விவாகரத்து ரொம்ப வலிக்கும்.. நல்லா யோசிச்சு முடிவெடுங்க.. நடிகை வரலட்சுமியின் அம்மா எமோஷனல்
சென்னை: நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியும் நடிகை வரலட்சுமியின் அம்மாவுமான சாயா பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து உருக்கமாக பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் திருமணம் செய்து கொள்வதற்கு வயது இதுதான் என்று குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது என்று சாயா பேசியிருக்கிறார்.
அதோடு சிலர் திருமணம் என்றால் இதற்காகத்தான் என்று தப்பான அர்த்தத்தில் திருமணத்தை செய்து கொள்வதால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது என்றும் சாயா பேசி இருக்கிறார். கடந்த ஆண்டு சாயா பேசிய வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் என்ன பேசி இருக்கிறார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

நடிகர் சரத்குமார் எல்லோருக்கும் பரிச்சயமாக இருந்தாலும் சரத்குமாருக்கு சாயா என்ற பெண்ணோடு திருமணம் முடிந்து அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் சில வருடங்கள் கழித்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார் சாயாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் சாயா பேசிய வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சாயா பேசுகையில் திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உண்மையில் திருமணம் செய்து கொள்வதற்கு முதலில் நாம் மனதளவில் தான் தயாராக வேண்டும். ஆனால் சில மக்கள் தவறாக காரணங்களுக்காக திருமணத்தை செய்து கொள்கிறார்கள். அதோடு நீங்கள் எதற்காக திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதற்கு சரியான காரணங்கள் இருக்க வேண்டும்.
எமோஷனலாகவும், மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் தேர்ந்த நிலையில் இருக்க வேண்டும்... திருமணம் என்பது ஒருநாள் கூத்து கிடையாது. அதுபோல கல்யாணம் என்பது ஒரு பயணம், பயணத்தில் நீங்கள் சரிவர பயணம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு ஒரு சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஆனால் அதுவெல்லாம் நிஜமான திருமணமே கிடையாது. உடல் தேவை என்பது திருமணத்தில் ஒரு சிறிய பங்கு தான். ஆனால் அதையும் தாண்டி நீங்கள் மனதளவில் திருமணத்திற்கு தயாராக வேண்டும். நீங்கள் திருமணத்தை சரியாக செய்யும்போது அந்த பயணம் பெரிதளவில் இடையூறு இல்லாமல் செல்லும். ஆனால் நீங்கள் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்தால் தான் அது முடிவுக்கு வருவதற்கான அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
அதுபோல மனதளவிலும் உடலளவிலும் சமூக அளவில் நீங்கள் திருமணம் பாதியில் முடிவடைந்தால் பாதிக்கப்படுவீர்கள். அதுபோல அந்த திருமணத்தால் உங்களுக்கு குழந்தைகள் இருப்பின் அந்த நிலைமை இன்னும் மோசமாக மாறும். அதனால் விவாகரத்து முடிவை எடுக்கும் முன்பு நன்றாக யோசிங்கள். அதுபோல பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது மிக மிக முக்கியம். அவர்கள் எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலைகளில் இருந்தாலும் பரவாயில்லை அவர்களோடு பொருளாதார சுதந்திரம் இருக்க வேண்டும்.

அதை எப்போது ஒரு ஆணால் கொடுக்க முடிகிறதோ அப்போது நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அதுபோல நீங்கள் உங்கள் பார்ட்னரிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால் நீங்கள் சந்தோஷமாக வாழ முடியாது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை செய்ய முடியாது என்றால் நீங்கள் தனியாக மகிழ்ச்சியாக வாழ்வதே நல்லது என்று அந்த பேட்டியில் சாயா பேசியிருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக அவர்களுடைய குடும்ப கோவிலுக்கு சென்று குலதெய்வத்தை தரிசித்து இருக்கும் நிலையில் திடீரென்று சாயா கடந்த வருடத்தில் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications