பிரபு உடம்புக்கு என்னாச்சு? சிவாஜியின் சொத்து பத்திரம்.. எடுக்கப்பட்ட சுமூக முடிவுகள்: பிரபலம் பளிச்
சென்னை: சொத்து பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களில் நடிகர் பிரபு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், விரைவில் அதிருப்திகள் நீங்கி, ஒட்டுமொத்த குடும்பத்தினருடனும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வாய்ப்புள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரபு சமீப நாட்களாக கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இதையடுத்து, அவரது மூளையில் அனீரிஸம் இருப்பதாகவும், ஒரு தமனியில் வீக்கம் இருப்பதாகவும் கண்டறிந்த டாக்டர்கள், உடனடியாக பிரபுவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்களாம்.

இதையடுத்து, பிரபுவுக்கு ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.. மருத்துவமனையில் இருந்து பிரபு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, குடும்பத்தினரின் கண்காணிப்பில் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
ஆபரேஷன்: கவலைப்பட ஒன்றுமில்லை என்று பிரபுவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்... நடிகர் பிரபு விரைவில் குணமடைய பலர் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, 2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு தந்துள்ள பேட்டியில், சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை நடந்து வந்த நிலையில், பிரபுவுக்கு மன உளைச்சல் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், "பணக்காரர், ஏழை யாராக இருந்தாலும் நோய்கள் பொதுவானது.. வயது மூப்பு காரணமாக பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்படலாம். அதேபோல சொத்து அதிகமாக சேர்ந்துவிட்டாலும் நிம்மதி போய்விடும்.
நிம்மதி போயிரும்: ஒருமுறை ரஜினியே சொன்னார், "நிறைய பணம், பொருள் சேர்ந்துவிட்டால், சொந்தக்காரர்கள் அதை போகும்போது எடுத்துட்டு போயிடுவார்களோ என்று அவர்கள் மீதே ஒருவித பயம் இருக்கும்" என்றார்.. அதுபோல சொத்துக்கள் நிறைய இருந்தாலும் மன உளைச்சலை தரும், உறவுகளுக்குள் வேற்றுமைகளை ஏற்படுத்தி விடும்.
பொதுவாக பிரபு கலகலப்பானவர்.. அந்த விஷயத்தில் அவரது அண்ணன் போல கிடையாது. உடல்நிலை குறித்து ரகசியம் காக்க வேண்டிய அவசியம் இல்லை.. வயது மூப்பு என்பது இயல்பான விஷயம்.. ரஜினி சார் ஆஸ்பத்திரியில் சென்றது முதல் அவருக்கு ஸ்டண்ட் வைத்தது, கிட்னி பிரச்சனை எல்லாமே வெளிப்படையாக தெரிந்த விஷயம்தான். அப்படியிருக்கும்போது, பிரபு விஷயத்தில் ரகசியம் காக்கும்போதுதான் தேவையில்லாமல சந்தேகங்கள் கிளம்புகிறது, வயது மூப்பு என்றால், இதயம், கிட்னி இது இரண்டில்தான் மேஜர் பிரச்சனை வரக்கூடும்.
சொத்து பிரச்சனை: சொத்துக்கள் விஷயமும், பிரபுவுக்கு மனசோர்வை தந்திருக்கலாம்.. 40 வருடங்களுக்கு முன்பு, இந்தியாவிலேயே 7வது பணக்காரர் என்று சிவாஜியை சொல்வார்கள்.. அன்று 100, 1000 ரூபாய்க்கு வாங்கிய சொத்துக்கள், இன்று கோடிக்கணக்கான மதிப்பாகிவிட்டது. சிவாஜி இருக்கும்போதே இந்த சொத்துக்களை பிரித்திருந்தால் சிக்கல் இருந்திருக்காது.
அதேபோல, தன்னுடைய தம்பி குடும்பத்தையும் தன்னுடனேயே 40 வருடங்களுக்கு முன்பு சிவாஜி வைத்திருந்தார்.. அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் சகோதரர்களுக்கும் உரிமை உண்டு. தர்மசிந்தனைபடி, நியாயத்தின்படி இவர்களுக்கும் சொத்து பிரித்து தர வேண்டியிருக்கிறது. அதேபோல, இப்போது 3ம் தலைமுறை, அதாவது பிரபு பிள்ளைகள் வரை சொத்துக்களை பிரித்து தர வேண்டியிருக்கிறது.
குற்றச்சாட்டு: இப்படிப்பட்ட சூழலில்தான், போலி உயில் மூலமாக சொத்துக்களை ராம்குமார் - பிரபு எடுத்து கொண்டதாக சகோதரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால், சகோதரிகளை அழைத்து பேசி, குறிப்பிட்ட சொத்துக்களை அவர்களுக்கு ராம்குமார், பிரபு இருவருமே பிரித்து தந்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக சமீபத்தில் தகவல் கிடைத்தது.
அதேபோல, தன்னுடைய வாரிசுகள் பிரபலமாகவில்லையே என்ற கவலையும் பிரபுவுக்கு இருக்கலாம்.. நாகேஸ்வர ராவை எடுத்துக் கொண்டால் நாகார்ஜூனா, நாக சைதன்யா இருக்கிறார்கள்.. என்.டி.ராமராவை எடுத்துக் கொண்டால், பாலகிருஷ்ணா, ஜூனியர் என்ஆர் வரை இருக்கிறார்கள். அதுபோல சிவாஜி குடும்பத்தில் யாருமே இல்லாமல் போய்விட்டார்கள்.
சிவாஜி வீடு: இன்றைக்கு சத்யராஜ் கூட பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.. ஆனால், பிரபு அந்த அளவுக்கு பிஸி இல்லை.. தன் வாரிசு பிரபலமாகவில்லையே என்ற கவலையும் அவருக்கு இருக்கலாம். அதேபோல சிவாஜி வீடு பிரிக்கப்பட்டதும், பிரபுவுக்கு மன உளைச்சலை தந்திருக்கலாம். அன்று சென்னை வரும் சுற்றுலா பயணிகள் எல்ஐசி 16 மாடி கட்டிடத்தை பார்ப்பது போல, சிவாஜியின் வீட்டை பார்க்கவும் வருவார்களாம்.
சுற்றுலா லிஸ்ட்டில் அதிகாரப்பூர்வமாக சிவாஜியின் வீடு இல்லையென்றாலும், பல பேர் இந்த வீட்டை பார்க்கவும், சிவாஜியை ஒருமுறையாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்பதற்காகவும், அவரத வீட்டு வாசலில் கூட்டங்கள் திரண்டு காணப்படும்.. 100, 200 கோடியை சிவாஜியின் சென்னை வீடு இந்நேரம் தாண்டியிருக்கும் என்றாலும், எல்லாமே பாகங்களாக பிரிந்துவிடுகிறது.
மகிழ்ச்சி கொண்டாட்டம்: சிவாஜி இருக்கும்போது பண்டிகை நாட்களில் குறிப்பாக பொங்கல் பண்டிகையின்போது, ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஒன்றாக அழைத்து கொண்டாடுவது அவரது வழக்கமாகும். ஆனால், சிவாஜிக்கு பிறகு, சொத்து பிரச்சனை காரணமாக அப்படியொரு கொண்டாட்டம் குறைந்திருந்தது. தற்போது சொத்து சிக்கல்கள் ஓரளவு தீர்ந்துள்ள நிலையில், விரைவில் பொங்கல் பண்டிகையும் வரஉள்ளதால், மீண்டும் சிவாஜி குடும்பம் ஒன்றிணைந்தால், அது அனைவருக்குமே மகிழ்ச்சிதான்" என்று சேகுவேரா தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications