என் அண்ணன் இறந்தப்போ கார்த்திக் எங்க வீட்டுல செய்த காரியம்.. நான் எதிர்பார்க்கல.. ராதாரவி எமோஷனல்
சென்னை: நடிகர் ராதாரவி தன்னுடைய அண்ணன் இறந்தபோது வீட்டிற்கு வந்திருந்த கார்த்திக் செய்த செயல் குறித்து பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார். கார்த்திக் பற்றி வெளியே தெரியாத அவருடைய உதவும் குணத்தை பற்றி ராதாரவி பெருமையாக பேசி இருக்கிறார்.
ஒரு சில நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் போது ஜாலியான கேரக்டராக நடிப்பார்கள் ஆனால் நிஜத்தில் பார்த்தால் அவர்கள் ரொம்பவும் டெரரான கேரக்டராக இருப்பார்கள். ஒரு சில நடிகர்கள் எந்த நேரத்திலும் ஒரே போலவே இருப்பார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் கார்த்திக். சினிமாவில் மட்டும் அவர் கதாநாயகனாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கூட பல உதவிகளை பலருக்கு செய்திருக்கிறார் என்று அவரிடம் உதவி பெற்ற பலர் கூறி இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் ராதாரவியும் கார்த்திக் குறித்து பெருமையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் ராதா ரவி பேசுகையில் கார்த்திக் குறித்து பலர் பலவிதமாக பேசுவார்கள். அவர் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வரவில்லை என்று சொல்வார்கள். ஆனால் அவரோடு பழகியவர்கள் அவர் குறித்து தவறாக எதுவும் பேச மாட்டார்கள். நான் பார்த்த வரைக்கும் கார்த்திக் ரொம்பவும் நல்ல மனுஷன்.
மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுவான். எனக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார். அதிலும் எங்க அண்ணன் இறந்த நேரத்தில் நடந்ததை என்னால் மறக்கவே முடியாது. எங்க அண்ணன் வாசு இறந்து போய்விட்டார். அது பற்றி நாங்க வெளியே அதிகமா சொல்லவில்லை. ஆனால் பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டது. அதற்குப் பிறகு பல பிரபலங்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
நாங்கள் அடக்கம் அடுத்த நாள்தான் வைத்திருந்தோம். அந்த நேரத்தில் அடுத்த நாள் காலையில் கார்த்திக் எங்க வீட்டிற்கு வந்தார். வந்ததும் அண்ணன் முகத்தை போய் பார்த்தாரு பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டு என் கையில் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டார். எனக்கு எதற்காக இவர் பணத்தை கொடுக்கிறார் என்று தெரியவில்லை. வேண்டாம் கார்த்திக் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் அவர் இல்லை இது நான் வாசு அண்ணன் குடும்பத்திற்காக கொடுக்க வேண்டும் என்று சொன்னார். கார்த்திக் அப்படி நடந்து கொண்டதற்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது, காரணம் என்னுடைய அண்ணன் வாசு கார்த்திக்கின் அப்பா முத்துராமனுக்கு நெருக்கமானவர். அப்பாவை போலவே கார்த்திக்கும் உதவும் குணம் உள்ளவர். என்னுடைய அண்ணன் குடும்பத்திடம் கொடுக்க சொல்லி என்னிடம் அந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கார்த்திக் அன்று தந்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது.
ஆனால் அவர் தந்தார் அதை எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. இதுபோல பல விஷயங்கள் கார்த்திக் எனக்காகவும் குடும்பத்திற்காகவும் செய்திருக்கிறார். அவருடைய அப்பா முத்துராமனிடம் உதவி பெற்றவர்கள் ஏராளமானவர்கள், அதுபோல தான் கார்த்திக்கும் என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசி இருக்கிறார்.
நடிகர் கார்த்திக்கு 80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சில வருடங்களாகவே சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் அனேகன் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய கம்பேக் வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். சமீபத்தில் வெளியான அந்தகன் திரைப்பட ட்ரெய்லரிலும் கார்த்திக் இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் குறித்தும் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications