நெப்போலியன் வீட்டில் கொண்டாட்டம்.. மருமகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. மகன் வெளியிட்ட வீடியோ
சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் மற்றும் மருமகள் குடும்பத்தோடு ஜப்பானில் பொங்கல் பண்டிகை கொண்டாடி இருகிறார்கள். அப்போது எடுத்த வீடியோவை நெப்போலியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும் வில்லனாகவும் நடித்து வந்த நடிகர் நெப்போலியன் இப்போது வரைக்கும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முன்பு போல அதிகமான திரைப்படங்களில் இப்போது நடிப்பதில்லை.

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ், மலையாளம் என்று பல திரைப்படங்களில் நெப்போலியன் நடித்து வந்தார். 24 வயதிலேயே 50 வயதுக்கு மேல் உள்ள நபர் போன்ற வில்லன் கெட்டப்பில் தான் அதிகமான கேரக்டரில் நடித்து வந்தார். அதிலும் தான் அறிமுகமான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் இவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது.
அதற்கு பிறகு எஜமான் திரைப்படத்தில் இவர் பேசிய வசனங்கள் மற்றும் வில்லத்தனம் பார்ப்பவர்களை பயப்பட வைத்திருக்கும். அதிலும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "கல்யாண வீடு என்றால் நான் தான் அங்கு மாப்பிள்ளையா இருக்கணும்.. சாவு வீடு என்றால் நான் தான் பிணமா இருக்கணும்" என்ற வசனம் பிரபலமாக இருந்தது.
அதுபோல நெப்போலியன் சினிமாவில் புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியலிலும் கலக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் எம்எல்ஏவாக தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி பிறகு மத்திய அமைச்சராகவும் பதவி வசித்து இருக்கிறார். ஆனால் நடிகர் ஆவதற்கு முன்பே தன்னுடைய மாமாவான நேருவிற்கு உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

அந்த நேரத்தில் தான் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று அதற்காக முயற்சிகளை எடுத்து புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் நெப்போலியனுக்கு சுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
இதில் மூத்த மகன் தனுஷுக்கு நான்கு வயது முதலே தசை சிதைவு இருக்கிறது. பத்து வயதிற்கு பிறகு அவரால் எழுந்து நடக்க முடியாமல் ஆகிவிட்டது. ஆனாலும் தன்னுடைய மகனுக்காக தொடர்ந்து போராடிவரும் நெப்போலியன் சமீபத்தில் தான் அவருடைய மகனுக்கு திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார்.
இது பெரிய அளவில் பேசப்பட்டது. தன்னுடைய மகனை போலவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருநெல்வேலியில் மயோபதி மருத்துவமனை ஒன்றை தொடங்கி நிர்வகித்து வருகிறார். அதுபோல நெப்போலியன் சில வருடங்களுக்கு முன்பே அரசியல் மற்றும் சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் குடிப்பெயர்ந்து விட்டார்.

அமெரிக்காவில் இருந்த படி ஒரு சில திரைப்படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்காவில் ஐடி பிசினஸ் செய்து வரும் நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்தி வைத்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.
ஜப்பானில் திருமண பங்ஷனுக்காக பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். நெப்போலியனின் மருமகளின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மூலைக்கரை பட்டி தான். திருமணத்திற்கு பிறகு நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பானில் தான் இருக்கின்றனர்.
ஜப்பானுக்கு சுற்றுலா வந்த இடத்தில் தான் நெப்போலியனின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அங்கு வைத்து பொங்கல் திருநாளை நெப்போலியன் குடும்பத்தினர் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது நெப்போலியன் மருமகள் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார். அதற்கு பிறகு கணவரோடு சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நெப்போலியன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications