கூட்டத்திலிருந்து ஒலித்த,' ரம்மி நாயகன்’.. கடுப்பாகி சரத்குமார் செய்த செயல்.. குவியும் கருத்துக்கள்
சென்னை: பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் சரத்குமார் மாஸாக என்ட்ரியாகும் போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் "ரம்மி நாயகன்" என்று கத்தி இருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் சரத்குமார் ஒரு நிமிடம் முகம் மாறி திணறி இருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டம்
நீண்ட காலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடி கொண்டு வருகிறது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து இருக்கிறார்கள். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள்தான் நடித்து மக்கள் மத்தியில் இந்த விளையாட்டை வைரலாக்கி பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

அவசர சட்டம்
இது குறித்து சமூக வலைதளத்திலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ரம்மி உட்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த வகை விளையாட்டுகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அக்டோபர் ஒன்றாம் தேதி அரசால் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு
அதுமட்டுமல்லாமல் இந்த சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்ததால் அக்டோபர் மூன்றாம் தேதி அரசு இதழில் வெளியிடப்பட்டது. அதன்படி சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனை விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காலாவதியான சட்டம்
ஆனால் நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பிலிருந்த நிலையில் ஆளுநர் என்.ஆர். ரவி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தடை சட்டம் மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆனாலும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளையும் விமர்சித்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

எதிர்பாராத நிகழ்வு
அந்த வகையில் ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர் சரத்குமாரை அடிக்கடி கலாய்த்து வருவது வழக்கம் தான். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் அவருக்கு ரம்மி நாயகன் என்ற பெயரையும் வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சரத்குமார் கலந்து கொண்டிருந்தார். அந்த விழாவிற்கு சரத்குமார் சந்தோஷமாக மேடையில் ஏறும்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ரம்மி நாயகன் என்று கத்தி இருக்கிறார். இதை கேட்ட சரத்குமாரின் முகம் மாறி இருக்கிறது. அதை குறித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் அதிகமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications