நடிகர் மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி.. நடிகர் பார்த்திபன் செய்த செயல்.. இப்படி ஒரு பாராட்டா!
சென்னை: காமெடி நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி என்று அதிகாலை திடீரென்று மரணம் அடைந்தார்.
நடிகர் மயில்சாமியின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் பிரபலங்கள் இப்போது வரைக்கும் தொடர்ந்து அவரைப் பற்றி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திடீர் மறைவு
அனைவரையும் தன்னுடைய காமெடி மூலமாக சிரிக்க வைத்த நடிகர் மயில்சாமி திடீரென்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரை உலகினர் மட்டுமல்லாமல் அதிகமான ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஒரு மிமிக்ரி கலைஞராகவும், நடிகராகவும் இவர் பல பேருடைய கவலைகளை மறக்க வைக்கும் மாமனிதனாக வலம் வந்து கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளையும் பிறருக்கு செய்து பலருடைய ஆசீர்வாதங்களையும் பெற்ற நபர் தான்.

நினைவேந்தல் நிகழ்ச்சி
இந்நிலையில் மறைந்த மயில்சாமிக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் சினிமாவில் பிரபல நடிகரும், இயக்குனரமாக வலம் வரும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் பார்த்திபன் செய்த செயல்
அப்போது நடிகர் பார்த்திபன் மனித நேயம் மன்றம் சார்பாக அங்குள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கியிருக்கிறார். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் "மறையா மனிதன் மயில்சாமிக்கு" என குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாராட்டப்படும் செயல்
ஏற்கனவே நடிகர் மயில்சாமியும் தன்னிடம் உதவி என்று வருபவருக்கு தன்னிடம் இருக்கும் பணங்களை தனக்காக வைத்துக் கொள்ளாமல் மொத்தமாக எடுத்து கொடுத்து விடும் நபர் தானாம். அதுமட்டுமல்லாமல் தன்னால் முடியவில்லை என்றால் தன்னுடைய நண்பர்கள் பிறரிடம் என தொந்தரவு செய்தாவது தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்து விடுவாராம். அந்த வகையில் பலருடைய பசியை நீக்கிய மயில்சாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பார்த்திபன் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்படும் பொருளாக இருக்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications