மகனை பற்றி தப்பா பேசிய டாக்டர்.. கோபத்தில் நெப்போலியன் கேட்ட கேள்வி.. இப்படியும் நடந்ததா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகனை பற்றி மருத்துவர் ஒருவர் தவறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். நெப்போலியனின் மகன் தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு திருமணம் செய்வது தவறு, அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று பலர் விமர்சனம் வைத்து வரும் நிலையில் அதற்கும் நெப்போலியன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

கடத்த சில மாதங்களாகவே நடிகர் நெப்போலியன் குடும்ப செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

television napoleon

அதில் மூத்த மகன் தனுஷ் 4 வயது வரைக்கும் நார்மலாக எல்லா குழந்தைகள் போல இருந்த நிலையில் பிறகு அவருக்கு நடையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்த போது அவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பத்து வயதிற்கு மேல் அவரால் நடக்கவே முடியாது என்றும் டாக்டர் சொல்லி இருக்கிறார்கள்.

பிறகு டாக்டர்கள் சொன்னது போலவே நடக்கவும் செய்திருக்கிறது. எத்தனையோ சிகிச்சைகள் எடுத்தும் தன்னுடைய மகனால் நடக்க முடியவில்லை என்று வேதனையிலிருந்த நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியை சார்ந்த பெண்ணோடு தன்னுடைய மகனுக்கு எங்கேஜ்மென்ட் செய்திருந்தார்.

அப்போதிலிருந்து நெப்போலியன் செயல் குறித்து சிலர் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அதாவது நெப்போலியனின் மகன் தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது, அவர் அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார், ஆனால் அவருக்கு போய் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

சிறந்த தந்தையாக தன்னுடைய மகனின் வாழ்க்கைக்காக நல்ல முடிவு எடுத்திருக்கிறார் என்று அவரை பாராட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நெப்போலியன் மகனுக்கு கடந்த வாரத்தில் ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகு பேட்டி ஒன்றில் நெப்போலியன் பேசும்போது என்னுடைய மகனைப் பற்றி பல்வேறு நெகடிவ் கமெண்ட்கள் வருகிறது. அதை எல்லாம் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

நான் என்னுடைய மகனுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய கடமைகளை செய்து இருக்கிறேன். நான் சினிமா மற்றும் அரசியலில் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். மக்களுக்கு பல உதவிகளையும் செய்து இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என் குடும்பத்திற்கு என்று நான் எதுவும் பெரியதாக செய்தது கிடையாது. இப்போதுதான் என்னுடைய குடும்பத்திற்கு நான் என்ன செய்யனுமோ அதை தந்தையாகவும், கணவராகவும் செய்து கொண்டிருக்கிறேன்.

சிலர் எங்கிருந்தோ என்னுடைய மகன் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் என்னுடைய மகனை நேரில் பார்த்ததும் கிடையாது, அவரைப் பற்றி தெரியவும் செய்யாது. அப்படி ஆனாலும் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். நான் என்னுடைய மகனை பக்கத்தில் இருந்தே வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவருக்கு என்ன திறமை இருக்கிறது என்று எனக்கு தெரியும் சமூக வலைதளத்தில் சிலர் கருத்து தெரிவிக்கலாம் என்று சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். நான் ஒரு மருத்துவரின் வீடியோவை பார்த்தேன் அவர் என்னுடைய மகனை பற்றி ரொம்பவும் தப்பாக பேசி இருக்கிறார்.

சொல்ல வேண்டும் என்றால் நான் பலருக்கு உதவி செய்திருக்கிறேன் அதுபோலத்தான் தமிழ் சினிமாவில் என் உயிர் தோழன் பாபு எனக்கு பழக்கம் இல்லாதவர். என் குருநாதர் பாரதிராஜாவின் மாணவன் என்று மட்டும் தான் எனக்கு தெரியும். 30 வருஷமா படுத்த படுக்கையாக இருந்தார். அவர் இறப்பதற்கு 4 வருஷம் முன்னாடி ரொம்ப கஷ்டப்படுறார்னு பொன்வண்ணன் சொன்னார்.

அப்போதிலிருந்து 4 வருஷமா பணம் கொடுத்து நான் உதவி செஞ்சேன். ஆனால் அவரோட சொந்தக்காரர் என்று சொல்லிட்டு ஒரு டாக்டர் என் பிள்ளையை குறை சொல்லிட்டு இருந்ததை பார்த்து நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று அந்த பேட்டியில் நெப்போலியன் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+