ரெடின் கிங்ஸ்லி வீட்டில் விசேஷம்! அன்பு மகளுக்கு பெயர் சூட்டும் விழா! "அவங்க" பெயரை வச்சிருக்காரே!
சென்னை: நடிகர் ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதியின் மகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் தங்கள் செல்ல மகளுக்கு என்ன பெயர் வைத்தனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். கிங்ஸ்லி ஒரு நடனக் கலைஞரும் கூட! கோலமாவு கோகிலாதான் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

1990களில் நடன கலைஞராக ரெடின் கிங்ஸ்லி அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
நெல்சன் இயக்கத்தில் இந்த படத்தின் மூலம்தான் கிங்ஸ்லி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்திலும் நடித்திருந்தார். அது போல் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து முன்னணி கலைஞர்களுடனும் இவர் நடித்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லிக்கும் நடிகை சங்கீதாவுக்கும் 2023 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்துவர், சங்கீதா இந்து என்பதால் இரு முறைப்படியும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அண்மையில் சங்கீதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.
இந்த நிலையில் சன் டிவியில் ஆனந்தராகம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அவர் அதிலிருந்து தற்காலிகமாக விலகினார். இதையடுத்து சென்னையில் சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையாகியுள்ள ரெடின் கிங்ஸ்லிக்கு 47 வயதாகிறது. இந்த நிலையில் தற்போது அவர்களது குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகின்றன. பெயர் சூட்டும் விழா நடந்துள்ளது.
குழந்தைக்கு ஆட்லின் விக்டோரியா (Adlin Victoria) என்ற பெயரை வைத்துள்ளார். இந்த பெயர் சூட்டு விழா கோலாகலமாக நடந்தது. குழந்தையை வட்ட நிற தொட்டிலில் படுக்க வைத்திருந்தனர். கிங்ஸ்லி சங்கீதா, குழந்தை ஆகிய மூவரும் சாக்லேட் கலந்த பீச் நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர்.
குழந்தைக்கு கிறிஸ்துவ முறைப்படி பெயர் சூட்டும் விழா நடந்தது. குழந்தை அழகாக இருப்பதாகவும் குழந்தைக்கு சுத்தி போடுங்கள் என்றும் பலர் தெரிவிக்கிறார்கள். மேலும் பெயர் நன்றாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். விக்டோரியா மகாராணியின் பெயரை தனது மகள் பெயருடன் கிங்ஸ்லி இணைத்திருக்கிறார் போலும்!
சங்கீதா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். மேலும் சங்கீதாவின் தந்தை மறைவுக்கு ஆறுதல் சொல்ல வந்த கிங்ஸ்லியை பிடித்ததால் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சங்கீதா அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications