ஆர்த்தி ரவி வெளியிட்ட அதிரடி பதிவு.. குஷ்பூ, ராதிகா செய்த செயல்! ரவி மோகனுக்கு சிக்கல்?
சென்னை: நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தி உடனான திருமண பந்தத்தில் இருந்து தான் விலகுவதாக கடந்த வருடத்தில் அறிவித்து இருந்தார். அப்போது பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் பழகி வருவதாக செய்திகள் பரவி வந்தது. அதற்கு ரவி மோகன் மறுப்பு தெரிவித்து இருந்தார். ஆனால் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கெனிஷாவுடன் ஜோடியாக ரவி மோகன் வந்திருந்தார். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆர்த்தி ரவி இதற்கு நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். அவருக்கு நடிகை குஷ்பூ மற்றும் ராதிகா உட்பட பல நடிகைகள் சப்போர்ட் செய்திருக்கிறார்கள்.
நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண பங்க்ஷன் நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பாடகி கெனிஷாவுடன் நடிகர் ஜெயம் ரவி மேட்சிங் உடையுடன், கைகோர்த்த படி வந்திருந்தார். இருவரும் ஒரே காரில் வந்திருந்தனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலானது.

ஆர்த்தி ரவி இன்ஸ்ட்டா பதிவு
இதனால் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி கோபமாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்த்தி அதில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த ஒரு வருடமாக நான் மௌனமாக இருந்து வருகிறேன், அதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பதல்ல.
பதிவுக்கு காரணம்
என் பேச்சை விட என்னுடைய குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிக முக்கியமாக என்று கருதியதால் தான் அந்த விரதம் இருந்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பழி சொற்கள் அனைத்துக்கும் மௌனமாக தாங்கிக் கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தும் நாம் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவர்களிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வந்து விடக்கூடாது என்பதால் தான்.
இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு. நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு, எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும் நம்பிக்கையுடன் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கை உதறி சென்று இருக்கிறார். பல மாதங்களாக அந்த குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன்.
குழந்தைகளின் கண்ணீர்
யாரும் அறியாமல் அந்த குழந்தைகள் சிந்தும் கண்ணீரை என் கைகள் தான் துடைத்து கொண்டிருக்கிறது. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதோரு உறவை உருவாக்கிக் கொண்டதால் பழைய உறவு இப்போது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்கு காட்சி அளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதி பறந்து விட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்றால் இப்போது அனைத்தும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்போதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன்.
ஆனால் கணக்கு போட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்று நான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில் நிற்கிறேன். இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான் தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு 10 மற்றும் 14 வயதாகிறது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு உறுதியும் மிக முக்கியம். இன்று நடந்து கொண்டிருக்கும் சட்ட விவகாரங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்.
போலி வாக்குறுதி
எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது. இன்று நான் ஒரு மனைவியாகவோ அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்யாமல் இருந்தால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும்.
இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம். உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது. அப்பா என்பது உறவு மட்டும் அல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு. இன்று நீங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் எங்கள் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
பெயர் மாறவில்லை
என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவி சாய்த்து தான் ஆக வேண்டும். எங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலம் விரும்பிகள் என்று அடையாளம் காட்டிக் கொள்பவர்களுக்கும் ஒன்று இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்தி ரவி என்ற பெயரில் தான் உள்ளது. சட்டம் முடிவு செய்யும் வரை அது அந்தப் பெயரிலே நீடிக்கும் என்று அந்த அறிக்கையில் ஆர்த்தி கூறி இருக்கிறார்.
ராதிகா கமெண்ட்
இவருக்கு நடிகைகளான குஷ்பூ மற்றும் ராதிகா உட்பட பல நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆர்த்தி ரவியின் பதிவை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு தைரியமாக இருங்கள் என்பது போன்று இமோஜி கொடுத்திருக்கிறார்.
குஷ்பூ சப்போர்ட்
அதேபோல நடிகை குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆர்த்தியின் பதிவை பகிர்ந்து ஒரு அம்மாவாக சப்போர்ட் என்பது போன்று போஸ்ட் போட்டு இருக்கிறார். அதுபோல இன்ஸ்டாகிராம் பதிவுக்கு "என்னுடைய பொண்ணு நீ இந்த நேரத்தில் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்" என்று குஷ்பூ கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
விமர்சனங்கள்
அதுபோல திவ்யா சத்யராஜ் நீங்கள் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இவர்களைப் போல பல பிரபலங்கள் ஆர்த்தி தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆறுதல் கொடுத்து வருகிறார்கள். ஆர்த்தி ரவிமோகனுடன் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் ரவி மோகன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது கெனிஷா உடன் நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றது குறித்து அதிகமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து உங்கள் பார்வை என்ன? Aarthi-க்கு வந்த ஆதரவு நியாயமானதா என்று நினைக்கிறீர்களா?












Click it and Unblock the Notifications