அக்ஷயாவுக்கு 21 வயசு தான் ஆகுது! கல்யாணம் முடிவுக்கு முன்பு இதுதான் நடந்தது! அக்கா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மருமகள் அக்ஷயாவின் அக்கா பேட்டி ஒன்றில் அக்ஷயா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். நெப்போலியனின் மகனோடு தன்னுடைய தங்கைக்கு திருமணம் எதனால் நடைபெற்றது? திருமண பேச்சு வார்த்தைக்கு பிறகு வீட்டில் என்ன நடந்தது என்பன பல விஷயங்களை அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் நெப்போலியன் மகன் திருமண விஷயம் பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு ஜப்பானில் வைத்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நெப்போலியனின் மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண் தான்.

napoleon

இந்த திருமணம் எப்படி நடைபெற்றது? அக்ஷயா திருமணத்திற்கு முன்பு சொன்ன வார்த்தை போன்ற பல விஷயங்களை அக்ஷயாவில் சகோதரி பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் என்னுடைய தங்கச்சி சின்ன வயதில் இருக்கும்போது ரொம்பவும் கோபப்படுவாங்க. ஆனால் இப்போ எல்லாம் கோபம் குறைஞ்சிடுச்சு.

ஆரம்பத்தில் எந்த முடிவும் யோசிக்காமல் எடுத்து விடுவார். அவர் ஒரு முடிவு எடுத்து அதில் கிடைத்த அனுபவத்திற்கு பிறகு தான் தன்னுடைய மனதை மாற்றிக் கொள்வார். ஆனால் இப்போது சில வருடங்களாகவே அப்படி செய்வதில்லை. எந்த விஷயம் செய்தாலும் வீட்டில் எல்லோரிடமும் பேசி தான் முடிவு எடுக்கிறார்.

நெப்போலியனின் மகன் திருமண வரன் எங்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே வந்தது. அப்போது எங்க அப்பா அம்மா எல்லோருமே அக்ஷயாவிற்கு இந்த திருமணம் செய்து வைக்க வேண்டுமா? என்று ரொம்பவும் யோசித்தார்கள். ஆனால் அக்ஷயா தான் தனக்கு இந்த திருமணம் செய்ய சம்மதம் என்று சொன்னார்.

napoleon

அப்போது நெப்போலியனின் மனைவி எங்களுக்கு போன் செய்து எங்கள் எல்லாரிடமும் தனித்தனியாக பேசினார். எல்லாரிடமும் உங்களுக்கு இந்த திருமணத்தில் சம்மதமா? என்று கேட்டார். என்னுடைய தங்கைக்கு இப்போ 21 வயது தான் ஆகிறது. திருமணத்திற்கு முன்பு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கூட வீட்டில் இருக்கும்போது இன்னும் இங்கு இரண்டு மணி நேரம்தான் நான் எந்த வீட்டில் இருக்கப் போறேன் அதற்குப் பிறகு தனுஷ் மனைவியாகிடுவேன் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.

napoleon

ஆனால் சின்ன வயதிலிருந்து அக்ஷயா இப்படி கிடையாது. இப்போ எங்களை பிரிஞ்சு போறது நினைச்சு ரொம்பவும் பீல் பண்றாங்க. நாங்களும் அக்ஷயாவை நினைத்து பீல் பண்ணுகிறோம். எனக்கு கல்யாணம் நடக்கும் போது கூட நான் இவ்வளவு வருத்தப்பட்டது கிடையாது.

இப்போ அக்ஷயா எங்களை விட்டு ரொம்ப தூரமா இருக்காங்க என்பது வருத்தமா இருந்தாலும் நெப்போலியன் குடும்பத்தினர் எங்க தங்கச்சியை நல்லா பாத்துக்குவாங்க என்ற நம்பிக்கை இருக்கிறது. திருமணத்திற்கு எங்கள் சொந்தக்காரங்க கொஞ்சம் பேர் தான் வந்தாங்க. அதற்கு காரணம் எல்லோராலும் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை, ஒரு சிலருக்கு ஹெல்த் பிரச்சனை இருந்தது.

இங்குள்ள குளிர் பலருக்கு ஒத்துக்காது என்பதாலும் வர முடியவில்லை. அதுபோல நெப்போலியன் குடும்பத்தினர் எங்களை ரொம்பவும் கேர் பண்ணி பார்த்துக்கிறாங்க. அக்ஷயாவிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்களோ? அதே அளவிற்கு பாசமும் மரியாதையும் எங்களுக்கும் கொடுக்கிறார்கள் என்று அந்த பேட்டியில் அக்ஷயாவின் சகோதரி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+