பயில்வான் ரங்கநாதன் அம்பிகா பற்றி தப்பா சொன்னாரு.. நானே கூப்பிட்டு பேசினேன்.. நடிகர் ரவிகாந்த் ஓபன்
சென்னை: நடிகை அம்பிகாவின் இரண்டாவது கணவர் நடிகர் ரவிகாந்த் என்று சில செய்திகள் பரவி வந்த நிலையில் அதை ரவிகாந்த் மறுத்திருக்கிறார். அதோடு அம்பிகா பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் தவறாக பேசியதற்கும் தான் அவரிடம் விளக்கம் கொடுத்ததாகவும் ரவிகாந்த் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை அம்பிகா 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலரோடு ஜோடியாக நடித்திருக்கிறார். நடிகை ராதாவின் அக்காவான அம்பிகா அந்த நேரத்தில் தன்னுடைய தங்கையோடு சேர்ந்து கூட பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் அம்பிகாவின் ஹேர் ஸ்டைலுக்கே அதிகமான ரசிகர்கள் உண்டு. புகழின் உச்சத்தில் இருக்கும்போது 1998 ஆம் ஆண்டில் பிரேம்குமார் என்ற நபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
அதற்குப் பிறகு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் கவனம் செலுத்தி வரும் அம்பிகா அதிகமான சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் அவர் நாயகி சீரியலில் பெரிய அளவில் பேசப்பட்டார்.
எல்லாமே வதந்தி.. நெப்போலியன் மகனுக்கு இப்படிதான் பெண் பார்க்கப்பட்டது.. மயோபதி மருத்துவர் விளக்கம்
தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல அம்பிகா அவருடைய கணவர் பிரேம்குமாரை விவாகரத்து செய்து பிறகு நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்ததாக செய்திகள் அந்த நேரத்தில் அதிகமாக பரவி வந்தது. அது மட்டுமல்லாமல் அம்பிகாவின் விக்கிபீடியாவில் கூட அவருடைய இரண்டாவது கணவர் ரவி காந்த் என்றும் 2000 ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் இருக்கிறது.
ஆனால் இதை நடிகர் ரவிகாந்த் மறுத்திருக்கிறார். அது பற்றி ரவிகாந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்தேன் என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் அது உண்மையல்ல. அம்பிகாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். நாங்க ரெண்டு பேருமே பக்கத்து பக்கத்து வீட்டில் தான் குடியிருந்தோம்.

நான் அம்பிகாவோடு 16 படத்தில் நான்கு மொழிகளிலும் நடித்திருக்கிறேன். எல்லா படத்தில்யுமே நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறோம். அதுபோல நாங்க பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால் ஷூட்டிங்க்கு போகும்போது இரண்டு பேரும் ஒரே காரில் போயிருக்கிறோம். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் எங்களை பார்த்ததும் அங்கிருப்பவர்கள் கிண்டலாக அதான் கணவன் மனைவி வந்துட்டாங்களே அவங்கள வச்சு அடுத்த ஷூட் தொடங்கிடுங்க என்று சொல்வார்கள்.
இதை பார்த்த பலர் தவறாக நினைத்திட்டாங்க. உண்மையில் அம்பிகா என்னை திருமணம் செய்யவில்லை. நான் அவருடைய கணவரும் இல்லை. அந்தப் பொண்ணு பாவம் அவங்க அமெரிக்காவில் பிரேம் குமார் மேனன் என்பவரை கல்யாணம் செய்தார். அவருக்கு ராம்குமார், ரிஷி குமார் இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். அவங்க நிம்மதியா இருக்கிறாங்க. அவங்களுக்கு சூட் வரும்போது வந்து நடிச்சிட்டு போவாங்க அவ்வளவுதான்.
ஆனால் இது பற்றி தெரியாத பலரும் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் இதை யாரும் நம்ப கூடாது. பயில்வான் ரங்கநாதன் கூட அம்பிகா பற்றி தவறாக பேசியிருந்தார். ஒரு பேட்டியில் பயில்வான் பேசும்போது அம்பிகாவின் கணவர் ஸ்ரீதர் என்று தவறாக சொல்லி இருந்தார். அதை பார்த்து நான் அவருக்கு போன் போட்டு அம்பிகாவின் கணவர் பெயரை நீங்க தப்பா சொல்லி இருக்கீங்க. அவர் பெயர் பிரேம் குமார் என்று விளக்கம் கொடுத்தேன்.
அதற்கு பயில்வான் ரங்கநாதன் அப்படியா எல்லோரும் இப்படித்தான் சொல்லிட்டு இருக்காங்க அதனால தான் நானும் அதே பெயரை சொன்னேன் என்று சொன்னார். இந்த மாதிரி தான் ஒருவர் தெரியாமல் ஒரு விஷயத்தை தவறாக சொல்கிறார். அதையே பலரும் பலவிதமாக தப்பு தப்பா பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று ரவிகாந்த் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications