக்டர் நெப்போலியனுக்கு சரியாக இருக்கும். எம்ஜிஆரை விட நம்பியார் வயதில் குறைவானவர். ஆனால் நம்பியார் எம்ஜிஆருக்கு அண்ணன் ஆகவும், மாமாவாகவும் நடித்திருக்கிறார். ஒரு இளமையான தோற்றம் இருந்தால் அது நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். வேறு வழியின்றி தான் ரஜினியும் சம்மதம் சொன்னாராம். பிறகு திரைப்படம் முடிந்ததும் ரஜினி தான் கடைசியாக டப்பிங் பேசியிருக்கிறார்.
அப்போது படத்தை முழுமையாக பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பேசினார். இந்த படத்தில் என்னை விட உங்களுக்கு தான் நல்ல பிரபலம் கிடைக்கும் என்று சொன்னார். அதற்கு நான் சார் நீங்க பெரிய நடிகர் உங்களுக்கு இந்த படத்தில் இல்லனா இன்னொரு படத்தில் மதிப்பு கூடிவிடும். எனக்கு இந்த படத்தின் மூலமாகத்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். அதுபோலவே எனக்கு எஜமான் திரைப்படம் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

எல்லாமே வதந்தி.. நெப்போலியன் மகனுக்கு இப்படிதான் பெண் பார்க்கப்பட்டது.. மயோபதி மருத்துவர் விளக்கம்
ஆனால் அந்த திரைப்படத்தால் எனக்கு நிஜவாழ்க்கையிலும் பிரச்சனை வந்தது. அதாவது இந்த திரைப்படம் முடிந்த பிறகு எனக்கு பெண் பார்க்க தொடங்கினார்கள். அந்த நேரத்தில் நான் இப்போது திருமணம் செய்து இருக்கும் என்னுடைய மனைவி சுதாவை பெண் பார்க்கும் போது அவர் அவருடைய அப்பாவிடம் மாப்பிள்ளை யாரென்று விசாரித்திருக்கிறார்.
அவங்க நெப்போலியன் சினிமாவில் நடித்திருக்கிறார் என்று சொன்னபோது அவரா எனக்கு மாப்பிள்ளை? அவரு எஜமான் படத்தில் கருவில் இருக்கும் குழந்தையைக் கூட அழிச்சிருக்காரு. அவரை நான் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொன்னாராம். அதற்கு அவருடைய அப்பா சினிமா வேறு... நிஜ வாழ்க்கை வேறு.. நிஜத்தில் அவர் அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்லி புரிய வைத்திருக்கிறார், என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications